கோர்ட்டில் தங்கமயில் கொடுத்த வாக்குமூலத்தால் ஆடிப்போன பாண்டியன் குடும்பம் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 6/1/2026

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் வேதனையில் இருக்கும் அரசி, ராஜிக்கு முத்துவேல் ஆறுதல் சொல்லிவிட்டு தங்களுடைய வீட்டிற்கு அழைத்தார்கள். ராஜி- அரசி வர மறுக்கிறார்கள். பின் அப்பத்தா அவர்களுக்கு துணையாக அங்கேயே இருப்பதாக முத்துவேல், சக்திவேல் எதுவும் பேசாமல் ஆறுதல் சொல்லிவிட்டு கிளம்பி இருந்தார். இன்னொரு பக்கம் தனித்தனி செல்லில் பாண்டியன் குடும்பத்தின் ஆட்களை போட்டு இருந்தார்கள். கோமதி தன்னுடைய கணவன் மகன்களை நினைத்து அழுதழுது அவருக்கு நெஞ்சு வலி வந்து விட்டது.

ரொம்ப நேரம் அழுது கொண்டிருந்ததால் கோமதி மயங்கி கீழே விழுந்து கிடந்தார். இன்னொரு பக்கம் அரசி, ராஜி, மீனா மூவருமே எல்லோரையும் நினைத்து கவலைப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது பழனி அவர்களுக்கு சாப்பாடு கொண்டு வந்து ஏதோ சொல்லி சாப்பிட வைத்தார். இன்னொரு பக்கம் கோமதி மயங்கி கீழே விழுந்து கிடப்பதை பார்த்து போலீஸ் அவரை உடனடியாக ஹாஸ்பிடலில் சேர்த்து விட்டார்கள். அப்போது டாக்டர், சாப்பிடாமல் இருந்ததால் தான் மயக்கம் வந்தது என்று சொன்னதால் போலீஸ் கோமதிக்கு சாப்பாடு வாங்கி கொடுத்து சாப்பிட வைத்தார்கள்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

இன்னொரு பக்கம் தங்கமயில், தான் தவறு செய்து விட்டோமா? என்று வேதனையில் புலம்பி கொண்டிருந்தார். அப்போது பாக்கியா-மாணிக்கம் இருவருமே நீ எந்த தவறும் செய்யவில்லை. இது கடைசி பொய். இதுதான் உன் வாழ்க்கையை காப்பாற்றும் என்றெல்லாம் சொல்லி தங்கமயிலின் மூளையை செலவு செய்தார்கள். அந்த சமயம் பார்த்து பாக்கியா, சொன்ன வக்கீல் வீட்டிற்கு வந்து தங்கமயிலிடம் பொய் சொல்ல வேண்டும் என்றார். பாக்கியாவுமே தங்கமயிலிடம் கட்டாயப்படுத்தி பொய் சொல்ல வைத்தார்.

இன்றைய எபிசோட்:

இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் தங்கமயில் குடும்பத்தினர் கோர்ட்டுக்கு வந்து விடுகிறார்கள். அவர்களை பார்த்தவுடன் கோபத்தில் பழனி சண்டைக்கு போகிறார். தங்கமயில் வழக்கம்போல அழுது கொண்டிருக்கிறார். பாக்கியா, பழனியை மோசமாக திட்டுகிறார். அதற்குப்பின் பாண்டியன் குடும்பத்தில் உள்ள எல்லோரையும் போலீஸ் கோர்ட்டுக்கு அழைத்துக் கொண்டு வருகிறார்கள். அரசி- ராஜி இருவரும் எமோஷனல் கதறி அழுகிறார்கள். போலீஸ் பாண்டியன் குடும்பத்தை கோர்ட்டுக்குள் அழைத்துச் செல்கிறது.

சீரியல் ட்ராக்:

அந்த இடத்தில் முத்துவேல்-சக்திவேல் இருப்பதை பார்த்த பாக்கியா, பாண்டியன் உங்கள் குடும்பத்திற்கு எவ்வளவு கெடுதல் செய்திருப்பார். நீங்கள் எனக்கு சாதகமாக கோர்ட்டில் பேச வேண்டும் என்றெல்லாம் ஒன்னுக்கு ரெண்டாக ஏற்றி விடுகிறார். இதைக் கேட்ட சக்திவேல் சரி என்கிறார். பின் கோர்ட்டில் வாதம் நடக்கிறது. தங்கமயில், பாண்டியன் குடும்பத்தில் உள்ள எல்லோருமே வரதட்சனை கேட்டு அடித்து கொடுமைப்படுத்தியதாக கொடுத்த புகார் எல்லாம் உண்மை என்று சொல்லி விடுகிறார். இதைக் கேட்டு பாண்டியன் குடும்பத்தில் உள்ள எல்லோரும் சாக் ஆகிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது

Tamil Behind Talkies AMP · Quick view
View full