கோமதியை எதிர்த்து பேசும் சரவணன், பாண்டியன் என்ன செய்ய போகிறார்? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

சரவணனுக்கு கோமதி சொன்ன அறிவுரை

By subhashini · 6/6/2026

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் சரவணனை பார்த்து மயில் எதுவும் பேசாமல் அங்கிருந்து சென்றார். உடனே சரவணன், ரொம்ப ஓவராக நடிக்காதே. எங்கள் அம்மா பணத்தை கொடுத்தால் எதற்கு திருப்பி கொடுக்கிறாய்? அது உனக்காக கொடுக்கவில்லை. குழந்தைக்காக கொடுத்தது என்று கோபமாக பேசி இருந்தார். தங்கமயில், அதுதான் உங்கள் குழந்தை இல்லையே, எதற்காக பணம் கொடுக்கணும் என்றார். சரவணன், குழந்தை பிறந்த உடனே உன்னுடன் விடமாட்டேன். என்னுடைய வீட்டிற்கு எடுத்து வந்து வளர்ப்பேன் என்றெல்லாம் சவால் விட்டார்.

ஹாஸ்பிடலில் கண்விழித்த முத்துவேல், தன்னை தள்ளிவிட்டது குமார் தான் என்றும் கதிருக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்று உண்மையை சொல்லி விட்டார். இதைக் கேட்டு சக்திவேல் பதறிப் போனார். பின் போலீஸுமே கதிர் மீது தவறில்லை என்று புரிந்து கொண்டு கதிரை விடுதலை செய்து விட்டார்கள். பாண்டியன் குடும்பம் சந்தோஷப்பட்டார்கள். இன்னொரு பக்கம் தனியாக இருந்த குமாரை சக்திவேல் அடி வெழுத்து வாங்கினார். ஒரு கட்டத்தில் குமார் உண்மையை சொல்லி விடுகிறார். இருந்தாலும் சக்திவேல், குமார் செய்ததை நினைத்து கோபப்பட்டார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

அதற்கு பின் கதிரை வீட்டிற்கு அழைத்து வந்தார்கள். கோமதி, ராஜி இருவரும் அழுதார்கள். அந்த சமயம் பார்த்து சக்திவேல், குமாரை அழைத்து வந்தார். குமாரை பார்த்து கோமதி கொந்தளித்தார். மொத்த பாண்டியன் குடும்பமே குமாரின் மீது சீறுகிறார்கள். சக்திவேல் எவ்வளவு தடுத்தும் பார்த்தார். இருந்தாலும் யாரும் கேட்கவில்லை. குமார்- சக்திவேலை வெளுத்து வாங்கினார்கள். அதற்குப்பின் அப்பத்தா, சக்தி வேலையும் குமாரையும் திட்டிக் கொண்டிருந்தார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் பழனி, காந்திமதி எல்லோருமே சக்திவேல்- குமார் செய்த வேலையை நினைத்து திட்டிக் கொண்டிருக்கிறார்கள். மொத்த குடும்பமே குமாரால் உடைந்து போய் நிற்கிறது. சக்திவேலால் எதுவும் பேச முடியாமல் அமைதியாக இருக்கிறார். இன்னொரு பக்கம் ஹாஸ்பிடலில் வடிவு, முத்து வேலை கவனித்துக் கொண்டிருக்கிறார். அப்போது கதிர்- ராஜி இருவரும் ஹாஸ்பிடல் வருகிறார்கள். கதிரை பார்த்தவுடன் வடிவு- முத்துவேல் இருவருமே மாறி மாறி மன்னிப்பு கேட்கிறார்கள். கதிருக்கு ரொம்பவே தர்ம சங்கடமாக இருக்கிறது.

சீரியல் ட்ராக்:

பின் எல்லோரிடமும் சந்தோஷமாக கதிர் பேசிக் கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் கோமதி, சரவணன் அஞ்சலியுடன் பேசுவதை பற்றி பாண்டியனிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார். சரவணன், நாங்கள் நட்பாக தான் பேசுகிறோம் என்று சொல்கிறார். கோமதி, எதுவாக இருந்தாலும் விவாகரத்து கேஸ் முடியும் வரை எதுவும் பண்ணாதே. உனக்கு குழந்தை பிறப்பதற்கு போகிறது. தயவுசெய்து குழந்தை பற்றியும் மயில் பற்றி யோசி என்று சொல்கிறார். சரவணன், எனக்கு எல்லாம் தெரியும். எனக்கு அறிவுரை எல்லாம் சொல்ல தேவையில்லை என்று அவமரியாதையாக கோமதி இடம் பேசிவிட்டு செல்கிறார். இதையெல்லாம் பார்த்து பாண்டியன் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full