குவாட்டர்ஸ் பற்றி பேசிய செந்தில், பாண்டியன் சொன்ன வார்த்தை - விறுவிறுப்பில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 30/9/2025

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் ராஜி, மீனா வீட்டை விட்டு போவதை நினைத்து ரொம்ப எமோஷனலாக பேசியிருந்தார். உடனே மீனா, நான் எங்கும் போகவில்லை என்றார். கதிர், செந்திலுக்கு சப்போர்ட் செய்து தான் பேசினார். பின் மீனா, வேண்டும் என்றால் உங்கள் அண்ணனுடன் சேர்ந்து நீங்கள் அந்த வீட்டுக்கு போய் விடுங்கள் என்று சொன்னார். இன்னொரு பக்கம் கடையில் மாணிக்கம் செய்த வேலையால் கொந்தளித்த சரவணன், தங்கமயில் இடம் சண்டை போட்டார். தங்க மயிலின் குடும்பத்தை பற்றியும் அவருடைய அப்பா செய்த வேலையையும் கேவலப்படுத்திக் கொண்டிருந்தார்.

இதனால் தங்கமயில், எங்க அப்பா ஒன்னும் பணம் திருட மாட்டார் என்றெல்லாம் பேசினார். சரவணன், இனி உன் அப்பா கடை பக்கமே வரக்கூடாது என்று திட்டினார். அதற்குப்பின் பழனி சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்ப வந்த பாண்டியன், கடைக்கு பழனியை போக சொன்னார். பழனியும் வேகவேகமாக கிளம்பினார். இதை பார்த்து கோபப்பட்ட சுகன்யா, சக்திவேலிடம் சொல்லி புலம்பி கொண்டிருந்தார். பழனிக்கு சொந்தமாக பிசினஸ் ஏற்பாடு செய்து தரச் சொல்லிக் கேட்டார். சக்திவேல், பழனியை அழைத்துக்கொண்டு இங்கே வந்துவிடு எல்லாமே செய்து தருகிறேன் என்றார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

இன்றைய எபிசோட்டில் கிச்சனில் எல்லோருமே வேலைக்கு போவதை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது கோமதி, தங்கமயில் வேலைக்கு போகாமல் இருப்பதை சூசகமாக சொல்கிறார். இதனால் தங்கமயில் அங்கிருந்து சென்று விடுகிறார். பின் தங்கமயில், சரவணன் இடம் சண்டை போடுகிறார். அதற்கு சரவணன், நீ என்ன படித்திருக்கிறாய்? பொய் சொல்லி தானே ஏமாற்றுகிறாய் என்று திட்டுகிறார். அதற்குப்பின் தங்கமயில் தன்னுடைய அப்பாவிற்கு ஃபோன் செய்து, மளிகை பொருட்களை எடுத்து வந்ததை பற்றி கேட்டு சண்டை போடுகிறார்.

சீரியல் ட்ராக்:

அவரும் சம்பளம் கொடுத்தவுடன் திருப்பிக் கொடுக்கிறேன் என்று சமாளிக்கிறார். அதற்குப்பின் பாண்டியன், வீட்டில் எல்லோருமே வேலைக்கு தயாராகி கிளம்புகிறார்கள் செந்தில் கூலிங் கிளாஸ் எல்லாம் போட்டுக்கொண்டு வீட்டிலேயே அட்ராசிட்டி செய்து கொண்டிருக்கிறார். அதற்குப்பின் தங்கமயில், நான் வெளியே வேலைக்கு போவதில் நிறைய பிரச்சனை இருக்கிறது. நான் மளிகை கடைக்கு வேலைக்கு வருகிறேன் என்று சொல்கிறார். சரவணன், கோமதி, பாண்டியன் எல்லோருமே வேணாம் என்கிறார்கள். ஆனால், தங்கமயில் விடாமல் ஏதேதோ கதைகளை கட்டுகிறார். பாண்டியன், தங்கமயிலின் வற்புறுத்ததால் ஒத்துக்கொள்கிறார். இன்னொரு பக்கம் கதிர்- ராஜி இருவருமே பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

https://www.youtube.com/watch?v=53pq3hC36xY

சீரியல் ப்ரோமோ:

இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் செந்தில், மீனாவிற்கு குவாட்டர்ஸ் கிடைத்திருக்கிறது. நாங்கள் இருவரும் அங்கு போக போகிறோம் என்று சொல்கிறார். கோமதி, நாங்க என்ன குறை வைத்தோம். எங்களை விட்டு போகாதே என்று எமோஷனலாக பேசுகிறார். உடனே கோபத்தில் பாண்டியன், அவர்களுக்கு என்ன விருப்பமோ அது செய்யட்டும். அமைதியாக இரு கோமதி என்று சொல்கிறார். அதற்குப்பின் பாண்டியனை தனியாக சந்தித்து மீனா பேசுகிறார். அப்போது மீனா, எனக்கு தனியாக போக விருப்பமே இல்லை. உங்களுடன் இருக்கத்தான் எனக்கு சந்தோசம் என்று சொல்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full