காந்திமதியை வெளுத்து வாங்கும் சக்திவேல், தங்கமயில் கர்ப்பமா? விறுவிறுப்பில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 27/2/2026

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் மீனா, ஏதோ சொல்லி சமாளித்து விட்டார். பின் அஞ்சலி, சரவணனுக்கு ஃபோன் செய்து கோயிலுக்கு வர சொன்னார். பின் அஞ்சலி-சரவணன் இருவரும் மீனா- தங்கமயில் இருக்கும் கோவிலுக்கு வந்து விட்டார்கள். அஞ்சலி-சரவணன் இருவரும் ஒன்றாக இருப்பதை பார்த்து மீனா ஷாக் ஆனார். தங்கமயில், அவர்களை பார்க்கக்கூடாது என்பதற்காக ஏதேதோ காரணம் சொல்லி கோவிலை விட்டு மீனா அழைத்து சென்றார்.

பாண்டியன் வீட்டிற்கு வந்த பழனி, குமாருக்கு பெண் பார்த்து இருந்தார். குமாருக்கு திருமண ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்கள் என்றார். இதை கேட்டு ராஜி சந்தோஷப்பட்டார். ஆனால், பாண்டியன் அது பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. கோமதி, அவர்கள் வீட்டில் எந்த விசேஷம் நடந்தாலும் எனக்கு கவலை இல்லை என்று சொல்லி விட்டார். இன்னொரு பக்கம் முத்துவேல் வீட்டில் நிச்சயதார்த்தத்திற்கான ஏற்பாடுகள் நடக்கிறது. வீட்டில் எல்லோருமே சந்தோசமாக இருந்தார்கள். அப்போது வந்த பெண் வீட்டார் குமாருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டதா? என்று குமார்- அரசி விஷயத்தை பற்றி கேட்டார்கள்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

சக்திவேல் அப்படியெல்லாம் இல்லை என்று எடுத்து சொல்லி புரிய வைத்தார். இருந்தாலும் பெண் வீட்டார் கேட்கவில்லை. கடைசியில் இந்த திருமணம் வேண்டாம் என்று சொல்லி விட்டார்கள். குமார் உள்ளுக்குள் சந்தோஷப்பட்டார். அதற்குப்பின் மீனா, சரவணன் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது அஞ்சலி பற்றி மீனா விசாரித்தார். அதற்கு சரவணன், அவர் என்னுடைய தோழி. என் கஷ்டத்தை எல்லாம் சொல்ல ஆள் தேவை இல்லையா? அப்படி ஏதாவது என் வாழ்க்கையைப் பற்றி நான் யோசிக்க நினைத்தாலும் தவறு கிடையாது. மயில் செய்த தப்புக்கு முன்னாடி இதெல்லாம் ஒன்றும் இல்லை என்றார். இதனால் மீனா ஷாக்கில் இருந்தார்

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கோமதி, தன்னுடைய உதவி இல்லாமல் பாண்டியன் பட்ட கஷ்டத்தை எல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறார். மீனா, இப்படியே செய்யுங்கள் அப்போதுதான் மாமா உங்கள் அன்பை புரிந்து கொள்வார் என்று சொல்கிறார். இன்னொரு பக்கம் தங்கமயில், வயதானவருக்கு தேவையான எல்லா வேலையும் செய்து கொண்டிருக்கிறார். அப்போது தங்கமயில், சரவணனுக்கு ஃபோன் செய்கிறார். சரவணன் கோபத்தில் தங்க மயிலை திட்டி விட்டு போனை வைத்து விடுகிறார். பின் தங்கமயிலுக்கு வாந்தி மயக்கமாக இருக்கிறது. அப்போது அந்த வயதான அம்மா, கர்ப்பமாக இருக்கிறாயா? என்று கேட்கிறார்.

சீரியல் ட்ராக்:

தங்க மயிலுக்கே ஒன்றும் புரியவில்லை. இன்னொரு பக்கம் சக்திவேல், திருமணத்தை நிறுத்த சொன்னது யார்? என்ற காரணத்தை கேட்கிறார். அவர் முதலில் தயங்கினாலும் சக்திவேல் கொஞ்சம் ஓவராக பேசுகிறார். இதனால் கோபப்பட்ட பெண் வீட்டார், உன்னுடைய அம்மா தான் திருமணத்தை நிறுத்த சொன்னார் என்கிறார். பின் வீட்டிற்கு வந்த சக்திவேல், ருத்ர தாண்டவம் ஆடுகிறார். திருமணத்தை எதற்காக நிறுத்த சொன்னீர்கள் என்றெல்லாம் காந்திமதியிடம் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார். இதைக் கேட்டு வீட்டில் உள்ள எல்லோருமே ஷாக் ஆகிறார்கள். இத்துடன் செய்திகள் ஓடுகிறது

behindtalkies AMP · Quick view
View full