அஞ்சலிக்கு சரவணன் செய்த சத்தியம், தங்கமயிலுக்கு கோமதி கொடுத்த வாக்குறுதி - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் கோமதி, ஒரு பக்கம் விவாகரத்து. இன்னொரு பக்கம் தங்கமயில் கர்ப்பமாக இருக்கிறாள். என்ன முடிவு எடுப்பது? என்று தெரியவில்லை. ரொம்ப கஷ்டமாக இருக்கிறது என்று புலம்புகிறார். பாண்டியன், என்ன நடந்தாலுமே அது நம்ம வீட்டு வாரிசு என்றார். சரவணன் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். பின் கோமதி, என்ன செய்யலாம்? என்ன முடிவெடுக்க போகிறீர்கள்? என்றார். பாண்டியன், பொறுமையாக தான் யோசித்து முடிவு எடுக்கணும் என்றார்.
கதிர், எதுவாக இருந்தாலும் பார்த்துக்கொள்ளலாம். தைரியமாக இருங்கள் என்று தன்னுடைய மாமனார் முத்துவேலுக்கு ஆறுதல் சொல்லி அழைத்து வந்தார். இன்னொரு பக்கம் செந்தில், நீ அப்பாவாகிவிட்டாய். என்ன முடிவெடுக்க போகிறாய் என்றார். சரவணன், எனக்கு தெரியவில்லை என்றார். அதேபோல் பாண்டியன்- கோமதி எல்லோருமே தங்கமயிலை ஏற்றுக் கொள்வதா? இல்லையா? என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தார்கள். கதிர்- முத்துவேல் இருவரும் ஒன்றாக செல்வதை பார்த்து சக்திவேல், கதிரிடம் கேட்டு சண்டை வாங்கினார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
மீனா, சரவணன் மாமா வேறு ஒரு பெண்ணுடன் அடிக்கடி சுற்றிக் கொண்டிருந்தார். அதை நானே பார்த்து அவரிடம் விசாரித்தேன். ஆனால், அவர் எதுவுமே சொல்லவில்லை. என்றார். கோமதி, இன்னும் என்னென்ன மறைத்து வைத்திருக்கிறாய் என்று கேட்டார். மீனா, நான் சொல்ல வருவது யாருமே கேட்பதில்லை என்று சொன்னார். பின் செந்தில்- மீனா இருவரும் கிளம்பி வீட்டிற்கு போனார்கள். சக்திவேல் வீட்டில் உள்ள எல்லோரையும் அழைத்து முத்து வேலிடம் விசாரித்தார்.
சீரியல் ட்ராக்:
சக்திவேல், துருவி துருவி கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் சக்திவேல், நான் நடந்து வந்து கொண்டிருக்கும்போது எனக்கு உடல்நிலை முடியாமல் போனது. கதிர் தான் என்னை அழைத்து வந்தால் அவ்வளவு தான் நடந்தது என்றார். வீட்டில் உள்ள எல்லாருமே பார்த்திருந்தார்கள். ஆனால், சக்திவேலுக்கு அதில் நம்பிக்கையே இல்லை. முத்துவேல் மீது இன்னும் சந்தேகப்பட்டார். பின் இதைப்பற்றி சுகன்யா, சக்திவேல் இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். இன்னொரு பக்கம் செந்தில், சரவணன் இன்னொரு பெண்ணுடன் பேசுகிறாரா? என்றார். மீனா, உண்மை தான் என்றார்.
https://www.youtube.com/watch?v=w_c1XK3jkAw
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் புரோமோவில் அஞ்சலி, குழந்தை காரணமாக வைத்து உன்னை அவர்கள் பக்கம் இழுக்க பார்ப்பார்கள் என்று சொல்கிறார். சரவணன், குழந்தையை நான் தான் வளர்ப்பேன். ஆனால், தங்கமயிலை ஏற்றுக்கொள்ள மாட்டேன். நான் உன்னை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று கோவிலில் சத்தியம் செய்து கொடுக்கிறார். இன்னொரு பக்கம் தங்கமயில் வீட்டிற்கு பாண்டியன்- கோமதி செல்கிறார்கள். அப்போது கோமதி, எப்படி உன்னையும் குழந்தையையும் நாங்கள் விட்டு விடுவோம். அது எங்கள் வீட்டு வாரிசு என்று சொல்கிறார்.