அரசிக்கு லவ் டார்ச்சல் கொடுக்கும் குமார், நடுரோட்டில் பொளந்து கட்டிய சரவணன் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் மாணிக்கம் ஒவ்வொரு நிமிஷமும் ரொம்ப நக்கலாக பழனியை பேசிக் கொண்டிருந்தார். அந்த சமயம் வந்த பாண்டியன், சரவணன் மட்டும் தனியாக எப்படி கிளம்பி சென்று இருக்கான். நீ என்ன செய்தாய்? என்று எல்லோரும் முன்னாடியும் பழனியை திட்டி விட்டார். இதனால் பழனி, கஷ்டப்பட்டு கொண்டு அங்கிருந்து சென்றார். பின் பாண்டியன் வெளியே சென்றவுடன் மாணிக்கம் கல்லாவில் உட்கார்ந்து கொண்டு பணத்தை எடுப்பதற்காக திட்டம் போட்டுக் கொண்டிருந்தார்.
பின் ராஜி, இனி நான் சீக்கிரமாக டிரைனிங்க்கு வந்து விடுகிறேன், மன்னித்துவிடு என்றெல்லாம் சொல்வதால் கதிர் அமைதி ஆனார். அந்த சமயம் வந்த பழனி, பாண்டியன் பேசுவது பற்றி புலம்பி கொண்டிருந்தார். கதிர், என்னுடன் பார்ட்னராக இருங்கள் என்றார். அதற்கு பழனி, அதெல்லாம் செட் ஆகாது என்று அங்கிருந்து சோகமாக சென்று விட்டார். அதற்குப்பின் தீபாவளி சீர்வரிசை கொடுப்பதற்காக மீனாவின் அப்பா, அம்மா இருவருமே பாண்டியன் வீட்டிற்கு வந்திருந்தார்கள். தீபாவளி சீரை கொடுத்துவிட்டு மீனாவின் அப்பா, குவாட்டர்ஸில் தீபாவளி பண்டிகை கொண்டாடுங்கள் என்றார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
மீனா முடியாது என்றார். பின் செந்திலும் குவாட்டர்ஸில் தான் தீபாவளி கொண்டாட போகிறோம் என்றார். அதற்குப்பின் கடையில் தங்கமயில், மாணிக்கம் மட்டும் வியாபாரம் செய்து கொண்டிருந்தார்கள். அப்போது கடைக்கு வந்த ஒருவர், பாண்டியனிடம் பணத்தை கொடுக்க சொல்லி பத்தாயிரம் ரூபாய் கொடுத்தார். அதை வாங்கிய மாணிக்கம், உனக்கு தீபாவளி சீர் செய்ய காசு தயாராகிவிட்டது என்றார். உடனே பயத்தில் தங்கமயில், வேண்டாம். அந்த பணத்தை கொடுத்து விடுங்கள். மாமாவிடம் தந்துவிடலாம் என்றார். ஆனால், மாணிக்கம் கேட்கவே இல்லை. அந்த பணத்தை எடுத்துக் கொண்டு சென்று விட்டார். இதனால் என்ன பிரச்சனை வருமோ? என்று தங்கமயில் ரொம்பவே பயந்து போய் இருந்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் தங்கமயிலின் வீட்டில் இருந்து சீர் செய்வதற்காக பாண்டியன் வீட்டிற்கு வந்திருக்கிறார்கள். தங்க மயிலுக்கு உண்மை தெரிந்துவிடுமோ என்று பயத்திலேயே இருக்கிறார். பின் தங்கமயிலின் அப்பா, அம்மா இருவருமே தீபாவளி சீர் கொடுத்து விட்டு தங்கமயிலிடம் தனியாக சென்று பேசுகிறார்கள். அப்போது தங்கமயில், கடை காசை எடுத்து செய்வது இது நியாயமா? பயமாக இருக்கிறது என்றெல்லாம் புலம்புகிறார். அதற்கு தங்கமயில் அம்மா, தயவுசெய்து தீபாவளிக்கு வீட்டிற்கு வந்து விடாதீர்கள். இங்கேயே சந்தோஷமாக கொண்டாடுங்கள் என்று தங்களுடைய குடும்ப வறுமையை சொல்லிக் கொண்டிருக்கிறார்.
சீரியல் ட்ராக்:
இன்னொரு பக்கம் அரசி கல்லூரி முடித்து வீட்டுக்கு வரும்போது குமார், வழிமறித்து என் மேல் இருக்கும் காதலால் தான் கேசை நீ வாபஸ் வாங்கி விட்டாய். இனிமேல் யார் என்ன எதிர்த்தாலும் உனக்காக நான் இருக்கிறேன். இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்றெல்லாம் பேசுகிறார். இதைக் கேட்டு கோபப்பட்ட அரசி பயங்கரமாக திட்டிக் கொண்டிருக்கிறார். அந்த சமயம் பார்த்து சரவணன் வந்து விடுகிறார். கோபத்தில் சரவணன், குமாரை கன்னத்திலேயே அறைந்து வார்னிங் கொடுக்கிறார். பின் அரசியை அங்கிருந்து அழைத்து வந்து விடுகிறார். கடைசியில் சுகன்யாவின் அப்பா- அம்மா இருவரும் தீபாவளி சீர் கொடுப்பதற்காக பாண்டியன் வீட்டிற்கு வந்துவிடுகிறார்கள். இதையெல்லாம் பார்த்து ராஜி சோகமாக இருக்கிறார். பின் கோமதி, உனக்கும் எனக்கும் தான் தீபாவளி சீர் கொடுக்க குடுப்பனை இல்லை என்றெல்லாம் சொல்லி புலம்பி கொண்டிருக்கிறார்.