பணத்தை திருப்பி கேட்ட மாப்பிளை அம்மா, பாண்டியன் சொன்ன வார்த்தையால் ஆடி போன செந்தில் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் அரசி, ஒவ்வொரு துணியாக வைத்து பார்த்து குமாரை வெறுப்பேத்திக் கொண்டிருந்தார். இதனால் குமார் கடுப்பாகி வீட்டிற்கு சென்று விட்டார். அரசி தனக்கு தேவையான ஷாப்பிங் செய்து கொண்டிருந்தார். பின் வீட்டிற்கு வந்த குமார், தன்னுடைய அப்பாவிடம் தினம் தினம் அரசி செய்யும் சேட்டைகள் எல்லாம் சொல்லி கொண்டிருந்தார். இதனால் கோபப்பட்ட சக்திவேல், நீ அவளுக்கு பதிலடி கொடுக்க வேண்டும். அவள் வடிக்கிற ஒவ்வொரு கண்ணீருக்கும் பாண்டியனுக்கு ரத்தம் வரவேண்டும் என்றெல்லாம் தன் மகனை ஏற்றி விட்டார். பின் குமார், அரசியை துணி கடையில் விட்டு வந்த விஷயத்தை சொன்னவுடன் சக்திவேல் சந்தோஷப்பட்டார்.
இன்னொரு பக்கம் அரசி துணியெல்லாம் எடுத்துவிட்டு குமார் கார்டை வைத்து மொத்த பணத்தையும் கொடுத்து விட்டார். பின் அக்கவுண்டில் இருந்து பணம் போன விஷயம் தெரிந்த உடன் குமார் பதறி அடித்துக் கொண்டு துணி கடைக்கு வந்தார். அப்போது அரசி, எவனாவது பின் நம்பரை போனில் சேவ் பண்ணி வைத்திருப்பானா? என்று சொன்னார். கோபத்தில் குமார், துணியைக் கொண்டு போய் கடையில் கொடு என்றார். ஆனால், அரசி முடியாது என்று சொன்னார். இன்னொரு பக்கம் தங்கமயிலை வீட்டில் உள்ள எல்லோருமே பார்த்து பார்த்து கவனித்தார்கள்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
நேற்று எபிசோட்டில் கதிர், ராஜியை வெளியே அழைத்துச் செல்ல போனார். அப்போது கோமதி, எதற்கு? என்று கேட்டார். கதிர் ஏதேதோ காரணங்களை சொல்லி ராஜியை அழைத்துக் கொண்டு போனார். பின் ராஜியை அகாடமியில் சேர்த்து விட்டார் கதிர். அப்போது கதிர், எப்படியாவது ராஜி எஸ் ஐ ஆக வேண்டும். நீங்கள் தான் துணையாக இருக்க வேண்டும் என்று சொன்னார். உடனே அகாடமி பொறுப்பாளர், நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்றார். பின் ராஜி, பீஸ் எப்படி கட்டினாய்? என்று கேட்டார். கதிர், நான் பார்த்துக் கொள்கிறேன். நீ தைரியமாக படி என்றார். அதற்கு பின் பாண்டியன், நீ அரிசியை எதற்காக கொடுமைப்படுத்துகிறாய்? அவளை நல்லபடியாக நடத்து.
நேற்று எபிசோட்:
இத்தனை வருடத்தில் முத்துவேல் என்னை பார்த்துக் கூட பேசியதில்லை. தன் மகளுக்காக மனம் உடைந்து பேசுகிறார் என்று சொன்னார். கதிர், நான் எதுவுமே செய்யவில்லை என்று சொல்லியுமே பாண்டியன் நம்பவில்லை கதிரை தான் திட்டி இருந்தார். பின் இதைப்பற்றி கதிர், ராஜிடம் பேசி இருந்தார். அப்போது ராஜி, நான் தான் குமாரை சந்தித்து பேசினேன். ஆனால், குமார் நான் சொல்வதை கேட்கவில்லை. அதற்கு பிறகு என்னுடைய அப்பாவை சந்தித்து நீங்கள் அரசியை ஒழுங்காக பார்த்துக் கொண்டால் என்னையும் அந்த வீட்டில் நன்றாக பார்த்துக் கொள்வார்கள். இல்லை என்றால் நான் கஷ்டப்பட வேண்டி இருக்கும் என்று சொன்னேன். அதனால்தான் அவர் அப்படி பேசி இருக்கிறார் என்றார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்று எபிசோட்டில் மீனா- செந்தில் இருவருமே பணத்தைப் பற்றி பேசிக் கொண்டு இருக்கிறார்கள். அப்போது செந்தில், வேலை கிடைத்த உடனே நான் உண்மையை அப்பாவிடம் சொல்லி விடுகிறேன். நீ எதைப் பற்றியும் யோசிக்காதே என்று சொல்கிறார். அதற்கு மீனா, எனக்கு ஏதோ பிரச்சனையில் மாட்டியது போலவே தோன்றுகிறது என்கிறார். அதற்குப்பின் வீட்டில் எல்லோருமே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அந்த சமயம் பார்த்து அரசிக்கு மாப்பிள்ளை பார்த்த வீட்டில் இருந்து அவருடைய அம்மா- அப்பா வருகிறார்கள். அவர்கள் சரியாக முகம் கொடுத்து கூட பாண்டியனிடம் பேசவில்லை. கேவலமாக பாண்டியன் குடும்பத்தை பற்றி பேசுகிறார்கள்.
சீரியல் ட்ராக்:
பின் அவர்கள், இந்த திருமணத்திற்காக நாங்கள் பத்து லட்சம் செலவு செய்து இருக்கிறோம். நீங்கள் தான் கொடுக்கணும் என்று சொல்கிறார். இதை கேட்டவுடன் கோமதி, பாண்டியன் ஷாக் ஆகிறார்கள். மற்றவர்கள் எடுத்துச் சொல்லியுமே மாப்பிள்ளையின் அம்மா, அப்பா இருவரும் கேட்கவில்லை. எங்கள் பணத்தை எடுத்து வையுங்கள் என்று ரொம்ப காரராக பேசுகிறார்கள். அதனால் பாண்டியன், நான் பணத்தை சீக்கிரமாகவே கொடுத்து விடுகிறேன் என்று சொல்கிறார். பின் பாண்டியன், செந்திலிடம் பணத்தை பேங்கில் இருந்து எடுத்து வர சொல்கிறார். மீனா- செந்தில் இருவருக்குமே என்ன செய்வதென்று புரியவில்லை. பயத்தில் செந்தில் புலம்பி கொண்டிருக்கிறார். பின் கடையில் செந்தில்- கதிர் இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது செந்தில் நடந்ததை கூற வருகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.