வேதனையில் கதிரிடம் புலம்பி தள்ளும் சரவணன், சுகன்யாவின் சதி வேலை - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் கதிர், அவருடைய தாத்தா வயதானவர். நான் வண்டி ஓட்டினால் தான் அவர் பாதுகாப்பாக இருப்பதாக நினைக்கிறார் என்றவுடன் ராஜி அமைதியாகி விட்டார். அதற்குப்பின் சரவணன் கடையில் மும்முரமாக வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது பாண்டியனுக்கு போன் செய்த தங்கமயில், அவர் போனை எடுக்கவில்லை. என்னிடம் ரொம்ப கோபமாக இருக்கிறார் என்று ஒன்றுக்கு இரண்டாக மீண்டும் தங்கமயில் ஏற்றி வந்தார். இதனால் கோபப்பட்ட பாண்டியன், உண்மை தெரியாமல் சரவணனை திட்டிக் கொண்டிருந்தார்.
தங்கமயில் செய்த வேலையால் கொந்தளித்து வீட்டுக்கு வந்த சரவணன், எதற்காக இவ்வளவு நாடகம் ஆடுகிறாய். உன்னை பார்த்தாலே பிடிக்கவில்லை. ஒழுங்கு மரியாதையாக வீட்டில் எல்லா உண்மையும் சொல்லிவிடு. இவ்வளவு நாடகம் ஆடுவாயா? உன் கையில் பச்ச தண்ணி வாங்கி குடிப்பது கூட பாவம் என்றெல்லாம் திட்டிக் கொண்டிருந்தார். உடனே அந்த பக்கம் வந்த கோமதி கதவை தட்டினார். இதுதான் சந்தர்ப்பம் என்று தங்கமயில், வெளியே வந்து மீண்டும் என்னை திட்டுகிறார். வீட்டை விட்டு போக சொல்கிறார் என்று அழுது டிராமா பண்ணுகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
சரவணன் உண்மையை சொல்ல பார்த்தார். ஆனால், கோமதி சொல்லவிடாமல் தடுத்து நிறுத்தி சரவணனை திட்டி விட்டு சென்றார். இன்னொரு பக்கம் மீனாவை பார்க்க அவருடைய அப்பா, அம்மா இருவரும் வந்திருந்தார்கள். அப்போது மீனா, வீட்டில் சமைக்காத இருப்பதை தெரிந்த அவருடைய அம்மா, எப்படி செய்யனும், என்னென்ன பண்ணனும் எல்லாம் சொன்னார். ஆனால், மீனா அதை பெரிதாக கண்டு கொள்ளவே இல்லை. அதற்குப்பின் கோமதி, சரவணன்-தங்கமயில் சண்டை போட்டதை பற்றி பாண்டியனிடம் சொன்னார். பாண்டியன், அவர்களுக்குள் என்ன பிரச்சனை என்பதை கண்டுபிடிக்கணும். சீக்கிரமாகவே இந்த பிரச்சனைக்கு முடிவு கட்டுகிறேன் என்றார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோடில் மீனா, கஷ்டப்பட்டு தனக்கு தெரிந்ததை வைத்து சமைக்கிறார். செந்திலுமே அவருக்கு உதவி செய்கிறார். ஆனால், எதிர்பார்த்த அளவிற்கு சமையல் வரவில்லை. இருந்தாலும் இன்னொரு பக்கம் தன் கடையில் வந்த வரவு செலவு கணக்குகளை எல்லாம் சுகன்யா, குமாருடன் சேர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறார். இதை பார்த்து சக்திவேலுக்கு சந்தோசமாக இருக்கிறது. பின் சுகன்யா, நாங்கள் இது பாண்டியனுடைய இன்னொரு பிரான்ச் என்று சொல்லி இருக்கிறோம். அப்போதுதான் கடையின் வியாபாரம் இன்னும் அதிகமாகும். எப்படியும் பாண்டியனுக்கு இன்று வியாபாரம் குறைந்திருக்கும் .
சீரியல் ட்ராக்:
எங்களுக்கு நல்ல லாபம் கிடைத்திருக்கிறது என்றெல்லாம் சொல்கிறார். இதை கேட்டு சக்திவேலுக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இன்னொரு பக்கம் ராஜி, கதிர் இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது ராஜி, தன் அப்பாவின் மீது இருந்த கோபத்தில் பைக்கை கீழே தள்ளி விட்டு உள்ளே சென்று விடுகிறார். ஆனால் உண்மை தெரியாமல் முத்துவேல், கதிரை திட்டிவிட்டு அங்கு இருந்து செல்கிறார். அதற்குப்பின் வெளியே வந்த சரவணன் இடம் கதிர் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது கதிர், உங்களுக்கு என்னதான் பிரச்சனை? எதுவாக இருந்தாலும் சொல்லுங்கள் என்று கேட்கிறார். சரவணன், நான் நிம்மதியாகவே இல்லை, சந்தோஷமாக இல்லை. என்னால் எதுவும் வெளியில் சொல்ல முடியவில்லை என்று ரொம்பவே புலம்பி கொண்டிருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.