தந்திரமாக சரவணனை மாட்டிவிட்ட தங்கமயில், வெளுத்து வாங்கும் பாண்டியன் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 13/11/2025

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் தங்கமயில், அடுத்து என்ன நடக்குமோ? என்று பயத்திலேயே புலம்பி கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் விருந்துக்கு சுகன்யா, பழனி இருவருமே மாமியார் வீட்டிற்கு செல்வதாக இருந்தார்கள். அதற்குள் பாண்டியன், பழனியை அழைத்து ஒரு இடத்திற்கு சென்று பணத்தை வாங்கி வர சொன்னார். இதை கேட்டு சுகன்யாவுக்கு பயங்கர கோபம் வருகிறது. பழனியும் எதுவும் சொல்லாமலே பணத்தை வாங்க சென்று விட்டார்.

மீனா எல்லோரிடம் சேர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். செந்தில், எவ்வளவு கூப்பிட்டுமே மீனா வரவில்லை. பின் செந்தில் கோபப்பட்டு மீனாவின் அப்பா, அம்மா வீட்டிற்கு சென்றார். அப்போது செந்தில், மீனா எவ்வளவு சொல்லியுமே கேட்க மறுக்கிறார். என்னுடைய வீட்டிலேயே இருக்கிறார் என்றெல்லாம் புகார் சொன்னார். இதைக் கேட்டு மீனாவின் அம்மா-அப்பா இருவருமே நாங்கள் எப்படியாவது பேசி புரிய வைக்கிறோம் என்றார்கள். இன்னொரு பக்கம் சுகன்யா, தீபாவளி அன்றும் பழனி வேலைக்கு போனதை பற்றி முத்துவேலிடம் சொல்லி புலம்பி கொண்டிருந்தார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

அந்த சமயம் வந்த பழனியிடம் முத்துவேல், உனக்கு கடையை ஏற்பாடு செய்து விட்டோம். தீபாவளி பண்டிகை முடிந்த உடனே கடைக்கு நீ செல் என்றார். பழனி வேண்டாம் என்று சொல்லியுமே முத்துவேல் கேட்கவில்லை. பின் பழனியை தனியாக அழைத்து சென்ற காந்திமதி, சுகன்யாவிற்கு என்று தனி மரியாதை வேண்டும். நான் மாப்பிள்ளை கோமதியிடம் பேசுகிறேன் என்றார். இன்னொரு பக்கம் பாண்டியன் வீட்டில் எல்லோருமே பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது சரவணன், வாக்கெடுப்புக்காக எல்லோருடைய ஆதார் கார்டையும் கேட்டார். ஆனால், தங்கமயில் மட்டும் ஏதேதோ சொல்லி சமாளித்தார் .சரவணன் இன்னும் கோபம் அதிகமானது.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சரவணன், ஆதார் கார்டை பற்றி பேசிக்கொண்டிருக்கும்போதே செந்தில் வீட்டிற்கு கிளம்பலாம் என்று சொல்கிறார். மீனா முடியாது என்கிறார். பாண்டியன் கோபப்பட்டு செந்திலை திட்டிக் கொண்டிருக்கிறார். உடனே செந்தில், நான் கிளம்புகிறேன் என்று சென்று விடுகிறார். அதற்குப்பின் ரூமில் தங்கமயில் ஆதார் கார்டை தேடி கொண்டு இருக்கிறார். ஆனால், கிடைக்கவே இல்லை. பின் சரவணன், தங்கமயிலிடம் விசாரிக்க, அவர் வழக்கம் போல ஏதேதோ சொல்லி சமாளிக்கிறார். கோபத்தில் சரவணன் கத்துகிறார். இதையெல்லாம் வெளியே இருந்து கோமதி-பாண்டியன் இருவரும் கேட்டு விடுகிறார்கள்.

சீரியல் ட்ராக்:

பின் தங்கமயில், வழக்கம் போல சரவணன் மீதுதான் தவறு என்பது போல புது கதையை சொல்கிறார். இதை நம்பி கோமதி- பாண்டியன் இருவருமே சரவணனை தான் திட்டுகிறார்கள். சரவணனால் உண்மையை சொல்ல முடியவே இல்லை. அதற்குப்பின் மீனா வேலைக்கு தயாராகி கிளம்புகிறார். அப்போது மீனா, சீக்கிரமாகவே நான் இங்கே வந்துவிடுகிறேன். அவருக்கு கூட்டு குடும்பம் தான் நல்லது என்று சொல்லி புரிய வைக்கிறேன் என்றெல்லாம் சொல்கிறார். அதற்குப் பின் கோமதி-பாண்டியன் இருவரும் பைக்கில் வந்து கொண்டிருக்கும்போது வழிமறித்த காந்திமதி, பழனி வாழ்க்கையில் முன்னேற வேண்டும். அவனுக்கும் கல்யாணம் ஆகிவிட்டது. அவருடைய அண்ணன்கள் கடை வைத்து தர இருக்கிறார்கள் என்கிறார். இதைக் கேட்டு பாண்டியன் ஷாக் ஆகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full