தங்கமயிலின் நாடகத்தால் ருத்ரதாண்டவம் ஆடும் சரவணன், அதிர்ச்சியில் பாண்டியன் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் தங்கமயில், சரவணன் இடையே சண்டை வந்தது. ஒரு கட்டத்தில் சரவணன், தங்கமயிலை அவருடைய அம்மா வீட்டிற்கு போக சொன்னார். அப்போது வந்த பாண்டியன், என்ன பிரச்சனை? என்ன நடக்கிறது? என்று விசாரித்தார். சரவணன் உண்மையை சொல்ல வந்தார். உடனே தங்கமயில், என்னுடைய அப்பாவை அவமானப்படுத்தி அனுப்பி விட்டார் என்று ஏதேதோ காரணங்களை சொல்லி பிரச்சினையை மாற்றி விட்டார். இதனால் கோபத்தில் பாண்டியன், சரவணனை திட்டினார்.
சுகன்யா, பாண்டியன் கடைக்கு பொருட்களை வாங்க போகும் நபர்களையெல்லாம் அழைத்து குறைந்த விலையில் பொருட்கள் தருவதாக சொல்லி தன் கடையில் வியாபாரம் செய்தார். இதையெல்லாம் பார்த்து பழனிக்கு கோபம் வருகிறது. பின் சுகன்யா, குமார் இருவரையும் திட்டினார். இருந்தாலுமே அவர்கள் கேட்கவில்லை. பாண்டியன் வியாபாரத்தை கெடுக்கவே தேவையில்லாத சதி வேலைகளை செய்தார்கள். இன்னொரு பக்கம் சரவணன் தன் அப்பாவை எதிர்த்து பேசியதால் மன்னிப்பு கேட்டார். பாண்டியன், உன் விருப்பப்படி நடந்து கொள். என்னிடம் கேட்காதே என்று கோபப்பட்டு அங்கிருந்து சென்றார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
பின் வீட்டிற்கு வந்த பாண்டியன், வீட்டில் நடந்த சண்டை பத்தவில்லை என்று தெருமுனையில் நின்று இருவரும் சண்டை போட்டுக் கொண்டார்கள். என்னதான் நடக்கிறது என்று புரியவில்லை என்றார் உடனே கோமதி, என்ன தான் உங்களுக்குள் பிரச்சனை? எதற்காக தங்கமயிலை திட்டி கஷ்டப்படுத்துகிறாய் என்றெல்லாம் கேட்டார். அதற்கு சரவணன், நான் பார்த்துக்கொள்கிறேன் என்று வழக்கம்போல் தன் அம்மாவை சமாதானம் செய்தார். பின் தங்கமயிலை சாப்பிட கோமதி அழைத்து வந்தார். சரவணன் கோபத்தில் முறைத்துக் கொண்டிருந்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் வீட்டில் எல்லோருமே உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். தங்கமயில் மட்டும் பயத்தில் சாப்பிடவே இல்லை. அதற்குப்பின் கோமதி, தங்கமயிலை அழைத்து வந்து சரவணனிடம் பிரச்சனையை பற்றி விசாரிக்கிறார். சரவணன் எதுவும் சொல்லாமல் அமைதியாகவே இருக்கிறார். கோபத்தில் பாண்டியன், சரவணனை திட்டிக் கொண்டிருக்கிறார். பின் சரவணன், உண்மையை சொல்ல வந்து விடுவாரோ? என்ற பயத்தில் தங்கமயில் ஏதேதோ கதைகளை சொல்லி எல்லோரையும் நம்ப வைக்க பார்க்கிறார்.
சீரியல் ட்ராக்:
கோபத்தின் உச்சத்திற்கு சென்ற சரவணன் வீட்டில் உள்ள பொருட்களை எடுத்து உடைக்கிறார். பின் எல்லோரும் சரவணனை சமாதானம் செய்கிறார். பின் சரவணன், அவளை பற்றி உண்மையை சொன்னால் நீங்கள் தாங்க மாட்டீர்கள் என்று கொந்தளிக்கிறார். சரவணன், தன்னுடைய அப்பாவை கட்டிப்பிடித்து ரொம்ப எமோஷனலாக அழுகிறார். இது எல்லாம் பார்த்து வீட்டில் உள்ள எல்லோருமே தவிக்கிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது