தங்கமயிலால் செந்தில்-மீனா இடையே ஏற்படும் குழப்பம், தன் காதலியை சந்தித்த சரவணன் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் செந்தில், கோமதி சொன்ன விஷயத்தை பற்றி பேசி இருந்தார். மீனா, காதலித்து கல்யாணம் செய்து தன் தந்தையை ஏமாற்றியதைப் பற்றி சொல்ல, செந்தில் வருத்தப்பட்டு பேசி இருந்தார். உடனே மீனா, நம்முடைய கல்யாண விஷயத்தில் என் அப்பா வருத்தப்பட்டு இருக்க மாட்டாரா? நீங்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை என்று சொன்னவுடன் செந்திலால் எதுவும் பேச முடியவில்லை, அமைதியாகி விட்டார்.
கோமதி, பாண்டியனை பேச வைப்பதற்காக மூச்சு விட முடியாதது போல நடித்தார். அரசி- சரவணன் எல்லோருமே பதறினார்கள். ஆனால், இது டிராமா என்று தெரிந்து கொண்டு பாண்டியன் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். கோமதி ரொம்பவே ஓவர் ஆக்டிங் பண்ணுகிறார். இதனால் கோபத்தில் பாண்டியன் திட்டினார். பின் வீட்டில் உள்ள எல்லோருக்குமே கோமதி செய்தது டிராமா என்று புரிந்து விட்டது. இன்னொரு பக்கம் செந்தில், மீனா இருவரும் சண்டையை மறந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
அப்போது செந்தில், என்னிடம் ஆவது நீ உண்மையை சொல்லி இருக்கலாம் என்றார். மீனா, உங்களுக்கு உண்மை தெரிந்தது என்றால் மாமா உங்களை சும்மா விட்டிருக்க மாட்டார் என்று சொல்வதால் செந்தில் அமைதியாகி விட்டார். அதற்குப்பின் கோமதி, பாண்டியனுக்காக சமைத்து வைத்து சாப்பிட கூப்பிட்டார். ஆனால், கோபத்தில் பாண்டியன் சாப்பிடவில்லை. கோமதி, இனிமேல் நான் இவரிடம் போய் நிற்கப் போவதில்லை. இருந்தாலும் இவர் பேச வேண்டும் என்று பூஜை ஒன்று ஏற்பாடு செய்திருக்கிறேன். அது செய்யப்போகிறேன் என்று சரவணனிடம் புலம்பினார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சரவணன் கோயிலுக்கு சென்றிருக்கிறார். அங்கு சரவணன் முன்னாள் காதலி அஞ்சலியும் வந்திருக்கிறார். சரவணன், அஞ்சலி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து ஷாக் ஆக்கினார்கள். பின் சரவணன், அஞ்சலியிடம் திருமண வாழ்க்கையை பற்றி விசாரிக்கிறார். அஞ்சலி, நான் என் அம்மா வீட்டில் தான் இருக்கிறேன். அதை பற்றி பேசாதே என்கிறார். ஆனால், சரவணன் தன்னுடைய திருமண வாழ்க்கையை பற்றி எதுவுமே சொல்லவில்லை. இன்னொரு பக்கம் செந்தில்- மீனா இருவரும் வேலைக்கு சென்று கொண்டிருக்கிறார்கள்.
சீரியல் ட்ராக்:
கோமதி, மீனாவிடம் போன் செய்து விசாரிக்கிறார். அதற்குப்பின் தங்கமயில், மீனாவிற்கு ஃபோன் செய்கிறார். அதை பார்த்து செந்தில், உண்மை எது என்னவென்று புரியாமல் மீனாவை கண்டமேனிக்கு நடுரோட்டிலேயே திட்டி விட்டு செல்கிறார். இன்னொரு பக்கம் கதிர்- ராஜி இருவரும் சந்தோஷமாக கோச்சிங் சென்டருக்கு போகிறார்கள். அப்போது கதிருக்கு போன் செய்த கோமதி, ராஜி நல்லபடியாக பார்த்துக்கொள். அவள் மீது கோபப்படாதே. உன் அப்பா போல் இருக்காதே என்றெல்லாம் அறிவுரை செய்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.