சரவணன் சொன்ன வார்த்தையை கேட்டு உடைந்து போன தங்கமயில், பாண்டியன் எடுத்த முடிவு - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

சரவணன் சொன்ன வார்த்தையை கேட்டு ஷாக்கான தங்கமயில்

By subhashini · 18/6/2026

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் கதிர், சரவணனை தடுத்து அங்கிருந்து அழைத்து சென்றார். பின் தங்கமயில், என் பிரச்சினையை நான் பார்த்துக் கொள்கிறேன். தேவை இல்லாமல் யாரும் தலையிடாதீர்கள் என்று தன்னுடைய அப்பா, அம்மாவிடம் சண்டை போட்டார். இதனால் மயிலுக்கு உடல்நிலை சரியில்லாமல் மயங்கி கீழே விழுந்து விட்டார். இன்னொரு பக்கம் சரவணன், நான் எந்த தவறும் செய்யவில்லை. நாங்கள் எதர்ச்சியாக தான் கோயிலில் பார்த்தோம். எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது என்று கதிரிடம் சொல்லி ரொம்ப எமோஷனாக அழுதார்.

தங்கமயில் மன அழுத்தம் அதிகமாக இருந்ததால் மயக்கம் போட்டு விழுந்திருந்தார். டாக்டர், தங்கமயிலுக்கு அதிக பிரஷர் கொடுக்கக் கூடாது. அவர் எதிரில் சண்டை எல்லாம் எதுவும் போடாதீர்கள் என்றார். உடனே பாக்கியம் தன் மகளை கூட பார்க்காமல் நேராக பாண்டியன் வீட்டிற்கு சென்றார். அங்கு சரவணன் செய்த வேலையையும், தங்கமயில் உடல்நல முடியாமல் ஹாஸ்பிடலில் இருக்கும் விஷயத்தைப் பற்றி எல்லாம் சொன்னார். இதைக் கேட்டு கோமதி, பாண்டியன் ஷாக் ஆனார்கள்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

இன்னொரு பக்கம் அஞ்சலியின் அப்பா, இனிமேல் நீ சரவணனை பார்க்க கூடாது பேசக்கூடாது என்று அஞ்சலி இடம் சத்தியமாகி கொண்டார். அந்த சமயம் பார்த்து சரவணன், அஞ்சலிக்கு போன் செய்தார். ஆனால், அஞ்சலி போனை எடுக்கவில்லை. சரவணன் பலமுறை போன் செய்து கொண்டிருந்தார். பின் கோமதி-பாண்டியன் இருவரும் ஹாஸ்பிடலுக்கு வந்தார்கள். அங்கு தங்கமயிலின் உடல்நலத்தை பற்றி விசாரித்து கவனமாக இருக்க சொன்னார்கள். வழக்கம்போல பாக்கியம் ருத்ரதாண்டவம் ஆடிக் கொண்டிருந்தார். பின் தங்கமயில் திட்டியதால் பாக்கியம் வெளியே சென்று விட்டார். தங்கமயில் தன்னுடைய மாமனாரிடம் மன்னிப்பு கேட்டார்.

இன்றைய எபிசோட்:

இன்றைய எபிசோட்டில் தங்கமயில், எங்கள் வீட்டில் இவ்வளவு தவறு செய்துமே நீங்கள் அதை மறந்து என்னை பார்க்க வந்ததற்கு ரொம்ப நன்றி. என்னை மன்னித்து விடுங்கள் மாமா என்று எமோஷனலாக பேசுகிறார். பின் கோமதி, தங்கமயிலின் உடல் நலத்தை பார்த்துக்க சொல்லிவிட்டு இருவரும் கிளம்புகிறார்கள். வீட்டிற்கு வந்த கோமதி, ஹாஸ்பிடல் நடந்ததை எல்லாம் ராஜி- அரசி இடம் சொல்லிக் கொண்டிருக்கிறார். அப்போது வந்த சரவணன் இடம் பாண்டியன், தங்கமயில் உடம்பு முடியாமல் ஹாஸ்பிடல் இருக்கிறாள். அவரை சென்று பார்த்துவிட்டு வா என்று சொல்கிறார். சரவணன் முடியாது என்கிறார். பின் பாண்டியன்- கோமதி கட்டாயப்படுத்தியதால் வேறு வழி இல்லாமல் சரவணன் ஹாஸ்பிடலுக்கு செல்கிறார்.

சீரியல் ட்ராக்:

சரவணன் பார்த்து தங்கமயில் ஆச்சரியப்படுகிறார். அப்போது சரவணன், உன் மீது நான் ரொம்பவே நம்பிக்கையும் பாசமும் வைத்து இருந்தேன், எல்லாத்தையும் நீ உடைத்து விட்டாய். உன்னால் என்னுடைய குடும்பம் ரொம்பவே கஷ்டப்பட்டு விட்டது. குழந்தைக்கு எதுவும் ஆகாமல் நான் பார்த்துக்கொள்வேன். குழந்தைக்கு தேவையான எல்லா செலவையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், குழந்தையை காரணம் காட்டி நீ என்னுடன் சேர்ந்து வாழ்வதற்கு நான் ஒத்துக் கொள்ள மாட்டேன். உன்னுடன் சேர்ந்து வாழும் நிலைமை வந்தால் நான் செத்துப் போய் விடுவேன் என்கிறார். இதை கேட்டு தங்கமயில் உடைந்து போகிறார். அதற்குப்பின் வீட்டில் பாண்டியன்- கோமதி இருவரும் தங்கமயிலை வீட்டிற்கு அழைத்து வருவதை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full