தங்கமயில் மறைத்து வைத்த ரகசியத்தை செந்தில் அறிவாரா? விறுவிறுப்பில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 11/3/2025

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் அரசியிடம் சுகன்யா, குமாரை திருமணம் செய்து கொள். உனக்கு நான் துணையாக இருக்கிறேன். இரண்டு வீட்டு ப்ரச்சனை தீர்ந்து விடும் என்று அவருடைய மனதை சலவை செய்தார். அரசியுமே சுகன்யா சொல்வதற்கெல்லாம் சரி என்றார். அந்த சமயம் பார்த்து மீனா வெளியே வந்தவுடன் இருவரும் பேச்சை மாற்றிக் கொண்டார்கள். அதற்குப்பின் அரசி போன் பேசிக் கொண்டிருப்பதை பார்த்த கோமதி கோபப்பட்டு திட்டி இருந்தார். அதற்கு பின் கோமதி, அரசி போனை வாங்கி செக் பண்ணி இருந்தார். பின் அரசியை திருப்பி திருப்பி கோமதி கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார்.

இதையெல்லாம் பார்த்து மீனாவுக்கு ஒன்றுமே புரியவில்லை. உடனே மீனா, அரசி எந்த தவறும் செய்ய மாட்டாள் என்று அவளுக்கு சப்போர்ட் செய்தார். ஆனால், கோமதிக்கு தான் பயமாக இருந்தது. அதற்குப் பின் பழனி, சுகன்யா வீட்டுக்கு வருவாளா என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது வந்த செந்தில், கவர்ன்மென்ட் வேலை ரெடியாக இருந்தது. 10 லட்சம் பணம் கட்ட வேண்டும் என்று சொன்னார். உடனே பாண்டியன் வந்தார். பின் பாண்டியன் இடம் கதிர், செந்திலுக்கு கிடைக்கும் கவர்மெண்ட் வேலையை பற்றி சொன்னார். அது மட்டும் இல்லாமல் பணம் கட்ட வேண்டும் என்று சொன்னவுடன் பாண்டியன் ஷாக் ஆனார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

நேற்று எபிசோட்டில் பாண்டியன், அரசாங்க வேலையெல்லாம் வேண்டாம். இருக்கிற வேலையை செய் என்று திட்டி விட்டு சென்றார். அதற்கு பின் சுகன்யாவை பார்க்க பழனி அவர் அண்ணன் வீட்டிற்கு போனார். ஆனால், அங்கு சுகன்யா வழக்கம்போல் பழனியை வறுத்தெடுத்து நான் இங்குதான் இருப்பேன் என்று சொல்லிவிட்டார். அதனால் பழனியால் எதுவும் பேச முடியாமல் அங்கிருந்து கிளம்பி விட்டார். இதை எல்லாம் கேட்ட ராஜியின் அம்மா, பழனி தம்பி ரொம்ப நல்லவர்.

நேற்று எபிசோட்:

அவரிடம் பொறுமையாக பேசு, கோபப்படாதே என்று அறிவுரை சொன்னார். ஆனால், அதை எல்லாம் சுகன்யா கண்டு கொள்ளவே இல்லை. அதற்குப் பின் கதிர் தன்னுடைய நண்பருக்கு திருமணம் நடந்தது என்று பொய் சொல்லி ராஜியை வெளியே அழைத்து சென்றார். ஆனால், பாண்டியன் இந்த முறை எதுவுமே சொல்லாமல் அமைதியாக இருந்தார். இன்னொரு பக்கம் அரசி வீட்டிற்கு தெரியாமல் படம் பார்ப்பதற்காக குமாருடன் சென்றார். அப்போது குமார், அரசிக்கு பரிசு கொடுத்தார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் மீனா, தன்னுடைய அப்பா வீட்டிற்கு சென்று இருந்தார். அப்போது மீனா அப்பா, கவர்மெண்ட் வேலை விஷயமாக என்ன முடிவு எடுத்தீர்கள்? இந்த வேலை கிடைப்பதற்கு எவ்வளவு கஷ்டம் தெரியுமா? உங்களால் பணம் கூட ரெடி பண்ண முடியவில்லையா? என்று பாண்டியன் குடும்பத்தையும் செந்திலையும் பற்றி ஏளனமாக பேசுகிறார். உடனே மீனா, என் வீட்டில் நன்றாகத்தான் பார்த்துக் கொள்கிறார்கள் என்று அவர்களுக்கு ஆதரவாக பேசுகிறார். இன்னொரு பக்கம் செந்தில், தங்கமயில் வேலை செய்யும் இடத்திற்கு வருகிறார்.

சீரியல் ட்ராக்:

அவரைப் பார்த்தவுடன் தங்கமயில், பயந்து உள்ளே சென்று விடுகிறார். செந்தில், மளிகை பொருட்களை கொடுத்துவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார். அப்போது தங்கமயில், வெளியே வருகிறார். செந்திலை பார்த்தவுடன் தங்கமயில் ஷாக் ஆகி, ஹோட்டலில் சாப்பிட வந்தேன் என்று ஏதேதோ சொல்லி சமாளிக்கிறார். செந்தில் அதை நம்பி விட்டு சென்றார். பின் ஹோட்டல் ஓனர், வேலை செய்யும் போது ஒழுங்காக செய்யுங்கள் என்று திட்டுகிறார். இன்னொரு பக்கம் வீட்டில் ராஜி- கதிர் இருவரும் நண்பரின் திருமணத்திற்கு தயாராகி செல்கிறார்கள். மண்டபத்தில் கதிரை பற்றி எல்லா பெண்களுமே ரொம்ப புகழ்ந்து பேசுவதால் ராஜிக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.

behindtalkies AMP · Quick view
View full