பணத்தை திருப்பி கொடுக்கும் செந்தில், பாண்டியன் சொன்ன வார்த்தை - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 30/3/2026

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் அஞ்சலி கோவிலுக்கு வர சொன்னதால் சரவணன் ஏதேதோ காரணங்களை சொல்லி சென்று விட்டார். பாண்டியனுக்கு சந்தேகம் வருகிறது. பின் பழனியை கடையில் விட்டு பாண்டியன், சரவணன் என்ற கோவிலுக்கு போனார். அங்கு சரவணன்- அஞ்சலி இருவரும் சேர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அதை பார்த்து பாண்டியனுக்கு ஷாக்காக இருக்கிறது. அதற்குப்பின் பாண்டியன், உன் மாமனார் சொன்னபடி கோயிலில் நீ சந்தித்து பேசும் பெண் யார்? அவருக்கும் உனக்கும் என்ன சம்மந்தம் என்றெல்லாம் கேட்டார். சரவணன் ஷாக் ஆனார்.

சரவணன், என்னுடைய கடந்த கால வாழ்க்கையில் இருந்து வந்தாலும் தங்கமயில் உடன் இருந்த நினைவுகள் என்னை ரொம்பவே காயப்படுத்தி இருக்கிறது. நான் ரொம்பவே மனவேதனையில் இருந்தேன். அப்போதுதான் என்னுடைய கல்லூரி தோழி அஞ்சலியை சந்தித்தேன். அவளிடம் பேசும் போது எனக்கு கவலை மறந்தேன். மற்றபடி எனக்கும் அஞ்சலி மனதிலும் எந்த தவறான எண்ணமும் இல்லை. நாங்கள் நட்பு ரீதியாக தான் பழகிக் கொண்டிருக்கிறோம் என்று சொன்னார். பாண்டியன், சரவணன் சொல்வதை நம்புகிறார். இன்னொரு பக்கம் வீட்டிற்கு வந்த செந்தில் பணக்கட்டுகளை பீரோவில் வைக்கப் போனார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

அப்போது மீனா வந்ததால் கைத்தறி மொத்த பணத்தையும் செந்தில் கீழே கொட்டி விட்டார். பயத்தில் செந்தில் என்ன செய்வது என்று புரியாமல் தவித்தார். மொத்த பணத்தையும் எடுத்த மீனா, யார் கொடுத்தது? எங்கு எப்படி இந்த பணம் வந்தது என்று கேள்வி மேல் கேள்வி கேட்டார். செந்தில், பதில் சொல்லவே முடியவில்லை. மீனாவும் மீண்டும் மீண்டும் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் செந்தில் ஏதோ ஒரு காரணத்தை சொல்லி மீனா விடமிருந்து தப்பித்து விட்டார். அதற்குப்பின் வீட்டில் பாண்டியன் கஷ்டப்பட்டு துணி துவைத்து கொண்டிருந்தார். கோமதி வேண்டாம் என்று சொல்லியும் பாண்டியன் கேட்கவில்லை.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் மீனா, இந்த பணத்தை மாமாவிடம் கொடுக்கலாம் சீக்கிரம் கிளம்புங்கள் என்கிறார். செந்தில் ஏதேதோ சொல்லிப் பார்க்கிறார். ஆனால், மீனா கேட்கவில்லை. செந்தில்-மீனா இருவரும் பாண்டியன் வீட்டிற்கு வருகிறார்கள். பின் பாண்டியன் கேட்டபடி 10 லட்சம் ரூபாய் பணத்தை
செந்தில் எடுத்துக் கொடுக்கிறார். பாண்டியனும் எதுவும் சொல்லாமல் வாங்க வருகிறார். கோமதி தடுக்கிறார். இருந்தாலும் பாண்டியன் கேட்கவில்லை, பணத்தை வாங்கிக் கொள்கிறார். உடனே கதிர், சீக்கிரத்திலேயே நான் பணம் கொடுக்கிறேன் என்று சொல்கிறார்.

சீரியல் ட்ராக்:

செந்திலுக்கு பணம் போனதை நினைத்து ரொம்பவே கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார். அதற்கு பின் கடையில் சரவணன், வேலை செய்து கொண்டிருக்கும்போது அஞ்சலி போன் செய்கிறார். அதை கவனித்த பாண்டியன், நான் உன் வாழ்க்கையில் தலையிடாமல் இருந்திருந்தால் நீ அஞ்சலியை கல்யாணம் செய்துகொண்டு இருந்திருப்பாய். இப்பவும் ஒன்றும் பிரச்சனை இல்லை. நல்லபடியாக விவாகரத்து முடியட்டும். உனக்கு ஆசைப்பட்ட வாழ்க்கையில் நான் தலையிட மாட்டேன். இருந்தாலும் எதற்கும் அவசரப்படாதே அமைதியாக இரு. அந்தப் பெண்ணை அடிக்கடி சந்தித்து பேசாதே என்றெல்லாம் செல்கிறார். சரவணன் சரி என்கிறார். இன்னொரு பக்கம் காந்திமதி, அரசி-குமாரை சந்தித்து பேச வைக்க முயற்சி செய்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full