முன்னாள் கணவனை நினைத்து பயப்படும் சுகன்யா, கதிர் சொன்ன வார்த்தை - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் குமார் திண்ணையில் படுத்து கொண்டிருந்தார். இதை பார்த்த குமாரின் குடும்பத்தினர் ரொம்பவே கஷ்டப்படுகிறார்கள். இது எல்லாம் பார்த்த அரசிக்குமே சங்கடமாக இருந்தது. பின் குமாரை சந்தித்த அரசி, நீ தேவை இல்லாமல் பழிவாங்கும் எண்ணத்தை விடு. நான் நன்றாக தான் இருக்கிறேன். என்னை நன்றாக பார்த்துக் கொள்கிறார்கள். நீ இப்படி இருப்பது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது என்றெல்லாம் பேசி இருந்தார்.
இதைக் கேட்ட சக்திவேல், ராஜியை திட்டி என் மகன் மீது கொடுத்த கேசை வாபஸ் வாங்க சொல் என்று அனுப்பி விட்டார். அதற்குப்பின் தங்கமயில், தன் அம்மா வீட்டிற்கு சென்று நடந்ததை சொன்னார் . இதைக் கேட்ட தங்கமயில் அம்மா, நீ தான் உன் கணவனை கைக்குள் வைக்க வேண்டும். தயவு செய்து இங்கு வந்து விடாதே என்று சொல்வதால் ரொம்ப வேதனையில் தங்கமயில் அழுதார். பின் தங்கமயில், சரவணன் போன் எடுக்கவில்லை என்று கடைக்குப் போனார். பின் சரவணன், தங்கமயில் திட்டி அங்கிருந்து அனுப்பி விட்டார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
நேற்று எபிசோட்டில் சரவணன் திட்டியதால் வேதனையில் அழுது கொண்டு தங்கமயில் வீட்டிற்கு வந்து விட்டார். வீட்டில் அதை பெரிதாக காண்பிக்காமல் நார்மலாக தங்கமயில் பேசினார். ஆனால், கோமதி கர்ப்பம் இல்லாத விஷயத்தை குத்தி காண்பது போல பேசியதால் தங்கமயிலுக்கு இன்னும் கொஞ்சம் வருத்தமாக இருந்தது. இன்னொரு பக்கம் டியூஷன் நடத்தும் இடத்தில் கதிரின் லோன் விஷயமாக ராஜி பேசினார். அவர்களுமே உதவி செய்வதாக சொன்னார்கள். அதேபோல் கதிரின் நண்பர்களிடமும் லோன் விசயமாக ராஜி பேசினார். பின் ராஜி-கதிர் இருவருமே வந்து கொண்டிருந்தார்கள். அப்போது லோன் விஷயத்தைப் பற்றி ராஜி சொன்னார். கோபத்தில் கதிர், நீ எனக்காக எங்கும் அலைய வேண்டாம்.
நேற்று எபிசோட்:
நீ உன்னுடைய வேலையை மட்டும் பாரு என்று கோபமாக பேசினார். இதனால் கோபப்பட்ட ராஜி, இனிமேல் நான் உன் விஷயத்தில் தலையிட மாட்டேன் என்று சொன்னார். அதற்கு பின் உறவினர் வீட்டு விசேஷத்திற்கு பழனி-சுகன்யா இருவருமே பைக்கில் வந்து கொண்டிருந்தார்கள். அப்போது டிராபிக் அதிகமாகுவதால் ஒரு இடத்தில் பழனி நின்றார். அந்த இடத்தில் தான் சுகன்யாவின் முன்னாள் கணவன் நின்று கொண்டிருந்தார். அவரை பார்த்தவுடன் பயந்து போன சுகன்யா, இங்கிருந்து வண்டியை எடுங்கள் எடுங்கள் என்று பழனி இடம் சொன்னார். பழனிக்கு ஒன்றுமே புரியவில்லை. ஆனால், சுகன்யா சொல்வதால் வண்டியை அங்கிருந்து எடுத்து சென்று விட்டார் பழனி.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் பழனி நன்றாக குறட்டை விட்டுக்கொண்டு தூங்கியிருக்கிறார். சுகன்யா, தன்னுடைய முதல் கணவரை பார்த்ததால் ரொம்பவே பயத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். இதை பார்த்து பழனி, சுகன்யாவை சமாதானம் செய்து தூங்க வைக்கிறார். மறுநாள் காலையில் ப்ராக்டிஸ் செய்வதற்காக கதிர்- ராஜி இருவருமே கிரவுண்டுக்கு சென்றிருக்கிறார்கள். கதிர் திட்டியதால் ராஜி கோபத்தில் தான் இருக்கிறார். கதிர் சொல்வதையெல்லாம் ஒழுங்காகவே கேட்கவில்லை.
சீரியல் ட்ராக்:
இதை பார்த்த கதிர், நீ எனக்காக கஷ்டப்பட வேண்டாம். அதற்காகத்தான் நான் சொன்னேன். நீ உன்னுடைய படிப்பில் மட்டும் கவனம் செலுத்து. உன்னால் முடியும், நீ சீக்கிரம் டிராவல்ஸ் ஆரம்பிப்பாய் என்று எனக்கு என்கரேஜ் பண்ணு. அதுவே போதும் என்றெல்லாம் சொல்வதால் ராஜி அமைதியாகிறார். இன்னொரு பக்கம் செந்தில், தன்னுடைய முதல் மாத சம்பளத்தில் என்னெல்லாம் வாங்கலாம் என்று லிஸ்ட் போட்டு வைத்திருக்கிறார். அதை பார்த்த மீனா சந்தோஷப்படுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.