மீனாவிடம் கடுமையாக பேசும் செந்தில், மனவேதனையில் சரவணன் செய்தது - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் சரவணன், பாண்டியன் இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போது அதை பார்த்த சக்திவேல், வேண்டும் என்று பாண்டியன் குடும்பத்தை கேவலப்படுத்தி தனக்கு தெரிந்தவரிடம் பேசிக் கொண்டிருந்தார். பாண்டியன் எதுவும் பேசாமல் அங்கு இருந்து கிளம்பி விட்டார். இன்னொரு பக்கம் சரவணன், வாழ்க்கை நினைத்து கோமதி அழுது கொண்டிருந்தார். பின் கதிர்- ராஜி இருவருமே கோமதிக்கு ஆறுதல் சொன்னார்கள். இருந்தாலும் கோமதியின் மனது கேட்கவில்லை. தன் மகனின் வாழ்க்கை என்ன ஆகுமோ? என்ற கவலையில் இருந்தார்.
பழனி, சரவணன் நிலைமையை நினைத்து ரொம்பவே வருத்தத்தில் இருந்தார். சுகன்யா வேண்டும் என்று பாண்டியன் குடும்பத்தை குறை சொன்னார். ஆனால், பழனி அதையெல்லாம் கண்டு கொள்ளவே இல்லை. பின் பழனி, சரவணனுக்கு போன் செய்தார். சரவணன் எடுக்க வில்லை. அப்போது கதிர், போன் எடுத்து பேசுங்கள். மாமா உங்களிடம் பேச விரும்புகிறார் என்றார். சரவணன், நேரடியாக பழனி கடைக்கு வந்து விடுகிறார். சரவணனை பார்த்தவுடன் பழனிக்கு எமோஷனல் ஆகி அழுதார். பின் சரவணன், நடந்தது எல்லாம் பழனியிடம் சொல்லி ரொம்பவே வருத்தப்பட்டு பேசி இருந்தார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
பழனியும் சரவணனுக்கு ஆறுதல் சொன்னார். இன்னொரு பக்கம் பாண்டியன், சரவணன் எங்கே? ஒன்னும் பிரச்சனை இல்லையா? என்றார். அதற்கு கதிர், அதெல்லாம் ஒன்றும் இல்லை. அண்ணன் டீ கடைக்கு போயிருக்கிறார் என்று சமாளித்தார். அதற்குப்பின் கடைக்கு வந்த சரவணன், பழனி மாமாவிடம் பேசினேன். அவர் தனியாக சந்தித்து பேசலாம் என்று சொல்லி இருந்தார். நீயும் என்னுடன் வா? என்று கதிரை அழைக்கிறார். அவரும் சரி என்றார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் மீனா, தங்கமயில் பார்த்து வந்த விஷயம் அறிந்த செந்தில்
கோபப்படுகிறார். மீனா தன் தரப்பு நியாயம் எடுத்து சொல்லியுமே செந்தில் கேட்கவில்லை. ரொம்ப கடுமையாக மீனாவிடம் பேசிவிட்டு செல்கிறார். இன்னொரு பக்கம் கதிர், சரவணன், பழனி மூவருமே சேர்ந்து குடித்துவிட்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது சரவணன், தங்கமயில் தன் வாழ்க்கை சீரழிந்ததை நினைத்து ரொம்ப எமோஷனலாக கோபப்பட்டு பேசிக் கொண்டிருக்கிறார்.
சீரியல் ட்ராக்:
பழனி, கதிர் இருவரும் ஆறுதல் சொல்லியுமே சரவணன் ஏற்றுக்கொள்ளவில்லை. தன்னுடைய கோபத்தின் வெளிப்பாட்டை காண்பித்துக் கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் பாண்டியன், சரவணன் வீட்டுக்கு வரவில்லை என்று வேதனைப்பட்டுக் கொண்டிருக்கிறார். அப்போது சரவணன், கதிர் இருவரும் குடித்திருப்பதை பாண்டியன் கண்டுபிடித்து விடுகிறார். இருந்தாலும் பெரிதாக திட்டாமல் பாண்டியன் சென்று விடுகிறார். அதற்குப்பின் ரூமிற்கு சென்ற கதிர், போதையில் ராஜி போலீசாக வேண்டும். நீ நன்றாக படி என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.