வீட்டு வாசலில் ப்ரச்சனை செய்யும் தங்கமயில், சரவணன் எடுத்த அதிரடி முடிவு - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 17/12/2025

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் தங்கமயிலின் அம்மா, அப்பாவும் உண்மையை சொல்லாமல் மாற்றி மாற்றி பொய்யே சொல்லிக் கொண்டிருந்தார்கள். இதனால் கொந்தளித்த சரவணன், தங்கமயிலின் அப்பாவை அடிக்க போனார். பின் கோமதி, குழலி இருவருமே தங்கமயிலின் குடும்பத்தை ரொம்ப மோசமாக பேசி இருந்தார்கள். ஒரு கட்டத்தில் தங்கமயிலின் அப்பா, அம்மா இருவருமே தங்களுடைய தவறை ஒத்துக் கொண்டு மன்னிப்பு கேட்டார்கள்.

அப்போது கொந்தளித்த பாண்டியன், நீங்கள் மறைத்ததெல்லாம் எனக்கு பெரிய விஷயமே கிடையாது. ஆனால், என்னிடம் பொய் சொன்னது ரொம்பவே தப்பு. என்னை யார் ஏமாற்றினாலும் நான் ஏற்றுக் கொள்ளவே மாட்டேன். என் பிள்ளைகளையும் நான் அப்படித்தான் வளர்த்தேன். இவ்வளவு பெரிய துரோகத்தை நீங்கள் செய்வீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை என்று ரொம்ப எமோஷனலாக
பேசி இருந்தார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

பாண்டியன் வீடு சோக கடலில் மூழ்கிக் கொண்டிருக்கின்றது. செந்தில்-கதிர் இருவரும் எல்லோருக்கும் சாப்பாடு வாங்கி வந்து கொடுக்க, எல்லோரும் சாப்பிடுகிறார்கள். சரவணன் வருத்தத்தில் இருப்பதால் பாண்டியன் ஆறுதல் சொல்லி சமாதானம் செய்கிறார். இன்னொரு பக்கம் தங்கமயில் வேதனையில் வீட்டில் நடந்ததை எல்லாம் நினைத்து பார்த்து அழுது கொண்டே வருகிறார். பின் தன்னுடைய மாமனார் வீட்டுக்கு மீண்டும் செல்ல நினைக்கிறார். ஆனால், தங்கமயில் அப்பா-அம்மா இருவரும் அவரை சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்து வருகிறார்கள்.

சீரியல் ட்ராக்:

வீட்டிற்கு வந்த பின்னும் தங்கமயில் தன்னுடைய கணவர் வீட்டில் நடந்ததையே நினைத்து, புலம்பி அழுது கொண்டிருக்கிறார். உடனே தங்கமயில் அம்மா, உன்னை எப்படியாவது அந்த வீட்டில் கொண்டு போய் சேர்ப்பேன். உன்னை அங்கு வாழ வைப்பேன் என்றெல்லாம் சபதம் போடுகிறார். இருந்தாலும் தங்கமயில் தன் தங்கையிடம் பொய் சொல்லி திருமணம் செய்யாதே என்றெல்லாம் புலம்பி கொண்டிருக்கிறார்.

https://www.youtube.com/watch?v=BdoyjD5QDaM

சீரியல் ப்ரோமோ:

இந்நிலையில் தற்போது வெளியாகிருக்கும் புரோமோவில் தங்கமயில், பாண்டியன் வீட்டு வாசலில் நின்று பிரச்சனை செய்து கொண்டிருக்கிறார். கோமதி, தங்கமயில் அப்பா, அம்மாவை வீட்டிற்கு வர வைக்கிறார். பின் கோபத்தில் சரவணன், நான் என்னுடைய சாவுக்கு காரணம் நீயும் உன்னுடைய குடும்பம் தான் எழுதி வைத்துவிட்டு செத்து விடுவேன் என்று சொல்கிறார். பாண்டியன், எதற்காக இப்படி பேசுகிறாய் என்று கேட்கிறார். அதற்கு சரவணன், எங்கள் இருவருக்கும் விவாகரத்து வாங்கி கொடுங்கள் என்று சொல்கிறார். அதிர்ச்சியில் தங்கமயில் உறைந்து நிற்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full