தங்கமயிலின் முகத்திரையை கிழித்த சரவணன், பாண்டியன் எடுக்க போகும் முடிவு என்ன? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 30/11/2025

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் செந்தில், மீனாவை சமாதானம் செய்து ஹோட்டலில் சாப்பாடு வாங்கிக் கொள்ளலாம் என்றார். இன்னொரு பக்கம் தங்கமயில், சரவணன் தன் மீது பாசம் இல்லாமல் கோபத்தை காண்பிக்கிறார் என்றார். உடனே சரவணன், உண்மையை சொல்ல வரும்போது கோமதி, தங்கமயில் இடம் அன்பாக இரு என்று தன் மகனை தான் திட்டினார். இன்னொரு பக்கம் ஒரு பெண், வண்டி வாடகைக்கு வேண்டும். அதுவும் கதிர் தான் ஓட்ட வேண்டும் என்று சொல்வதால் ராஜிக்கு பயங்கர கடுப்பானது.

பின் இதைப்பற்றி ராஜி, கதிரிடம் விசாரித்தார். அப்போது கதிர், அவருடைய தாத்தா வயதானவர். நான் வண்டி ஓட்டினால் தான் அவர் பாதுகாப்பாக இருப்பதாக நினைக்கிறார் என்றவுடன் ராஜி அமைதியாகி விட்டார். அதற்குப்பின் சரவணன் கடையில் மும்முரமாக வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது பாண்டியனுக்கு போன் செய்த தங்கமயில், அவர் போனை எடுக்கவில்லை. என்னிடம் ரொம்ப கோபமாக இருக்கிறார் என்று ஒன்றுக்கு இரண்டாக மீண்டும் தங்கமயில் ஏற்றி வந்தார். இதனால் கோபப்பட்ட பாண்டியன், உண்மை தெரியாமல் சரவணனை திட்டிக் கொண்டிருந்தார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

தங்கமயில் செய்த வேலையால் கொந்தளித்து வீட்டுக்கு வந்த சரவணன், எதற்காக இவ்வளவு நாடகம் ஆடுகிறாய். உன்னை பார்த்தாலே பிடிக்கவில்லை. ஒழுங்கு மரியாதையாக வீட்டில் எல்லா உண்மையும் சொல்லிவிடு. இவ்வளவு நாடகம் ஆடுவாயா? உன் கையில் பச்ச தண்ணி வாங்கி குடிப்பது கூட பாவம் என்றெல்லாம் திட்டிக் கொண்டிருந்தார். உடனே அந்த பக்கம் வந்த கோமதி கதவை தட்டினார். இதுதான் சந்தர்ப்பம் என்று தங்கமயில், வெளியே வந்து மீண்டும் என்னை திட்டுகிறார். வீட்டை விட்டு போக சொல்கிறார் என்று அழுது டிராமா பண்ணுகிறார்.

சீரியல் ட்ராக்:

சரவணன் உண்மையை சொல்ல பார்த்தார். ஆனால், கோமதி சொல்லவிடாமல் தடுத்து நிறுத்தி சரவணனை திட்டி விட்டு சென்றார். இன்னொரு பக்கம் மீனாவை பார்க்க அவருடைய அப்பா, அம்மா இருவரும் வந்திருந்தார்கள். அப்போது மீனா, வீட்டில் சமைக்காத இருப்பதை தெரிந்த அவருடைய அம்மா, எப்படி செய்யனும், என்னென்ன பண்ணனும் எல்லாம் சொன்னார். ஆனால், மீனா அதை பெரிதாக கண்டு கொள்ளவே இல்லை. அதற்குப்பின் கோமதி, சரவணன்-தங்கமயில் சண்டை போட்டதை பற்றி பாண்டியனிடம் சொன்னார். பாண்டியன், அவர்களுக்குள் என்ன பிரச்சனை என்பதை கண்டுபிடிக்கணும். சீக்கிரமாகவே இந்த பிரச்சனைக்கு முடிவு கட்டுகிறேன் என்றார்.

https://www.youtube.com/watch?v=Y1yj6yv-HvA

சீரியல் ப்ரோமோ:

இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் புரோமோவில் பாண்டியன், கதவுக்குள் நடந்த இவர்கள் சண்டை வீட்டு தெரு வரையும் வந்துவிட்டது என்று சொல்கிறார். கோபத்தில் கொந்தளித்த சரவணன், உங்களுக்கு எதுவுமே தெரியாது என்கிறார். உடனே தங்கமயில், உண்மையை தடுக்க பார்க்கிறார். பின் சரவணன் கையில் இருந்த பொருளை தூக்கி எறிந்து, இவள் நம்மிடம் சொன்னது எல்லாமே பொய். இவள் 12-வது வரை தான் படித்திருக்கிறார். இவள் என்னை விட ரெண்டு வயது பெரியவள் என்று சொன்னதைக் கேட்டு கோமதி மயங்கி விழுகிறார். பாண்டியன் அதிர்ச்சியாக நிற்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full