நாரதர் வேலை செய்யும் சுகன்யா, தங்கமயில் அப்பாவின் தரமான சம்பவம் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 6/10/2025

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் கோமதி தூங்காமல் அழுது கொண்டு இருக்க, பாண்டியன் ஆறுதல் சொன்னார். அதற்குப்பின் மீனா, உங்களுடன் நான் வருகிறேன். ஆனால், எனக்கு சுத்தமாக அதில் விருப்பமும் இல்லை. வீட்டில் யாரையும் கஷ்டப்படுத்த வேண்டாம் என்றார். மறுநாள் காலையில் செந்தில், பால் காய்ச்ச போகிறோம். நீங்கள் எல்லோரும் வந்துவிடனும் என்றார். பின் மீனா, எனக்கும் இந்த விஷயத்திற்கும் சம்பந்தமில்லை. இது எல்லாமே செந்தில் எடுத்த முடிவு தான் என்றார்.

கோமதி, எவ்வளவோ எடுத்துச்சொல்லி புரிய வைக்கப் போனார். ஆனால், செந்தில் கேட்கவில்லை. கோபத்தில் பாண்டியன், அவன் அரசாங்கத்து சம்பளம் வாங்குகிறான். அதனால் அப்படி தான் பேசுவான். நீ வாயை மூடிக்கொண்டு அமைதியாக இரு என்று கோமதியை திட்டினார். உடனே செந்தில், மோசமாக பாண்டியனையும், வீட்டையும் பேசி விட்டார். இதனால் பாண்டியன் ரொம்பவே உடைந்து போய் விட்டார். அதற்குப்பின் மீனா, பாண்டியனை தனியாக சந்தித்து பேசினார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

அப்போது மீனா, வீட்டை விட்டு வெளியே போக எடுத்த முடிவு செந்தில் தான். அவர் வெளியே போய் கஷ்டப்பட்டால் தான் உங்களுடைய அருமை புரியும் என்றார். அதற்கு பாண்டியன், எப்போதும் உனக்காக நாங்கள் சப்போர்ட் செய்வோம் என்று ஆறுதல் சொன்னார். இன்னொரு பக்கம் செந்தில் எதைப் பற்றியும் கவலைப்படாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது கோமதியை பார்த்து ட்ராமா செய்கிறாய் என்று செந்தில் சொல்வதால் அவர் ரொம்பவே உடைந்து போய் செந்திலை திட்டி விட்டார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் செந்தில், மீனாவின் அப்பா- அம்மாவை சந்தித்து குவாட்டரசுக்கு செல்வதைப் பற்றி பேசுகிறார். அதற்கு மீனாவின் அப்பா, உங்கள் வீட்டில் சம்மதித்தார்களா? மீனா ஒத்துக் கொண்டார்களா? என்று கேட்கிறார். அதற்கு செந்தில், மீனாவிற்கு முழு மனது இல்லை. இருந்தாலும் எனக்காக வருகிறேன் என்று ஒத்துக் கொண்டார். ஆனால், எங்கள் வீட்டில் பேசிவிட்டேன். அவர்கள் எதுவும் சொல்லவில்லை. நாளை பால் காய்ச்சப் போகிறேன். நீங்களும் வந்து விடனும் என்று சொல்வதால் மீனாவின் அப்பா- அம்மா சந்தோஷப்படுகிறார்கள்.

சீரியல் ட்ராக்:

இன்னொரு பக்கம் சுகன்யா, சக்திவேல் வீட்டிற்கு சென்று மீனா-செந்தில் இருவரும் தனியாக போவதை பற்றி சொல்கிறார். அப்போது வீட்டில் உள்ள எல்லோருக்குமே ஷாக்காக இருந்தாலும் சக்திவேல் ரொம்ப சந்தோஷப்படுகிறார். பின் அப்பத்தாவின் 75வது பிறந்தநாள் வருவதால் அதை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று முத்துவேல் சொல்கிறார். இன்னொரு பக்கம் கடையில் தங்கமயில், முட்டையை மடித்து தருவதாக சொல்லி தெரியாமல் விழித்து நிற்கிறார். அந்த சமயம் வந்த மாணிக்கம், முட்டையை நான் மடிக்கிறேன் என்று வாங்கி உடைத்து விடுகிறார். இதை பார்த்து சரவணனுக்கு பயங்கர கோபம் வருகிறது. இத்துடன் சீரியல் முடிகிறது

Tamil Behind Talkies AMP · Quick view
View full