தங்கமயிலின் பித்தலாட்ட வேலையை போட்டுடைத்த சரவணன், அதிர்ச்சியில் உறைந்த குடும்பம் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 6/12/2025

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் பாண்டியன், வீட்டில் நடந்த சண்டை பத்தவில்லை என்று தெருமுனையில் நின்று இருவரும் சண்டை போட்டுக் கொண்டார்கள். என்னதான் நடக்கிறது என்று புரியவில்லை என்றார் உடனே கோமதி, என்ன தான் உங்களுக்குள் பிரச்சனை? எதற்காக தங்கமயிலை திட்டி கஷ்டப்படுத்துகிறாய் என்றெல்லாம் கேட்டார். அதற்கு சரவணன், நான் பார்த்துக்கொள்கிறேன் என்று வழக்கம்போல் தன் அம்மாவை சமாதானம் செய்தார். பின் தங்கமயிலை சாப்பிட கோமதி அழைத்து வந்தார். சரவணன் கோபத்தில் முறைத்துக் கொண்டிருந்தார்.

வீட்டில் எல்லோருமே உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். தங்கமயில் மட்டும் பயத்தில் சாப்பிடவே இல்லை. அதற்குப்பின் கோமதி, தங்கமயிலை அழைத்து வந்து சரவணனிடம் பிரச்சனையை பற்றி விசாரித்தார். சரவணன் எதுவும் சொல்லாமல் அமைதியாகவே இருந்தார். கோபத்தில் பாண்டியன், சரவணனை திட்டிக் கொண்டிருந்தார். பின் சரவணன், உண்மையை சொல்ல வந்து விடுவாரோ? என்ற பயத்தில் தங்கமயில் ஏதேதோ கதைகளை சொல்லி எல்லோரையும் நம்ப வைக்க பார்த்தார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

கோபத்தின் உச்சத்திற்கு சென்ற சரவணன் வீட்டில் உள்ள பொருட்களை எடுத்து உடைத்தார். பின் எல்லோரும் சரவணனை சமாதானம் செய்தார். பின் சரவணன், அவளை பற்றி உண்மையை சொன்னால் நீங்கள் தாங்க மாட்டீர்கள் என்று கொந்தளித்தார். சரவணன், தன்னுடைய அப்பாவை கட்டிப்பிடித்து ரொம்ப எமோஷனலாக அழுதார். இது எல்லாம் பார்த்து வீட்டில் உள்ள எல்லோருமே தவித்தார்கள்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சரவணன், இவள் டிகிரி எல்லாம் படிக்கவில்லை. வெறும் 12வது தான் படித்திருக்கிறார். இவள் மட்டுமில்லை இவருடைய மொத்த குடும்பமே நம்மை பொய் சொல்லி ஏமாற்றி
இருக்கிறார்கள். இவர் படிக்காததனால் தான் டீச்சர் வேலை வேண்டாம் என்று சொல்லி பொய் சொல்லி ஹோட்டலில் சப்ளையர் வேலை செய்யப் போனார். இப்படி இவள் வாயை திறந்து சொன்னது எல்லாமே பொய் தான் என்று சொல்கிறார். இதை எல்லாம் கேட்டு கோமதிக்கு தலைமேல் இடி விழுந்தது போல இருக்கிறது.

சீரியல் ட்ராக்:

கோமதி அதிர்ச்சியில் மயங்கி கீழே விழுகிறார். உடனே சரவணன், இதற்கே விழுந்துட்டால் என்னம்மா, இவளைப் பற்றி இன்னும் எவ்வளவோ விஷயம் இருக்கிறது. இவள் என்னை விட இரண்டு வயது பெரியவள் என்றெல்லாம் சொல்கிறார். இதைக் கேட்டு மொத்த குடும்பமும் மகிழ்ச்சியில் இருக்கிறது. பாண்டியனுக்கு கோபமும் அதிகமாகிறது. தங்க மயிலால் எதுவுமே பேச முடியவில்லை. அழுது கொண்டே இருக்கிறார். சரவணன் தன் மனதில் இருந்த பாரத்தை எல்லாம் தன் அப்பா அம்மாவிடம் சொல்லி ரொம்ப எமோஷனலாக கதறி அழுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது

behindtalkies AMP · Quick view
View full