செந்தில் சொன்ன வார்த்தையால் கொந்தளித்த கோமதி, அதிர்ச்சியில் பாண்டியன் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் செந்தில்-கதிர் இருவருமே பாண்டியனின் கடைக்கு வந்தார்கள். ஆனால், பாண்டியன் அங்கு இல்லை. அப்போது சரவணன், அப்பா உன் வேலையைப் பற்றிதான் பெருமையாக பேசி இருந்தார். இப்போது தான் அவசர வேலையாக கிளம்பி இருக்கிறார் என்று சொல்லி சமாளித்தார். அப்பாவை பார்ப்பதற்காக செந்திலும் அங்கே காத்துக் கொண்டிருந்தார். பாண்டியன் கோவிலில் செந்தில் பெயரில் அர்ச்சனை செய்தார். அந்த சமயம் வந்த கோமதி இதை பார்த்து விட்டார்.
பாண்டியனால் எதுவும் சொல்ல முடியவில்லை. பின் பாண்டியன்- கோமதி இருவருமே செந்திலுக்காக அர்ச்சனை செய்து சாமி கும்பிட்டார்கள். இன்னொரு பக்கம் செந்தில் வேலைக்கு நேரமாகிறது என்று கிளம்பினார். வரும் வழியில் அரசியை பார்த்தார் செந்தில். அப்போது அரசி, செந்திலுக்கு வாழ்த்து சொல்லி அனுப்பி இருந்தார். இன்னொரு பக்கம் ஆபீஸிக்கு சென்ற மீனா, மீனாவின் அப்பா இருவருமே செந்திலுக்காக காத்துக் கொண்டிருந்தார்கள். நேரம் ஆகிறது என்று மீனாவின் அப்பா சொன்னார். அப்போது செந்தில் வந்து விட்டார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
செந்தில் முதல் நாள் வேலையில் சேர்ந்து விட்டார். இன்னொரு பக்கம் கதிர்- ராஜி இருவருமே செந்தில் வேலைக்கு போனதை பற்றி பேசிக் கொண்டு இருந்தார்கள். அப்போது போலீஸ் ஸ்டேஷனிலிருந்து நகை காணாமல் போன விஷயமாக போன் செய்தார்கள். உடனே ராஜி, கதிர் இருவருமே போலீஸ் ஸ்டேஷன் போனார்கள். அங்கு ராஜியிடம் இருந்து நகை திருடியவன், நிறைய பெண்களிடம் நகையை ஏமாற்றி இருக்கிறார் என்ற விஷயம் தெரிந்து ராஜிக்கு இன்னும் கோபம் அதிகமானது. பின்னர் ராஜி உடைய கொஞ்ச நகைகள் தான் கிடைக்கிறது.
நேற்று எபிசோட்:
மீதம் உள்ள நகைகளை கூடிய சீக்கிரமே கண்டுபிடித்து தருவதாக போலீஸ் கூறி இருந்தார்கள். அதற்குப்பின் கதிர், எந்த நம்பிக்கையில் நீ அவனை காதலித்தாய் என்றெல்லாம் கேட்க, ராஜி ரொம்ப எமோஷனலாக பேசி இருந்தார். அதற்குப் பின் கதிர்- ராஜி இருவருமே லோன் விஷயமாக பேங்கிற்கு சென்று இருந்தார்கள். அப்போது பேங்கில் இருந்தவர், லோன் வாங்குவது பற்றி எல்லாம் விசாரித்தார்கள். அதோடு நம்பிக்கையானவர் உங்களுக்கு சப்போர்ட் செய்ய வேண்டும் என்றார். இதனால் ராஜிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ராஜி, என்னிடம் இருக்கும் நகையை வைத்து லோன் அப்ளை பண்ணலாம் என்கிறார். அதற்கு கதிர், இந்த நகையை உங்கள் வீட்டில் கொடுத்துவிடு. நான் லோன் பிரச்சனையை பார்த்து கொள்கிறேன் என்று சொல்கிறார். அதற்குப்பின் வீட்டில் எல்லோருமே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அப்போது மீனா, பாண்டியனிடம் பேச போகிறார். ஆனால், பாண்டியன் கொஞ்சம் கூட முகம் கொடுத்து பேசாமல் மீனாவை திட்டுகிறார். இதையெல்லாம் கேட்டு கோபப்பட்ட செந்தில், மீனா லோன் போட்டது தான் உங்களுக்கு பிரச்சனையா? நீங்கள் கொடுத்த டார்ச்சலால் தான் நான் இந்த வேலைக்கு போனேன். எனக்காக இந்த வீட்டில் பணம் கொடுக்க யார் இருக்கிறார்கள்? மீனா தான் உதவி செய்தார். அதோடு அப்பா கொடுத்த 10 லட்சம் பணத்தை தான் நான் மீனா அப்பாவிடம் கொடுத்தேன்.
சீரியல் ட்ராக்:
வீட்டில் இந்த உண்மையை மீனாவே செல்வதாக இருந்தார். அதற்குள் பணம் தேவை என்பதால் என்ன செய்வது என்று புரியாமல் இருந்தேன். மீனா தான் லோன் போட்டு கொடுத்தார். நீங்கள் அவளையே அவமரியாதையாக பேசுகிறீர்கள் என்று சொன்னார். இதைக் கேட்டவுடன் கோபத்தில் கோமதி, சொந்த வீட்டிலேயே திருடுவியா என்ற செந்திலை அடிக்கிறார். இதெல்லாம் கேட்ட பாண்டியன், எல்லா வீட்டிலும் கஷ்டப்படுத்துவது போல உங்களை கஷ்டப்படுத்துகிறேனா? நான் ஒரு அப்பனாக எல்லாம் செய்கிறேன் என்று சொன்னவுடன் செந்தில், நீங்கள் நல்ல அப்பாவே கிடையாது என்று சொல்கிறார். அதைக் கேட்டு பாண்டியன் அதிர்ச்சி ஆகிறார். வீட்டில் உள்ள எல்லாருமே செந்திலை சமாதானப்படுத்த பார்க்கிறார்கள். ஆனால், அவர் கேட்கவே இல்லை இத்துடன் சீரியல் முடிகிறது.