தங்கமயிலுக்காக தன் மகனையே எதிர்த்து நிற்கும் கோமதி, மீனா கொடுத்த பதிலடி - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
கோமதி-சரவணன் சண்டை
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் அஞ்சலி சொன்ன வார்த்தையால் சரவணன் ரொம்பவே கஷ்டத்தில் இருந்தார். அதற்குப்பின் முத்துவேலை வீட்டிற்கு அழைத்து வந்து விட்டார்கள். குமார், முத்துவேல் காலில் விழுந்து அழுது மன்னிப்பு கேட்டார். பழனி, காந்திமதி எல்லோருமே குமாரை திட்டிக் கொண்டிருந்தார்கள். முத்துவேல், குமாரை மன்னிக்காமல் அங்கிருந்து உதாசனைப் படுத்தி சென்றார். அதற்குப்பின் துக்கம் தாங்க முடியாமல் சரவணன் நிறைய குடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். இதை அறிந்த கோமதி சண்டை போட்டார். பாண்டியனும் கோபப்பட்டு திட்டிக் கொண்டிருந்தார். ஆனால், சரவணன் எதுவுமே கண்டுகொள்ளாமல் ரூமுக்குள் சென்று விட்டார்.
கதிர்- ராஜி இருவரும் வாக்கிங் சென்று கொண்டிருந்தார்கள். அந்த பக்கம் வந்த குமார் கதிரை பார்த்து சண்டை வாங்கினார். கோபத்தில் ராஜி, குமாரிடம் சண்டைக்கு போனார்.உடனே கதிர், ராஜியை சமாதானம் செய்து அங்கிருந்து அழைத்து வந்தார். அதற்குப்பின் தங்கமயில் செக்கப்பிற்காக ஹாஸ்பிடலுக்கு போனார். தங்க மயிலை செக் பண்ணுகிறார்கள். அப்போது நர்ஸ், உன்னுடன் யாரும் வரவில்லையா? என்றார். உடனே கோமதி, நான் இருக்கிறேன் என்றார். கோமதியை பார்த்தவுடன் தங்கமயில் ரொம்பவே சந்தோஷப்பட்டார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
அதற்குப்பின் டாக்டர் தங்கமயிலை செக் பண்ணுகிறார். கோமதி, குழந்தையை பற்றியும் தங்கமயில் பற்றியும் நலம் விசாரித்தார். தங்கமயிலுக்கு ரொம்பவே சந்தோஷமாக இருக்கிறது. பின் இதை பற்றி எல்லாம் தங்கமயில் மீனாவிடம் போன் செய்து சொன்னார். அதன் பின் செந்திலுக்கு போன் செய்த மீனா, கோமதி ஹாஸ்பிடலுக்கு சென்ற விஷயத்தை எல்லாம் சொல்லி பெருமைப்பட்டார். செந்திலும் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்று எபிசோட்டில் பாண்டியன் கடைக்கு வந்த செந்தில், கோமதி- தங்கமயில் உடன் ஹாஸ்பிடலுக்கு சென்றிருந்த விஷயத்தை சொல்கிறார். இதனால் சரவணன் கோபப்படுகிறார். ஆனால், பாண்டியன் எதுவும் சொல்லவில்லை. அதற்குப்பின் வீட்டிற்கு வந்த சரவணன், எதற்காக ஹாஸ்பிடலுக்கு போனீர்கள்? ஏன் அவளிடம் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்? என்று கேட்கிறார். கோமதி, வாழ்க்கை என்றால் பிரச்சனை வரத்தான் செய்யும். அதை எல்லாம் கடந்து வருவது தான் வாழ்க்கை. குழந்தை பிறக்கும் வரை தங்கமயிலுக்கு எதுவென்றாலும் நான் இருப்பேன். அவளுக்கு துணையாக இருப்பேன் என்று பேசுகிறார். இதனால் சரவணனால் எதுவுமே பேச முடியவில்லை.
சீரியல் ட்ராக்:
அதற்குப்பின் மீனாவை சந்தித்த சரவணன், இனிமேல் தங்க மயிலிடம் நீ பேசாதே. அதேபோல் தங்க மயிலை பற்றி அம்மாவிடமும் எதுவும் சொல்லாதே என்கிறார். மீனா, அந்த வீட்டில் அவர்கள் கொஞ்ச நாட்கள் இருந்தாலும் என்னுடைய அக்காவாகத்தான் அவர்களை பார்த்தேன். இப்போது அவர்களுக்கு ஒரு கஷ்டம் என்று வந்தால் என்னால் தனித்து விட முடியவில்லை. அவர்களுடன் சேர்ந்து வாழலாமா? இல்லையா? என்று முடிவெடுப்பது உங்களுடைய விருப்பம். ஆனால், நான் தங்கமயில் உடன் பேசிக்கொண்டு தான் இருப்பேன்.
அவர்கள் மாசமாக இருப்பதால் அவர்களுக்கு தேவையான உதவிகளையும் செய்வேன் என்று பதிலடி கொடுத்துவிட்டு செல்கிறார்.