கதிர் சொன்ன வார்த்தையால் சக்திவேல்-பாண்டியன் இடையே வெடித்த கலவரம் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 19/5/2026

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் தங்கராஜ், வீட்டில் சிரிக்கும் சத்தத்தை கேட்டு உள்ளே வந்தார். அப்போது ஆண்களை விட பெண்கள்தான் சிறந்தவர்கள் என்பது போல கோமதி, மதி இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். இதை கேட்டு தங்கராஜிக்கு கோபம் வருகிறது. பின் தங்கராஜ், நீங்கள் எப்படி ஆண்களை கேவலமாக பேசலாம் என்று வழக்கம்போல தன்னுடைய ஆணாதிக்கத்தை காண்பித்தார். வீட்டில் உள்ள பெண்கள் எதுவும் பேச முடியாமல் அமைதியாக இருந்தார்கள். இதை எல்லாம் பார்த்து கோமதிக்கு கோபம் தான் வருகிறது.

கோமதி, மலர், ராஜி எல்லோருமே சந்தோஷமாக பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது வாக்கிங் போவதை பற்றி கோமதி பேசி இருந்தார். மலரின் மாமியார், என்னால் முடியாது என்றார். பின் மலர், மீனா இருவரும் கிச்சனில் சமைக்க போனார்கள். மதி, மலரின் மாமனார் மாமியார் எல்லோருமே நடக்க சென்றார்கள். அதற்குப்பின் மலர் மாமனார், மாமியார் வந்தவுடன் மலர் சிட்டுக்குருவியாக வேலை செய்து கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் ராஜி, கதிரை நினைத்து ரொம்பவே வருத்தப்பட்டு கொண்டிருந்தார். அதனால் கோமதி, கதிருக்கு போன் செய்து விசாரித்தார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

அப்போது கதிர், எனக்கு ரொம்ப நெருக்கமானவருக்கு உடல்நிலை சரியில்லை. அதனால் தான் சென்னைக்கு ஹாஸ்பிடல் வந்திருக்கிறேன். ஆனால், இதை சொன்னால் ராஜி நேரில் வருகிறேன் என்று சொல்வாள். அதனால் தான் உண்மையை சொல்லவில்லை என்றார். அதற்குப்பின் மலரின் மாமியார் குலதெய்வ கோவிலுக்கு போவதற்காக மதி வீட்டில் சொன்னார். கோமதி, மலரின் அம்மாவையும் கூப்பிடுங்கள் என்று கட்டாயப்படுத்தி போன் பேச வைத்தார். விருப்பம் இல்லாமல் மாமியாரும் மலர் உடைய அம்மாவை அழைத்தார். இதையெல்லாம் பார்த்து மலருக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. பின் கோமதியை கட்டி அணைத்து எமோஷனலாக மலர் நன்றி சொன்னார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் மலர், குடும்பத்தில் எல்லோருமே பொங்கல் வைப்பதற்காக குலதெய்வ கோவிலுக்கு சென்றிருக்கிறார்கள். அங்கு மலரின் அம்மாவை பார்த்தவுடன் யாருமே கண்டு கொள்ளவில்லை.
கோமதி மட்டும் அன்பு அக்கறையோடு விசாரிக்கிறார். தங்கராஜ் வந்தவுடன் மலர் குடும்பத்தில் எல்லோருமே விழுந்து விழுந்து கவனிக்கிறார்கள். இதை பார்த்து கோமதிக்கு கடுப்பாகிறது. பின் எல்லோருமே சந்தோஷமாக பொங்கல் வைத்துவிட்டு கதை பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதற்குப்பின் ஹாஸ்பிடலில் முத்துவேலை டிஸ்சார்ஜ் செய்து விடுகிறார்கள். கதிர்- முத்துவேல் இருவரும் கிளம்பி
கிளம்பி விடுகிறார்கள்.

சீரியல் ட்ராக்:

இன்னொரு பக்கம் முத்துவேல் போன் சுவிட்ச் ஆப்பில் இருப்பதால் சக்திவேல் பதறுகிறார். பின் கதிர்- முத்துவேல் இருவரும் ஒன்றாக போன விஷயத்தை தன்னுடைய வீட்டில் சொல்லி சண்டை போடுகிறார் சக்திவேல். ஒரு கட்டத்தில் சக்திவேல், பாண்டியன் இடம் தன் அண்ணனை கேட்டு
கொந்தளிக்கிறார். கதிருக்கு போன் செய்து பாண்டியன் விசாரிக்கிறார். அப்போது கதிர், தன்னுடன் தான் முத்துவேல் இருக்கும் விஷயத்தை சொல்கிறார். இதனால் சக்திவேல்- பாண்டியன் இடையே சண்டை வருகிறது. பின் மாரி, சக்திவேலை அங்கிருந்து அழைத்து செல்கிறார்

Tamil Behind Talkies AMP · Quick view
View full