ஆதார் கார்டை கேட்கும் சரவணன், பயத்தில் திக்குமுக்காடும் தங்கமயில் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 11/11/2025

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் பாண்டியன்- முத்துவேல் இரண்டு வீட்டிலுமே தீபாவளி பண்டிகையை கொண்டாடினார்கள். அப்போது குமார், சரவணன் தன்னை அடித்ததால் அவர் மீது பட்டாசை போட்டார். இதனால் கோபப்பட்டு பாண்டியன் மகன்கள் குமாரிடம் சண்டைக்கு போனார்கள். பின் சக்திவேல்- முத்துவேல் இருவருமே சண்டைக்குப் போனார்கள். பின் இரு குடும்பத்திற்கும் இடையே கலவரம் வெடித்தது. ஒரு வழியாக காந்திமதி பஞ்சாயத்து பண்ணி அனுப்பி வைத்தார்.

செந்தில், சரவணன், கதிர், பழனி நான்கு பேருமே தீபாவளி பண்டிகை பற்றி நினைத்து பேசிக் கொண்டிருந்தார்கள். இன்னொரு பக்கம் பாண்டியன் வீட்டு பெண்கள் எல்லோருமே தீபாவளி பண்டிகைக்கு பலகாரம் செய்து ஜாலியாக பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது தங்கமயில், தன்னை அறியாமலேயே 2010ல் நான் பத்தாம் வகுப்பு படித்தேன் என்று உளறி விட்டார். இதை கேட்ட மீனா, அப்போது உங்களுக்கு 30 வயது ஆகிவிட்டதா? என்றார். கோமதி, சரவணனை விட நீ பெரியவளா? என்று கேட்பதால் தங்கமயில் பதறிப் போய் சமாளித்தார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

பின் வீட்டில் உள்ள பெண்கள் எல்லோருமே மாற்றி மாற்றி கேள்வி கேட்க, ஏதேதோ பதில் சொல்லி சமாளித்தார் தங்கமயில். இதையெல்லாம் கேட்ட சரவணனனுக்கு தங்கமயில் மீது சந்தேகம் வந்தது. பின் சமாளித்துவிட்டு தங்கமயில் அங்கிருந்து சென்று விட்டார். அதற்குப்பின் காலையில் சீக்கிரமாகவே கோமதி, தீபாவளி பண்டிகை என்பதால் எல்லோரையும் எழுப்பினார். எல்லோருமே குளித்துவிட்டு தீபாவளி பண்டிகைக்கு புது ஆடை அணிந்து சந்தோசமாக தயாராகினார்கள்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் தீபாவளி பண்டிகை என்பதால் பாண்டியன் வீட்டில் கறி விருந்து எல்லாம் ஏற்பாடு செய்து எல்லோருமே தடபுடலாக சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதற்குப்பின் பட்டாசு வெடித்து சந்தோசமாக எல்லோரும் கொண்டாடுகிறார்கள். இன்னொரு பக்கம் சரவணன், வயசை பற்றி கேட்கிறார். பயந்து போய் தங்கமயில் ஏதேதோ சொல்கிறார். இருந்தாலுமே சரவணன் கேட்காமல் தங்கமயிலிடம் ஆதார் கார்டு கேட்கிறார். ஆனால், தங்கமயில் சமாளித்து விட்டு அங்கிருந்து சென்று விடுகிறார்.

சீரியல் ட்ராக்:

பின் அடுத்து என்ன நடக்குமோ? என்று பயத்திலேயே தங்கமயில் புலம்பி கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் விருந்துக்கு சுகன்யா, பழனி இருவருமேமாமியார் வீட்டிற்கு செல்வதாக இருந்தார்கள். அதற்குள் பாண்டியன், பழனியை அழைத்து ஒரு இடத்திற்கு சென்று பணத்தை வாங்கி வர சொல்கிறார். இதை கேட்டு சுகன்யாவுக்கு பயங்கர கோபம் வருகிறது. பழனியும் எதுவும் சொல்லாமலே பணத்தை வாங்க சென்று விடுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது

Tamil Behind Talkies AMP · Quick view
View full