சொத்து விவகாரத்தில் பாண்டியன் மீது கோபப்படும் தங்கமயில், சரவணன் சொன்ன வார்த்தை - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் கோமதி, குமார் கோர்ட்டில் அரசி காலில் விழுந்ததை பற்றி எமோஷனலாக பேசி இருந்தார் . பின் பாண்டியன் வீட்டிற்கு சதீஷும் அவருடைய அம்மாவும் வந்திருந்தார்கள். அப்போது சதிஷ் அம்மா, நடந்த அனைத்தையும் டிவியில் பார்த்து தெரிந்து கொண்ட விஷயத்தை சொன்னார். கோமதியும் நடந்த விஷயத்தை பற்றி சொன்னார். அப்போது சதீஷின் அம்மா, மீண்டும் சதீஸ்-அரசிக்கு திருமணம் செய்து வைக்கலாம் என்று கேட்டார். பாண்டியன் ஷாக் ஆனார்.
பாண்டியன், இனி எதுவாக இருந்தாலும் அரசி தான் முடிவு எடுக்கணும். இதில் நான் சொல்வதற்கு ஒன்றுமே இல்லை என்றார். இன்னொரு பக்கம் பாண்டியன் வீட்டில் நடப்பதை எல்லாம் சுகன்யா, குமார் வீட்டில் சொன்னார். அரசி திருமணம் விஷயத்தை தெரிந்து குமார் ரொம்பவே வருத்தப்பட்டார். அதற்குப்பின் அரசி, நான் இன்னும் ஐந்து வருடத்திற்கு உங்கள் மகளாகவே இருக்க விரும்புகிறேன். நான் மேற்கொண்டு படிக்கணும். எனக்கு இப்ப திருமணத்தில் விருப்பமே இல்லை. நீங்கள் எந்த மாப்பிள்ளை சொன்னாலும் நான் கல்யாணம் செய்து கொள்ள தயார். என் மனதில் குமார் கிடையாது என்றார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
இதை கேட்டு பாண்டியனும் சம்மதித்தார். பின் மாப்பிள்ளை வீட்டில் அரசிக்கு திருமணத்தில் விருப்பமில்லாத விஷயத்தை சொன்னார். சதீஷ் அம்மா எவ்வளவு எடுத்துச் சொன்னார்கள் சதீஸ் அம்மா எவ்வளவோ எடுத்து சொல்லியும் பாண்டியன் ஒத்துக்கொள்ளவில்லை. சதீஷும் அவருடைய அம்மாவும் அங்கிருந்து கிளம்பினார்கள். பின் அரசி தன்னுடைய அப்பாவிடம் நன்றி சொல்லி சந்தோஷப்பட்டார். இன்னொரு பக்கம் அரசி திருமணத்திற்கு ஒத்துக் கொள்ளாத விஷயத்தைப் பற்றி சுகன்யா, குமார் வீட்டில் சொன்னவுடன் குமார் மனதுக்குள் சந்தோஷப்பட்டார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் பாண்டியன் வீட்டில் உள்ள எல்லோரையும் அழைத்து சொத்தை விற்கும் விஷயத்தைப் பற்றி பேசுகிறார். செந்தில்- கதிர் இருவருமே பணம் வேண்டாம் என்று சொல்கிறார்கள். பாண்டியன், இருவரையும் திட்டிவிட்டு செந்தில் லோனுக்கு, கதிர் டிராவல்ஸ் ஆரம்பிப்பதற்கு பணத்தை தருவதாக சொல்லிவிட்டு கிளம்புகிறார். இது எல்லாம் கேட்ட தங்கமயில் பயங்கரமாக கோவப்படுகிறார். பின் ரூமில் தங்கமயில் சொத்தில் பங்கு தராததை பற்றி சரவணனிடம் கேட்டு சண்டை வாங்குகிறார். தன் மாமனார் செய்யும் வேலை பிடிக்கவில்லை என்கிறார்.
சீரியல் ட்ராக்:
இதனால் கோபப்பட்ட சரவணன், நீயும் உன் குடும்பமும் செய்த வேலை எல்லாம் நான் வீட்டில் சொல்லட்டுமா? இன்னைக்கு பஞ்சாயத்து வைத்துக் கொள்ளலாம் என்றெல்லாம் சொல்வதால் தங்கமயில் எதுவும் சொல்லாமல் அமைதியாகிறார். அடுத்த நாள் காலையில் பாண்டியன் வீட்டிற்கு மீனா அப்பா- அம்மா வருகிறார்கள். அப்போது பாண்டியன், மீனா செந்திலுக்காக பணம் கொடுத்து உதவி செய்ததை பற்றி ரொம்ப பெருமையாக பேசுகிறார். உடனே மீனாவின் அப்பா, நக்கலாக பாண்டியனை குடும்பத்தை பேசுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.