அஞ்சலிக்கு சரவணன் செய்து கொடுத்த சத்தியம், மயில் சொன்ன வார்த்தை - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் சக்திவேல், துருவி துருவி கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் சக்திவேல், நான் நடந்து வந்து கொண்டிருக்கும்போது எனக்கு உடல்நிலை முடியாமல் போனது. கதிர் தான் என்னை அழைத்து வந்தால் அவ்வளவு தான் நடந்தது என்றார். வீட்டில் உள்ள எல்லாருமே பார்த்திருந்தார்கள். ஆனால், சக்திவேலுக்கு அதில் நம்பிக்கையே இல்லை. முத்துவேல் மீது இன்னும் சந்தேகப்பட்டார். பின் இதைப்பற்றி சுகன்யா, சக்திவேல் இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். இன்னொரு பக்கம் செந்தில், சரவணன் இன்னொரு பெண்ணுடன் பேசுகிறாரா? என்றார். மீனா, உண்மை தான் என்றார்.
கதிர், பழனி இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது பழனி, முத்துவேல் விஷயத்தை பற்றி விசாரித்தார். கதிரும் ஏதேதோ சொல்லி சமாளித்தார். பின் சரவணன் இடம் கோமதி, அஞ்சலி விஷயத்தைப் பற்றி விசாரித்தார். சரவணன், அதெல்லாம் ஒன்றும் இல்லை. நட்பாக தான் பழகறோம் என்று சொல்லி சமாளித்தார். இருந்தாலுமே கோமதி, பாண்டியன் இருவருமே சரவணனுக்கு திட்டி அறிவுரை சொன்னார்கள். அந்த சமயம் பார்த்து அஞ்சலி போன் செய்ததால் சரவணன் வெளியே வந்து விட்டார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
சரவணன், வீட்டில் நடந்த எல்லா விஷயத்தையும் சொன்னார். அஞ்சலிக்கு ஒன்றுமே புரியவில்லை.
சரவணன், என்ன நடந்தாலும் நான் உன்னை கைவிடமாட்டேன். நம்பிக்கையோடு இரு என்றெல்லாம் வாக்குறுதி கொடுத்துக் கொண்டிருந்தார். இதையெல்லாம் கவனித்த ராஜிக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. பின் இதைப்பற்றி ராஜி, கதிரிடம் சொன்னார். பின் கதிர், யாரிடம் பேசிக் கொண்டிருக்கிறாய்? என்று விசாரித்தார். சரவணன், அஞ்சலிடம் தான் என்றார். கதிர், நீங்கள் இன்னும் அவர்களுடன் பேசிக்கொண்டு தான் இருக்கிறீர்களா? என்றார். பின் சரவணன், அஞ்சலியின் வாழ்க்கையில் நடந்ததை எல்லாம் சொன்னார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் பாண்டியன், தங்கமயிலின் வீட்டிற்கு சென்று பேச வேண்டும் என்று சொல்கிறார். கோமதியும் சரி என்கிறார். பின் இதைப்பற்றி ராஜி, மீனாவுக்கு போன் செய்து சொல்கிறார். உடனே தங்கமயிலுக்கு, போன் செய்த மீனா வீட்டில் நடந்ததை எல்லாம் சொல்லி தாங்கள் பார்க்க வரும் விஷயத்தையும் சொல்கிறார். தங்க மயிலுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. பின் தங்கமயில் தன்னுடைய அப்பா, அம்மாவிடம் இதைப் பற்றி சொல்கிறார். பாக்கியம், வரட்டும் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்கிறார்.
சீரியல் டிராக்:
உடனே தங்கமயில், எந்த பிரச்சினையும் வேண்டாம். தயவு செய்து அமைதியாக இருங்கள் என்று சொல்கிறார். இன்னொரு பக்கம் கோவிலில் சரவணன், தங்கமயில் கர்ப்பம் விஷயத்தைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறார். அஞ்சலி, ரொம்பவே வருத்தமாக என்னை விட்டு மீண்டும் பிரிந்து விடுவீர்களா என்று கேட்கிறார். சரவணன், அஞ்சலியின் கையை பிடித்து நான் உன்னை தான் திருமணம் செய்து கொள்வேன். யார் பேச்சையும் நான் கேட்க மாட்டேன் என்று வாக்குறுதி சொல்கிறார்.