சரவணன் நிலையை நினைத்து பாண்டியனை அசிங்கப்படுத்திய செந்தில் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 22/12/2025

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் தங்கமயில், இங்கே தான் இருப்பேன் என்றார். பின் கதவை மூடிவிட்டு கோமதி உள்ளே வந்து விட்டார். இதையெல்லாம் கவனித்த சரவணன், தங்கமயில் இடம் சண்டை போட வெளியே வந்தார். பின் கோமதி, சரவணனை ரூமிற்குள் செல்ல சொன்னார். இன்னொரு பக்கம் இதுதான் சந்தர்ப்பம் என்று சக்திவேல் தேவையில்லாமல் பாண்டியன் குடும்பத்தை அவமானமாக பேசிக் கொண்டிருந்தார். பின் கோமதி, தங்கமயில் அம்மாவிற்கு ஃபோன் செய்து நடந்ததை எல்லாம் சொல்லி தங்கமயிலை அழைத்து செல்ல சொன்னார்கள்.

தங்கமயிலின் அம்மா, அப்பா இவருமே பாண்டியன் வீட்டிற்கு வந்து விட்டார்கள். தங்கமயில் அம்மா எவ்வளவு கதவு தட்டியுமே கோமதி கதவை திறக்கவில்லை. உடனே பாக்கியா ரொம்ப மோசமாக பாண்டியன் குடும்பத்தை வெளியில் இருந்து எல்லோரிடமும் கதை சொல்லிக் கொண்டிருந்தார். இதனால் கோபப்பட்ட சரவணன், வெளியே வந்து ஒழுங்கு மரியாதையாக இங்கு இருந்து கிளம்புங்கள். இன்னும் எவ்வளவு பொய் சொல்ல முடியுமோ உங்கள் மகளை உங்களுடன் வைத்துக்கொண்டு சொல்லுங்கள் என்றெல்லாம் திட்டி இருந்தார். பதிலுக்கு பதில் பாக்யாவும் சரவணனுக்கு பதில் கொடுத்தார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

கொந்தளித்த கோமதி, பாக்கியாவிடம் சண்டைக்கு சென்றார். ஒரு கட்டத்தில் சரவணன் என்னுடைய சாவிற்கு காரணம் நீங்கள் தான் எழுதி வைத்து செத்து விடுவேன் என்றார். இதைக் கேட்ட பாண்டியன் திட்டுகிறார். பின் சரவணன், என்னால் இவளுடன் சேர்ந்து வாழ முடியாது. விவாகரத்து வாங்கி கொடுங்கள் என்றார். இதை கேட்டு தங்கமயில் ஷாக் ஆனார். பாக்கியா, நீங்கள் உங்கள் முடிவை சொல்லிவிட்டீர்கள். நானும் உங்களை சும்மா விடமாட்டேன். கோர்ட்டு கேஸ் என்று உங்கள் குடும்பத்தைச் சந்தி சிரிக்க வைப்பேன் என்று சவால் விட்டு சென்றார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் செந்தில், நன்றாக தீர விசாரித்து திருமணம் செய்திருந்தால் இந்த பிரச்சனையே இல்லை. சரவணன் அண்ணனுக்கு இந்த நிலைமை வந்திருக்காது. பெற்றவர்கள் பேச்சை கேட்டது தான் தப்பு என்பது போல பேசுகிறார். இதைக் கேட்டு கோமதிக்கு பயங்கர கோபம் வருகிறது. உடனே செந்தில், நானும் கதிரும் காதல் திருமணம் செய்து வந்தபோது என்ன பேச்சு பேசினார் அப்பா. இப்போது அவர் பார்த்து செய்து வைத்த கல்யாணம் எந்த லட்சணத்தில் இருக்கிறது என்று குத்தி காட்டிக் கொண்டிருக்கிறார். இதனால் கோமதி, செந்திலை திட்டுகிறார். பின் மீனா, செந்திலை அழைத்துக் கொண்டு அங்கிருந்து செல்கிறார்.

சீரியல் ட்ராக்:

இன்னொரு பக்கம் சரவணன், விவாகரத்து கேட்டதை நினைத்து தங்கமயில் புலம்பி கொண்டிருக்கிறார். பாக்யா, எப்படியாவது உன்னை நான் அந்த வீட்டில் வாழ வைப்பேன் என்று எல்லாம் சொல்கிறார். அதற்கு
தங்கமயில், மீனாவிற்கு விடாமல் போன் செய்து கொண்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் மீனா போன் பேசுகிறார்.
அப்போது தங்கமயில், நான் உங்களுக்கு வேண்டாதவள் ஆகி விட்டேனா? என்னுடைய நிலைமையை யாரும் யோசிக்க இல்லையா என்றெல்லாம் அழுது புலம்புகிறார். ஆனால், மீனா எதுவுமே சொல்லாமல் போனை வைத்து விடுகிறார். இன்னொரு பக்கம் பாண்டியன், சரவணன் கடைக்கு செல்கிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது

behindtalkies AMP · Quick view
View full