தங்கமயிலால் செந்தில்-மீனா இடையே வெடித்த கலவரம், மீனா அப்பா சொன்ன விஷயம் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் மனம் நலம் பாதிக்கப்பட்ட ஒருவர் பாண்டியன் வீட்டிற்குள் நுழைந்து விட்டார். அவரை பார்த்துவிட்டு அரசி பயந்து போய் கத்தினார். அரசி சத்தத்தை கேட்டு அப்பத்தா, குமார் இருவரும் வந்தார்கள். பின் அந்த மனநலம் பாதிக்கப்பட்டவரை குமார் துரத்திவிட்டு அரசியை சமாதானம் செய்தார். அதற்குப்பின் சரவணன், அஞ்சலியுடன் ஃபோனில் பேசிக் கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் கோமதி பாண்டியனுக்கு சாப்பாடு பரிமாறினார். பாண்டியன் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். கோமதி கோர்ட்டில் நடந்தது எல்லாம் சொல்லி சரவணன் வாழ்க்கை பற்றி பேசிக்கொண்டிருந்தார்.
பாக்கியம், உன்னால் அவர்கள் கை காலில் விழுந்து கெஞ்சி விவாகரத்து வேண்டாம் என்று சொல்ல முடியவில்லை. எதற்கு இப்படி இருக்கிறாய்? என் உயிரை வாங்காதே, இங்கிருந்து கிளம்பு. எங்கேயாவது போய் செத்துப் போ என்றெல்லாம் ரொம்ப மோசமாக திட்டி விட்டார். இதனால் மனமுடைந்த தங்கமயில் வீட்டை விட்டு வெளியேறினார். அதற்குப்பின் தங்கமயில் நேராக சரவணன் பார்க்கத்தான் போனார். சரவணன், தங்கமயில் சொல்ல வருவதை கூட காதில் கேட்கவில்லை. ரொம்ப கடுமையாக திட்டி அனுப்பி விட்டார். தங்கமயில் கடையிலிருந்து வெளியே போவதை அஞ்சலி பார்த்து விட்டார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
சரவணன், அவர் என் மனைவி. சின்ன சண்டை என்று விவாகரத்து விஷயத்தை சொல்லாமல் விட்டார்.
பின் மனமுடைந்த தங்கமயில் செத்துவிடலாம் என்று யாரும் இல்லாத இடத்திற்கு போனார். அந்த வழியாக வந்த மீனா, தங்கமயிலை பின் தொடர்ந்து போனார். பின் தங்கமயில், கிணற்றின் மீது ஏறி நின்று குதிக்கப் போனார். உடனே அங்கு வந்த மீனா தடுத்து நிறுத்தி விசாரித்தார். அப்போது தங்கமயில், தன் அம்மா சொன்னதையும் சரவணன் திட்டியதையும் சொல்லி எமோஷனலாக அழுதார். பின் மீனா, தங்கமயிலை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து சென்றார். இன்னொரு பக்கம் கதிர்- ராஜி இருவரும் வீட்டிற்கு வந்து விட்டார்கள்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் தங்கமயிலை வீட்டிற்கு அழைத்து வந்த மீனா ஆறுதல் சொல்லிவிட்டு சாப்பாடு கொடுக்கிறார். அந்த சமயம் பார்த்து செந்தில் வந்து விடுகிறார். தங்கமயிலை பார்த்தவுடன் செந்தில் பயங்கரமாக கோபப்படுகிறார். மீனாவிடம் சண்டை எல்லாம் போடுகிறார். தங்கமயில், என்னால் பிரச்சனை வேண்டாம். நான் கிளம்புகிறேன் என்கிறார். மீனா, தங்கமயிலை தடுத்து நிறுத்தி செந்தில் இடம் எடுத்துச் சொல்லி புரிய வைக்க பார்க்கிறார். ஆனால், மீனா சொல்வதை செந்தில் கேட்கவில்லை. சண்டை போட்டுவிட்டு செந்தில் தன்னுடைய அம்மா வீட்டிற்கு சென்று விடுகிறார்.
சீரியல் ட்ராக்:
செந்தில், தன் வீட்டில் நடந்ததை எதுவும் சொல்லாமல் அமைதியாகி விடுகிறார். பின் ராஜி படிப்பு விஷயத்தை பற்றி எல்லோரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், செந்தில் தன்னுடைய மாமனார் வீட்டிற்கு சென்று நடந்ததை எல்லாம் சொல்கிறார். அப்போது மீனாவின் அம்மா போன் செய்து கண்ட மேனிக்கு திட்டுகிறார். அதற்குப்பின் மீனாவின் அப்பா, நீங்கள் சொந்தமாக வீடு வாங்க வேண்டாமா? லஞ்சம் வாங்குவது ஒரு பெரிய விஷயம் இல்லை என்று செந்திலுக்கு தப்பு தப்பாக சொல்லிக் கொடுக்கிறார். மறுநாள் காலையில் செந்தில் மீண்டும் வீட்டிற்கு வருகிறார். அப்போது மீனா, தங்கமயிலை அழைத்துக் கொண்டு கிளம்புகிறார்.