செந்தில் சொன்ன வார்த்தையால் இடிந்து போன பாண்டியன் குடும்பம், அடுத்து என்ன? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 2/10/2025

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் பாண்டியன், வீட்டில் எல்லோருமே வேலைக்கு தயாராகி கிளம்பினார்கள் செந்தில் கூலிங் கிளாஸ் எல்லாம் போட்டுக்கொண்டு வீட்டிலேயே அட்ராசிட்டி செய்து கொண்டிருந்தார். அதற்குப்பின் தங்கமயில், நான் வெளியே வேலைக்கு போவதில் நிறைய பிரச்சனை இருக்கிறது. நான் மளிகை கடைக்கு வேலைக்கு வருகிறேன் என்று சொன்னார். சரவணன், கோமதி, பாண்டியன் எல்லோருமே வேணாம் என்றார்கள். ஆனால், தங்கமயில் விடாமல் ஏதேதோ கதைகளை கட்டினார். பாண்டியன், தங்கமயிலின் வற்புறுத்ததால் ஒத்துக்கொண்டார்.

நேற்று எபிசோட்டில் கதிர், ராஜிக்கு கார் ஓட்ட சொல்லித் தந்தார். ராஜி ரொம்பவே பதறுறார். அப்போது எதிரில் வரும் குமாரின் பைக்கின் மீது ராஜி மோதி விட்டார். கதிர்- ராஜி இருவருமே பதறி கொண்டு குமாரை பார்க்க போனார்கள். ராஜி தான் கார் ஓட்டி வந்தது என்று தெரிந்ததுமே குமார், எனக்கு ஒன்றும் இல்லை. உனக்கு ஒன்னும் ஆகவில்லையா? பத்திரமாக ஓட்டு என்று நல்லவர் போல் பேசிவிட்டு சென்றார். இதையெல்லாம் பார்த்து கதிருக்கு ஷாக்காக இருந்தது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

இன்னொரு பக்கம் மளிகை கடையில் வழக்கம் போல மாணிக்கம் நாட்டாமை செய்து கொண்டிருந்தார். அந்த சமயம் பார்த்து தங்க மயிலும் மளிகை கடைக்கு வேலைக்கு வந்தார். இதை பார்த்து பழனிக்கு, என்ன சொல்வது என்று தெரியவில்லை. சரவணனுக்கு பயங்கர கடுப்பாக இருந்தது. தங்கமயிலும் மாணிக்கமும் மளிகை கடையில் செய்யும் அட்ராசிட்டியை பார்த்து சரவணனுக்கு கோபம் கொந்தளித்தது. இருந்தாலும் அடக்கி வைத்துக் கொண்டு அமைதியாக இருந்தார். இன்னொரு பக்கம் கதிர்-ராஜி இருவரும் பேசி கொண்டு இருந்தார்கள்.

இன்றைய எபிசோட்:

இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் செந்தில் ஒரு ரோட்டோரமாக நின்று வேலை செய்து கொண்டிருக்கிறார். அதை பார்த்த பாண்டியன் செந்திலைக் கூப்பிட்டு கலாய்க்கிறார். என்னென்ன பேச்சு பேசின, இதுதான் ஏசி ரூமா என்றெல்லாம் பங்கமாக பாண்டியன் கலாய்க்கிறார். செந்திலால் எதுவுமே பேச முடியவில்லை, பயங்கரமாக கோபப்படுகிறார். பின் இதைப்பற்றி எல்லாம் மீனாவிடம் சொல்லி புலம்புகிறார் செந்தில். அதற்குப்பின் வீட்டில் எல்லோருமே கலகலப்பாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது செந்தில், நானும் மீனாவும் குவாட்டரஸ் போகப் போகிறோம் என்று சொல்கிறார்.

சீரியல் ட்ராக்:

இதை கேட்டு வீட்டில் உள்ள எல்லோருமே பதறுகிறார்கள். அப்போது மீனா, எனக்கு குவாட்டரஸ் கொடுத்திருப்பது உண்மை தான். ஆனால், எனக்கு அங்கு போக விருப்பமில்லை. இதெல்லாம் செந்தில் உடைய முடிவு தான் என்று சொல்கிறார். இதனால் வீட்டில் உள்ள எல்லோருமே செந்தில் இடம் போக வேண்டாம் என்று கேட்கிறார்கள். கோமதி ரொம்பவே கெஞ்சி கதறுகிறார். ஆனால், செந்தில் மனமிரங்கவே இல்லை. குவாட்டர்ஸுக்கு போவதில் உறுதியாக இருக்கிறார். பாண்டியன் அதிர்ச்சியில் அமைதியாக இருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full