பாக்கியத்தை மோசமாக பேசும் தங்கமயில், வேதனையில் தவிக்கும் பாண்டியன் குடும்பம் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 18/12/2025

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் வீட்டிற்கு வந்த பின்னும் தங்கமயில் தன்னுடைய கணவர் வீட்டில் நடந்ததையே நினைத்து, புலம்பி அழுது கொண்டிருக்கிறார். உடனே தங்கமயில் அம்மா, உன்னை எப்படியாவது அந்த வீட்டில் கொண்டு போய் சேர்ப்பேன். உன்னை அங்கு வாழ வைப்பேன் என்றெல்லாம் சபதம் போடுகிறார். இருந்தாலும் தங்கமயில் தன் தங்கையிடம் பொய் சொல்லி திருமணம் செய்யாதே என்றெல்லாம் புலம்பி கொண்டிருக்கிறார்.

சரவணன் விவகாரம் அறிந்து ஊரில் உள்ள எல்லோருமே பாண்டியனிடம் விசாரித்தார்கள். பாண்டியனால் எதுவுமே பேச முடியவில்லை. பின் கோயிலில் மனமடைந்து பாண்டியன் உட்கார்ந்து கொண்டிருந்தார். அப்போது வந்த முத்துவேல், தங்கமயில் குடும்பத்தை பற்றி எல்லாம் புட்டுப்புட்டு வைத்தார். அதோடு ஒரு அரை மணி நேரம் நான் கேட்டதற்கு எல்லா விஷயத்தையும் சொல்லிவிட்டார்கள். இப்படியா விசாரிக்காமல் கல்யாணம் செய்வது. உன்னை நான் அசிங்கப்படுத்த நினைத்தேன். நீயே அசிங்கப்பட்டு விட்டாய் என்றெல்லாம் ஏளனம் பேசி இருந்தார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

இதனால் பாண்டியனால் எதுவுமே பேச முடியவில்லை. அங்கு இருந்து கிளம்பி விட்டார். இன்னொரு பக்கம் வடிவு-மாரி இருவருமே பாண்டியன் வீட்டில் நடந்த விஷயத்தை எல்லாம் பழனியிடம் சொல்வதால் அவரும் வேதனையில் பாண்டியன் வீட்டிற்கு வந்து விசாரித்தார். கோமதி, பழனியை தான் திட்டி அனுப்பினார். பின் முத்துவேல்-சக்திவேல் இருவரும், உனக்கு நாங்கள் இருக்கிறோம். பாண்டியன் குடும்பத்தை விட்டு உன்னுடைய தொழிலில் மட்டும் கவனம் செலுத்து என்றெல்லாம் அறிவுரை சொல்லி பாண்டியன் அவமானப்பட்டு இருப்பதை நினைத்து சந்தோஷப்பட்டார்கள்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் அரசி, தங்கமயில் செய்த துரோகத்தையும் சரவணன் வருத்தப்பட்டு இருப்பதையும் நினைத்து ரொம்பவே எமோஷனலாக அழுது புலம்பிக் கொண்டிருக்கிறார். வீட்டில் எல்லோருமே சரவணன் வாழ்க்கையை நினைத்து கவலைப்படுகிறார்கள். செந்தில் இடம் மீனா, நாம் இப்போதுக்கு கெஸ்ட் ஹவுஸ் போக வேண்டாம். இவர்களுடன் இருக்கலாம் என்று சொல்வதால் செந்திலும் ஒத்து கொள்கிறார். இன்னொரு பக்கம் தங்கமயில் சாப்பிடாமல் நடந்ததையே நினைத்து அழுது கொண்டிருக்கிறார்.

சீரியல் ட்ராக்:

தன்னுடைய அப்பா, அம்மா, தங்கை எல்லோருமே அழைத்தும் தங்கமயில் வரவில்லை. பாக்கியா, நான் உன்னுடைய புருஷன் வீட்டில் வாழ வைப்பேன். நீ கவலைப்படாதே. நான் ஏதாவது செய்கிறேன் என்கிறார். உடனே கோபத்தில் தங்கமயில், உன்னால்தான் என் வாழ்க்கை சீரழிந்தது. நீ மட்டும் உண்மையை சொல்லி இருந்தால் எனக்கு இந்த பிரச்சனையே கிடையாது. என் தங்கை வாழ்க்கையும் கெடுக்காதே. உண்மையை சொல்லி கல்யாணம் செய்து வை என்றெல்லாம் சொல்கிறார். இதனால் தங்கமயில் அம்மாவால் எதுவுமே பேச முடியவில்லை. அதற்குப்பின் கதிர், பழனியை சந்தித்து சரவணன் நிலைமையை நினைத்து புலம்பி கொண்டிருக்கிறார். பழனியுமே ஆறுதல் சொல்லி அனுப்பி வைக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full