வீட்டு வாசலில் பிரச்சனை செய்யும் தங்கமயில், கோபத்தில் கோமதி செய்த விஷயம் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் வடிவு-மாரி இருவருமே பாண்டியன் வீட்டில் நடந்த விஷயத்தை எல்லாம் பழனியிடம் சொல்வதால் அவரும் வேதனையில் பாண்டியன் வீட்டிற்கு வந்து விசாரித்தார். கோமதி, பழனியை தான் திட்டி அனுப்பினார். பின் முத்துவேல்-சக்திவேல் இருவரும், உனக்கு நாங்கள் இருக்கிறோம். பாண்டியன் குடும்பத்தை விட்டு உன்னுடைய தொழிலில் மட்டும் கவனம் செலுத்து என்றெல்லாம் அறிவுரை சொல்லி பாண்டியன் அவமானப்பட்டு இருப்பதை நினைத்து சந்தோஷப்பட்டார்கள்.
அரசி, தங்கமயில் செய்த துரோகத்தையும் சரவணன் வருத்தப்பட்டு இருப்பதையும் நினைத்து ரொம்பவே எமோஷனலாக அழுது புலம்பிக் கொண்டிருந்தார். வீட்டில் எல்லோருமே சரவணன் வாழ்க்கையை நினைத்து கவலைப்பட்டார்கள். செந்தில் இடம் மீனா, நாம் இப்போதுக்கு கெஸ்ட் ஹவுஸ் போக வேண்டாம். இவர்களுடன் இருக்கலாம் என்று சொல்வதால் செந்திலும் ஒத்து கொண்டார். இன்னொரு பக்கம் தங்கமயில் சாப்பிடாமல் நடந்ததையே நினைத்து அழுது கொண்டிருந்தார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
தன்னுடைய அப்பா, அம்மா, தங்கை எல்லோருமே அழைத்தும் தங்கமயில் வரவில்லை. பாக்கியா, நான் உன்னுடைய புருஷன் வீட்டில் வாழ வைப்பேன். நீ கவலைப்படாதே. நான் ஏதாவது செய்கிறேன் என்றார். உடனே கோபத்தில் தங்கமயில், உன்னால்தான் என் வாழ்க்கை சீரழிந்தது. நீ மட்டும் உண்மையை சொல்லி இருந்தால் எனக்கு இந்த பிரச்சனையே கிடையாது. என் தங்கை வாழ்க்கையும் கெடுக்காதே. உண்மையை சொல்லி கல்யாணம் செய்து வை என்றார். இதனால் தங்கமயில் அம்மாவால் எதுவுமே பேச முடியவில்லை. அதற்குப்பின் கதிர், பழனியை சந்தித்து சரவணன் நிலைமையை நினைத்து புலம்பி கொண்டிருந்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் தங்கமயில், சரவணன் வீட்டில் நடந்ததை நினைத்து தூங்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார். பின் வீட்டில் சொல்லாமல் பாண்டியன் வீட்டிற்கு வந்து வாசலிலே உட்கார்ந்து விடுகிறார். பின் மீனா- ராஜி இருவரும் வெளியே வரும்போது தங்கமயில் இருப்பதை பார்த்து ஷாக்காகிறார்கள். பின் தங்கமயில், என்னால் அங்கு இருக்க முடியவில்லை. இதுதான் என்னுடைய வீடு. நான் இங்கு தான் இருப்பேன் என்று ஆர்ப்பாட்டம் செய்கிறார். இதை அறிந்த கோமதி கோபத்தில் தங்க மயிலை திட்டி வெளியே தள்ளுகிறார்.
சீரியல் ட்ராக்:
கோமதி ரொம்ப மோசமாக தங்கமயிலை திட்டுகிறார். இருந்தாலும் தங்கமயில், இங்கே தான் இருப்பேன் என்று சொல்கிறார். பின் கதவை மூடிவிட்டு கோமதி உள்ளே வந்து விடுகிறார். இதையெல்லாம் கவனித்த சரவணன், தங்கமயில் இடம் சண்டை போட வெளியே வருகிறார். பின் கோமதி, சரவணனை ரூமிற்குள் செல்ல சொல்கிறார். இன்னொரு பக்கம் இதுதான் சந்தர்ப்பம் என்று சக்திவேல் தேவையில்லாமல் பாண்டியன் குடும்பத்தை அவமானமாக பேசிக் கொண்டிருக்கிறார். பின் கோமதி, தங்கமயில் அம்மாவிற்கு ஃபோன் செய்து நடந்ததை எல்லாம் சொல்லி தங்கமயிலை அழைத்து செல்ல சொல்கிறார்கள். இத்துடன் தொடர் முடிகிறது