சக்திவேல் முகத்தில் கரியை பூசிய பாண்டியன், குமாரை அறைந்த முத்துவேல் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் பாண்டியன் குடும்பத்தில் எல்லோருமே கோவிலுக்குள் சென்றார்கள். அவர்களை பார்த்து சக்திவேல் முறைத்துக் கொண்டிருந்தார். கோமதி தன்னுடைய அம்மாவிடம் பேச வரும்போது சக்திவேல், காந்திமதியை அழைத்துக் கொண்டு சென்றார். பின் எல்லோருமே சேர்ந்து கோயிலில் சாமி கும்பிட்டார்கள். அப்போது பழனிக்கு சாமி வந்துவிட்டது. பழனி, எல்லோருமே குடும்பமாக ஒன்றாக சேர்ந்து என்னை பார்க்க வந்தது சந்தோஷமாக இருக்கிறது. எனக்கு எந்த குறையும் இல்லை.
இதே மாதிரி வருடம் வருடம் என்னை பார்க்க குடும்பமாக சேர்ந்து வாருங்கள் என்றார். இதை கேட்டு சக்திவேலுக்கு பயங்கர கோபம் வந்து பழனிவேலை திட்டினார். உடனே எல்லோருமே சக்திவேலை தடுத்து நிறுத்தினார்கள். அதற்குப்பின் பிறந்தநாள் விழாவில் சக்திவேல் தன்னுடைய அம்மாவிற்கு 12 பவுனில் தங்கச் செயின் போடுவதாக பெருமையாக பேசி இருந்தார். இது எல்லாம் ஓரமாக நின்று பாண்டியன் குடும்பம் பார்த்துக் கொண்டிருந்தது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
காந்திமதியின் பிறந்த நாளுக்காக கதிர் தன்னுடைய தாத்தாவுடன் இருக்கும் போட்டோவை கொடுத்தார். அதை பார்த்து காந்திமதி ரொம்ப எமோஷனலாக அழுதார். பின் பாண்டியன் குடும்பத்தில் உள்ள எல்லோருமே காந்திமதியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார்கள். இதையெல்லாம் பார்த்து சக்திவேல் பயங்கரமாக கொந்தளித்தார். அதற்குப்பின் காந்திமதி ரெண்டு குடும்பமும் சேர்ந்து நின்று ஒரு போட்டோ எடுக்கணும் என்றார். முத்து, சக்திவேல் ஒத்துக் கொள்ளவே இல்லை. எல்லோரும் ரொம்பவே கெஞ்சி கேட்டு பேசிய பிறகுதான் முத்துவேல் ஒத்துக் கொண்டார்.
சீரியல் ட்ராக்:
பின் முத்துவேல்-பாண்டியன் இரண்டு குடும்பம் சேர்ந்து காந்திமதியுடன் போட்டோ எடுத்துக் கொண்டார்கள். இதை பார்த்து காந்திமதிக்கு சொல்ல வார்த்தைகளே இல்லை. அதற்குப்பின் காந்திமதி தன்னுடைய மகள் மருமகளுடன் சேர்ந்து யாருக்கும் தெரியாமல் தனியாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் கதிர்- ராஜி இருவருமே போட்டோ சூட் செய்து கொண்டிருந்தார்கள். பின் பாண்டியன் தன்னுடைய உறவினர்களுடன் பேசி கொண்டிருந்தார்.
https://www.youtube.com/watch?v=piWHmlPPjPM
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகிருக்கும் ப்ரோமோவில் பாண்டியன் அன்னதானம் ஏற்பாடு செய்திருக்கிறார். அப்போது சக்திவேல், நாங்கள் கறி விருந்து ஏற்பாடு செய்திருக்கிறோம் என்று தங்கள் சொந்தக்காரர்கள் எல்லாம் அழைக்கிறார்கள். ஆனால், அங்கு பாண்டியன் அன்னதானம் சாப்பாடு தான் வந்திருக்கிறது. பின் பாண்டியன், முத்துவேல் வீட்டு சொந்தக்காரர்களை கூட அழைத்து எல்லோருக்குமே சாப்பாடு பரிமாறி சந்தோஷப்படுகிறார். முத்துவேல் வீட்டில் உள்ள எல்லோருமே சந்தோசமாகவும் சாப்பிடுகிறார்கள். இதை பார்த்த முத்துவேல், சக்திவேலுக்கு பயங்கர கோபம் வருகிறது. கோபத்தில் முத்துவேல், குமாரை அடித்து விடுகிறார்.