பழனியை அசிங்கப்படுத்தும் சுகன்யா, பாண்டியனுக்கு தெரியாமல் அரசி செய்யும் வேலை - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 10/3/2025

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சுகன்யா, முறைத்துக்கொண்டே நான் வரவில்லை என்றார். பழனியால் எதுவும் பேசாமல் அங்கிருந்து வந்து விட்டார். பின் பாண்டியன் வீட்டில், படம் பார்க்கவில்லையா? இதற்கு தான் கிளம்பினாயா? என்றெல்லாரும் கேள்வி கேட்டார்கள். பழனி, உண்மை எதுவுமே பேச முடியாமல் தயங்கி இருந்தார். பழனியின் நிலைமை புரிந்து கொண்டு கதிர்- செந்தில் இருவருமே அவருக்கு சப்போர்ட் செய்து பேசி இருந்தார்கள். ஆனால், வழக்கம்போல் பாண்டியன் எல்லோரையும் திட்டிக் கொண்டிருந்தார்.

அதற்குப் பின் மாடியில் கதிர்,செந்தில், சரவணன், பழனி நான்கு பேருமே கலகலப்பாக பேசிக் கொண்டிருந்தார்கள். கவலை எல்லாம் மறந்து பழனி சந்தோஷமாக இருந்தார். ஆனால், கதிருக்கு பழனியின் நடவடிக்கையில் சந்தேகம் வந்தது. இன்னொரு பக்கம் தங்கமயில், தன்னுடைய அம்மாவிடம் போன் பேசினார். அப்போது அவர், நீ கர்ப்பமானால் வேலைக்கு நிறுத்தி விடுவார்கள். அதற்கான ஏற்பாடு செய் என்றார். இன்னொரு பக்கம் அரசி படிப்பதாக சொல்லி எதிர் வீட்டில் இருக்கும் குமாரிடம் கடலை போட்டுக் கொண்டிருந்தார். இதை சுகன்யா பார்த்து விட்டார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

அரசியிடம் சுகன்யா, குமாரை திருமணம் செய்து கொள். உனக்கு நான் துணையாக இருக்கிறேன். இரண்டு வீட்டு ப்ரச்சனை தீர்ந்து விடும் என்று அவருடைய மனதை சலவை செய்தார். அரசியுமே சுகன்யா சொல்வதற்கெல்லாம் சரி என்றார். அந்த சமயம் பார்த்து மீனா வெளியே வந்தவுடன் இருவரும் பேச்சை மாற்றிக் கொண்டார்கள். அதற்குப்பின் அரசி போன் பேசிக் கொண்டிருப்பதை பார்த்த கோமதி கோபப்பட்டு திட்டி இருந்தார். அதற்கு பின் கோமதி, அரசி போனை வாங்கி செக் பண்ணி இருந்தார். பின் அரசியை திருப்பி திருப்பி கோமதி கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார்.

கடந்த வாரம் எபிசோட்:

இதையெல்லாம் பார்த்து மீனாவுக்கு ஒன்றுமே புரியவில்லை. உடனே மீனா, அரசி எந்த தவறும் செய்ய மாட்டாள் என்று அவளுக்கு சப்போர்ட் செய்தார். ஆனால், கோமதிக்கு தான் பயமாக இருந்தது. அதற்குப் பின் பழனி, சுகன்யா வீட்டுக்கு வருவாளா என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது வந்த செந்தில், கவர்ன்மென்ட் வேலை ரெடியாக இருந்தது. 10 லட்சம் பணம் கட்ட வேண்டும் என்று சொன்னார். உடனே பாண்டியன் வந்தார். பின் பாண்டியன் இடம் கதிர், செந்திலுக்கு கிடைக்கும் கவர்மெண்ட் வேலையை பற்றி சொன்னார். அது மட்டும் இல்லாமல் பணம் கட்ட வேண்டும் என்று சொன்னவுடன் பாண்டியன் ஷாக் ஆனார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் பாண்டியன், அரசாங்க வேலையெல்லாம் வேண்டாம். இருக்கிற வேலையை செய் என்று திட்டி விட்டு செல்கிறார். அதற்கு பின் சுகன்யாவை பார்க்க பழனி அவர் அண்ணன் வீட்டிற்கு போகிறார். ஆனால், அங்கு சுகன்யா வழக்கம்போல் பழனியை வறுத்தெடுத்து நான் இங்குதான் இருப்பேன் என்று சொல்லிவிடுகிறார். அதனால் பழனியால் எதுவும் பேச முடியாமல் அங்கிருந்து கிளம்பி விடுகிறார். இதை எல்லாம் கேட்ட ராஜியின் அம்மா, பழனி தம்பி ரொம்ப நல்லவர்.

சீரியல் ட்ராக்:

அவரிடம் பொறுமையாக பேசு, கோபப்படாதே என்று அறிவுரை சொல்கிறார். ஆனால், அதை எல்லாம் சுகன்யா கண்டு கொள்ளவே இல்லை. அதற்குப் பின் கதிர் தன்னுடைய நண்பருக்கு திருமணம் நடக்கிறது என்று பொய் சொல்லி ராஜியை வெளியே அழைத்து செல்கிறார். ஆனால், பாண்டியன் இந்த முறை எதுவுமே சொல்லாமல் அமைதியாக இருக்கிறார். இன்னொரு பக்கம் அரசி வீட்டிற்கு தெரியாமல் படம் பார்ப்பதற்காக குமாருடன் செல்கிறார். அப்போது குமார், அரசிக்கு பரிசு கொடுக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது

behindtalkies AMP · Quick view
View full