லஞ்ச ஒழிப்பு துறையினரின் அதிரடி ஆக்சன், சிக்கி கொண்டாரா செந்தில்? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
லஞ்ச ஒழிப்பு துறையினரின் அதிரடி ஆக்சன், சிக்கி கொண்டாரா செந்தில்?
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் சரவணன், நான் ரொம்பவே வலி வேதனை கஷ்டங்கள் எல்லாம் அனுபவித்து விட்டேன். குழந்தையை நான் பார்த்துக் கொள்கிறேன். ஆனால், அவளுடன் சேர்ந்து வாழ முடியாது. என்னை புரிந்து கொள்ளுங்கள் என்றார். சரவணன் நிலை கண்டு பாண்டியன்- கோமதி இருவரும் எதுவும் பேச முடியாமல் தவித்தார்கள். தங்கமயில்- சரவணன் வாழ்க்கையை நினைத்து பாண்டியன் குடும்பமே கவலையில் இருக்கிறது. இன்னொரு பக்கம் சரவணன் பற்றி சக்திவேல் குடும்பத்தில் எல்லோரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது சக்திவேல், குமாரின் கல்யாணத்தை பற்றி பேசிக் கொண்டிருந்தார்.
சுகன்யா, அரசியை குமாருக்கு திருமணம் செய்து வைக்கலாம் என்றார். இதை கேட்டு முத்துவேல் எல்லோருமே ஷாக் ஆனார்கள். பாண்டியன், தன் மகனின் வாழ்க்கை நினைத்து ரொம்ப எமோஷனலாக வருத்தப்பட்டு கொண்டிருந்தார். அப்போது வந்த பழனி, என்ன மாமா? என்று விசாரித்தார். பாண்டியன், என் மகன் ஒரு பெண்ணை காதலிக்கிறார் என்ற போது வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். நானாக பார்த்த கல்யாணமும் சரியில்லை. என் மகன் ரொம்பவே மனமுடைந்து போயிருந்தார். நான் நல்ல அப்பாவே இல்லை என்று வருத்தப்பட்டு பேசி இருந்தார். இது எல்லாம் கேட்டு சரவணன் அழுதார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
தங்கமயில் வேலைக்கு தயாராகி கிளம்புகிறார். அப்போது பாக்கியம், இப்படி அமைதியாக இருந்தால் அவன் வேறு ஒரு திருமணம் செய்து கொண்டு சென்று விடுவான். நீ குழந்தையை எப்படி வளர்ப்பாய்? என்றெல்லாம் கேட்கிறார். தங்கமயில், நான் விவாகரத்து கொடுப்பதில் உறுதியாக இருக்கிறேன். என் குழந்தையை நான் பார்த்துக் கொள்கிறேன். இதைப் பற்றி நீங்கள் கவலைப்பட தேவையில்லை என்றெல்லாம் தன்னுடைய அம்மாவிடம் சண்டை போட்டுவிட்டு கிளம்புகிறார். இன்னொரு பக்கம் சரவணன், கதிரை அழைத்துக் கொண்டு அஞ்சலியின் வீட்டிற்கு செல்கிறார். சரவணன் பார்த்தவுடன் அஞ்சலியின் அப்பா, அம்மா கோபப்படுகிறார்கள்.
சீரியல் ட்ராக்:
பின் சரவணன், அஞ்சலியிடமும் அவருடைய பெற்றோர்களிடமும் மன்னிப்பு கேட்கிறார். அப்போது சரவணன், தன்னுடைய வாழ்க்கையில் நடந்ததை பற்றியும் அஞ்சலியை சந்தித்த விதத்தை எல்லாம் சொல்லி எமோஷனலாக பேசுகிறார். அதைக் கேட்டு அஞ்சலி அழுகிறார். இன்னொரு பக்கம் செந்தில் தான் வாங்கிய லஞ்சப் பணத்தை பீரோவில் வைத்து கொண்டிருக்கிறார். அதை மீனா கவனித்து விடுகிறார். மீனா, என்ன பணம்? எப்படி வந்தது? என்றெல்லாம் கேட்கிறார். செந்தில் ஏதேதோ சொல்லி அங்கிருந்து கிளம்பி விடுகிறார்.
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகிருக்கும் ப்ரோமோவில் செந்தில் லஞ்ச பணத்தை எல்லாம் பீரோவில் வைத்திருப்பதை மீனா பார்த்து விடுகிறார். மீனா, எப்படி வந்தது? உங்கள் சம்பளம் எனக்கு தெரியும்? என்ன மறைக்கிறீர்கள்? என்றெல்லாம் கேட்கிறார். ஆனால், செந்தில் ஏதேதோ சொல்லி அங்கிருந்து கிளம்பி விடுகிறார். அலுவலகத்தில் செந்தில் ஒரு வேலையை முடித்து தந்தால் பணம் தருகிறேன் என்று அட்டெண்டர் சொல்லுகிறார். செந்தில், லஞ்ச பணத்தை நீயே வைத்துக் கொள் என்று சொல்கிறார். அந்த சமயம் பார்த்து லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் வந்து விடுகிறார்கள்.