லஞ்ச ஒழிப்பு அதிகாரியின் என்ட்ரி, பயத்தில் நடுங்கும் செந்தில் மாட்டி கொண்டாரா? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரியின் என்ட்ரி, பயத்தில் நடுங்கும் செந்தில்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் பழனி, சரவணன்- தங்கமயில் வாழ்க்கையை பற்றி சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது குமார், எனக்கு திருமணம் ஆகவில்லை என்று யாராவது பேசுறீங்களா? என்னுடன் யாருமே வீட்டில் பேசவில்லை என்று சொன்னார். இதனால் பழனி கோபத்தில் குமாரை திட்டி விட்டார். இன்னொரு பக்கம் வீட்டிற்கு சென்றால் மீனா கேள்வி கேட்பார் என்று செந்தில் தாமதமாக தான் சென்றார். இருந்தாலும் மீனா, செந்தில் இடம் அந்த பணத்தை பற்றி பேச வேண்டும் என்று விழித்து கொண்டிருந்தார். மீனா, அந்த பணம் எப்படி வந்தது? லஞ்சம் வாங்கினீர்களா? உண்மையை சொல்லுங்கள்.
லஞ்சம் வாங்கினால் வேலை போய்விடும் என்றார். செந்தில், அது நான் சேர்த்து வைத்த பணம். அதை நான் என் நண்பனிடம் கடனாக கொடுத்துவிட்டேன் என்றெல்லாம் சமாளித்து விட்டு தூங்க சென்றார். மறுநாள் காலையில் மீண்டும் மீனா, அந்த பணத்தைப் பற்றியே துருவி துருவி கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் கொந்தளித்த செந்தில், எனக்கு லஞ்சம் வாங்கினால் வேலை போய்விடும் என்று தெரியும். அது லஞ்ச பணம் இல்லை. நான் சேர்த்து வைத்த பணம் என்றார். இருந்தாலும் மீனாவிற்கு செந்தில் சொல்வதில் நம்பிக்கையே இல்லை.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கார்த்திகேயன்-அரசி இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது அரசி, பாண்டியன் தான் தன்னுடைய அப்பா என்ற உண்மையை சொல்லி விடுகிறார். கார்த்திகேயன், என்னுடைய வியாபாரத்திற்கு உதவி செய்யுங்கள். உங்க அப்பாவிடம் சொல்லி பொருள்களை கடையில் வைக்க சொல்லுங்கள் என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இதை கவனித்த குமார், அரசியிடம் சண்டை போடுகிறார். கார்த்திகேயனுக்கு ஒன்றும் தெரியவில்லை. அரசி, குமாரை திட்டி அங்கிருந்து அனுப்பி விடுகிறார். அதற்குப் பின் செந்தில் ஆபீஸில் வேலை செய்து கொண்டிருக்கிறார்.
இன்றைய எபிசோட்:
அப்போது அசிஸ்டன்ட் பாய் அவரிடம் லஞ்ச பணத்தை கொண்டு வந்து கொடுக்கிறார். செந்தில், இங்கு பணத்தை இடமில்லை. நீயே வைத்துக் கொள் என்று சொல்கிறார். அந்த சமயம் பார்த்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வந்து விடுகிறார்கள். அவர்கள் ஆபீஸ் முழுக்க யாரெல்லாம் லஞ்சம் வாங்குகிறார்கள் என்று சோதனை செய்து கொண்டு இருக்கிறார்கள். பயத்தில் செந்தில் கை கால்கள் எல்லாம் நடுங்குகிறது. மாட்டிக் கொள்வோமா? என்று திரு திரு பயந்து கொண்டிருக்கிறார்.
சீரியல் ட்ராக்:
பின் உயர் அதிகாரியையும், அங்கிருந்து சில அதிகாரிகளையும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் லஞ்சம் வாங்கிய குற்றத்திற்கு கைது செய்கிறார்கள். செந்தில் ஒரு வழியாக செந்தில் அதிலிருந்து தப்பித்து விடுகிறார். இருந்தாலுமே அந்த இடத்தில் மாட்டிக் கொண்டு இருந்தால் என்ன நடக்கும்? என்று யோசித்துப் பார்த்து செந்தில் பயப்படுகிறார். இந்த விஷயத்தை மீனா அறிவாரா? என்று வரும் நாட்களில் பொறுத்து இருந்து பார்ப்போம்.