கதிர் செய்த வேலையால் பயப்படும் செந்தில், வாக்குவாதத்தில் சரவணன் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 12/8/2024

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” சீரியலில் பாண்டியன், தன் மூத்த மகன் சரவணனுக்கு எப்படியோ போராடி தங்கமயிலை திருமணம் செய்து வைத்து விடுகிறார். தங்கமயில், வீட்டுக்கு வந்ததிலிருந்து பாண்டியன் வீட்டில் கலாட்டா கலவரங்களாக இருக்கிறது. பாண்டியன், மூணு ஜோடியையும் ஹனிமூன் போக சொல்ல இருந்தார். ஆனால், மீனா- ராஜு இருவரும், நாங்கள் ஹனிமூனுக்கு போகவில்லை என்று சொன்னதும் பாண்டியன் கோபப்பட்டு கத்தி இருந்தார்.

பின் ஹனிமூன் செல்வதற்கான ஏற்பாடுகளை பாண்டியன் செய்தார். அப்போது, 5000 தான் ஆகும் என்று ஆன்லைன் மூலம் தங்கமயில் ரூம் புக் செய்து இருந்தார். ஆனால், வீட்டில் எல்லோருக்கும் சந்தேகம் வந்தது. அந்த சமயம் பார்த்து, அட்வான்ஸ் தொகை தான் 5000, மீதி 21000 கட்ட வேண்டும் என்று மெசேஜ் வந்ததை பார்த்து அதிர்ச்சியான தங்கமயில், தன்னுடைய அம்மாவிடம் போன் செய்து நடந்ததை சொல்ல, அவர் சென்னைக்கு போன பிறகு சொல் என்கிறார். பின் பாண்டியன் வீட்டில் செய்தித்தாள் போடுவது குறித்த பிரச்சனையில் பாண்டியன்-மீனா-செந்தில் இடையே வாக்குவாதம் வந்தது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

அதன் பின் செந்தில், மீனா அப்பா, அம்மாவை பார்த்து சண்டை போட, அதற்கு அவர்களும் கோபமாக பேசி இருந்தார்கள். இறுதியில் மீனா அப்பாவிடம் செந்தில் சவால் விட்டார். இதை கதிர், போனில் ரெக்கார்டு செய்து மீனாவிடம் காண்பிக்க அதை பார்த்தவுடன் ஆனந்தத்தில் மீனா அழுதார். கடந்த வாரம் எபிசோடில் தங்கமயில்-சரவணன் ஹனிமூன் சென்று இருந்தார்கள். ஓட்டலுக்கு சென்ற பின் தான் சரவணனுக்கு, ரூம் மொத்த செலவு 26000 என்று தெரிந்தது. அதிர்ச்சியான சரவணன், தங்கமயில் இடம் கேட்க அவர் வழக்கம்போல் அழ ஆரம்பித்து இருந்தார்.

சீரியல் கதை:

பின் பணத்தை திருப்பி சரவணன் கேட்க அவர்கள் கொடுக்க முடியாது என்று மறுத்து விட்டார்கள். மேலும், சரவணன், நடந்ததை கதிரிடம் சொல்ல, அவர் எப்படியாவது பணத்தை ரெடி பண்ண வேண்டும் என்று முயற்சி செய்து இருந்தார். இந்த விஷயம் செந்திலுக்கு தெரிய வந்து மீனாவிடம் பணம் கேட்க, அவர் உண்மை தெரிந்து கொடுக்க முடியாது என்று சொல்லி விட்டார். என்ன செய்வது என்று புரியாமல் கதிர்- சரவணன்- சித்தப்பு மூவருமே வருத்தப்பட்டு பேசிக்கொண்டிருந்தார்கள். பின் கதிர், பாண்டியனுக்கு தெரியாமல் அவர் மொபைல் போனில் இருந்து பணத்தை எடுத்து விட்டார்.

நேற்று எபிசோட்:

அதோடு கல்லாவில் இருந்தும் ₹1000 எடுத்து விட்டு, செந்தில் இடம் எப்படியாவது சமாளியுங்கள் என்று கதிர் சென்று விடுகிறார். இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில், கதிர் எப்படியோ பணத்தை அனுப்பி விடுகிறார். இருந்தாலும், சரவணன் நடந்ததை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம், கதிர் பாண்டியனுக்கு தெரியாமல் பணம் எடுத்ததை நினைத்து செந்தில், சித்தப்பா இருவருமே புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இன்று எபிசோட்:

மேலும் , பணம் வந்தவுடன் ஹோட்டலில் கட்டிவிட்டு சரவணன், தங்கமயில் ரூம்க்கு செல்கிறார்கள். இருந்தாலுமே, சரவணன் பணத்தை எப்படி ரெடி பண்ணார்கள் என்ற வருத்தத்தில் கதிர், செந்திலுக்கு போன் பண்ணி கேட்கிறார். ஆனால், அவர்கள் இருவருமே பணத்தை பற்றி எதுவும் சொல்லவில்லை. இன்னொரு பக்கம் தங்கமயில் தன்னுடைய அம்மாவிடம் ஹோட்டலுக்கு சென்றதை குறித்து சொல்லிக் கொண்டிருக்கிறார். அதற்குப் பின் தங்கமயில்- சரவணன் இடையே சின்ன வாக்குவாதம் வருகிறது. இத்துடன் சீரியல் முடிகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full