பாண்டியன் குடும்பத்தில் இரட்டை வேஷம் போடும் சுகன்யா, தன் அப்பாவுக்காக கதறி அழும் மீனா - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 19/2/2025

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' கதிர்- செந்தில் இருவருமே பெண் வீட்டிற்கு சென்று நடந்ததை விசாரித்தார்கள். பழனி அண்ணன்கள் சொன்ன விஷயத்தை கேட்டு செந்தில்-கதிர் பயங்கரமாக கோபப்பட்டார்கள். பின் செந்தில், இதைப் பற்றி வீட்டில் சொன்னவுடன் மொத்த குடும்பமே ஷாக் ஆனது. கோபத்தில் கோமதி தன்னுடைய அண்ணன்களிடம் சண்டை போட போனார். உடனே பாண்டியன், தடுத்து நிறுத்தி விட்டார். அதற்குப்பின் பழனி போன் செய்து தன்னுடைய மச்சான்களிடம் பேசி இருந்தார். அவர்களுமே உண்மையை சொல்லாமல் நார்மலாக பேசி இருந்தார்கள்.

தங்களுடைய வேலை செய்யும் இடத்திற்கு பழனியை அவருடைய அண்ணன்கள் அழைத்து வந்தார்கள். அப்போது வந்த பாண்டியன், பழனியின் அண்ணன்களிடம் பெண் வீட்டில் சொன்ன விஷயத்தை கேட்டு சண்டை வாங்கி இருந்தார். ஆரம்பத்தில் அவர்களுமே ஏதேதோ சமாளித்தார்கள். ஆனால், ஒரு கட்டத்தில் அவர்கள் உண்மையை ஒத்துக் கொண்டார்கள். இதனால் பழனியின் அண்ணன்களுக்கும் பாண்டியனுக்கும் இடையே சண்டை நடந்தது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்2:

அப்போது பாண்டியனின் மகன்களும் அங்கு வந்து சண்டை போட்டார்கள். இருவருக்கும் இடையே அடிதடி அளவிற்கு சண்டை நடந்தது. இதையெல்லாம் உள்ளே நின்று கேட்ட பழனி கோபத்தில் தன் அண்ணன்களை திட்டி விட்டு அங்கிருந்து சென்றார். பின் கோபத்தில் வீட்டிற்கு வந்த பழனி, துணிகளை எல்லாம் பேக் செய்து சுகன்யாவுடன் வீட்டை விட்டு கிளம்பி இருந்தார். அந்த சமயம் பார்த்து அவருடைய அண்ணன்களும் வந்து விட்டார்கள். அவர்களுமே தாங்கள் செய்த தவறை ஒத்து கொண்டார்கள். இதனால் அப்பத்தா ரொம்பவே கோபப்பட்டு தன்னுடைய மகன்களை திட்டி இருந்தார்.

நேற்று எபிசோட்:

பின் பழனி, பாண்டியன் வீட்டிற்கு வந்தார். நேற்று எபிசோட்டில் பழனி, சுகன்யா வந்தது நினைத்து கோமதி ரொம்ப சந்தோஷப்பட்டு அவர்களுக்காக தடபுடலாக சமையலும் செய்தார். அதன் பின் வேலையில் இருந்து எல்லோரும் வந்தார்கள். பழனிக்காக சுகன்யா வெளியில் காத்திருந்தார். அப்போது வந்த பழனி இடம் சுகன்யா, நமக்கு ஒரு ரூம் கூட இல்லை. இந்த வீடு ரொம்ப சின்னதாக இருக்கிறது. நாம் அங்கேயே சென்று விடலாம் என்று சொன்னார். அதற்கு பழனி, வேணாம் இங்கே இருக்கலாம் என்று சொன்னார்.

இன்றைய எபிசோட்:

அதற்கு பின் பாண்டியன், தங்களின் ரூமை பழனிக்கு கொடுத்து விட்டார்கள். இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் பழனி- சுகன்யா இருவரும் ரூமில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது சுகன்யா, எனக்கு இங்கு இருக்கவே பிடிக்கவில்லை. ரூம் ரொம்ப சின்னதாக இருக்கிறது. எல்லோருக்கும் என்னால் சமைத்து கொட்ட முடியாது. நான் அடிக்கடி என்னுடைய அக்கா வீட்டுக்கு போவேன். நீங்களும் என்னுடன் வந்து விட வேண்டும். என்னை வெளியில் கூட்டிட்டு போக வேண்டும். நான் சொல்வதை தான் நீங்கள் கேட்க வேண்டும் என்று பயங்கரமாக ஆர்டர் போடுகிறார்.

சீரியல் ட்ராக்:

இது எல்லாம் பார்த்து பழனி ரொம்பவே ஷாக் ஆகி எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார். மறுநாள் காலையில் சுகன்யா, பாண்டியன் வீட்டு ஆட்கள் முன்பு நல்லவள் போல வேஷம் போட்டு வீட்டு வேலை எல்லாம் இழுத்து போட்டு செய்கிறார். இதை பார்த்து பாண்டியனுக்கு சந்தோசமாக இருக்கிறது. ஆனால், பழனி தான் உள்ளுக்குள் பயப்படுகிறார். அந்த சமயம் பார்த்து மீனாவிற்கு அவருடைய அம்மா போன் செய்து, அப்பாவிற்கு நெஞ்சுவலி வந்து விட்டது. ஹாஸ்பிடல் இருக்கிறோம் என்று சொல்கிறார். இதனால் மீனா ரொம்பவே கதறி அழுகிறார். அதற்குப்பின் மீனா, செந்தில் இதுவருமே ஹாஸ்பிடலுக்கு செல்கிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full