பாண்டியன் குடும்பத்துக்கு எதிராக பாக்கியாவின் சூழ்ச்சி, உண்மையை சொல்வாரா தங்கமயில்? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 31/12/2025

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் செந்தில், மீனாவிற்கு போன் செய்து உன்னை போலீஸ் கைது செய்யவில்லையா? நாங்கள் எல்லாம் போலீஸ் ஸ்டேஷனில் இருக்கிறோம் என்று நடந்த உண்மை எல்லாம் சொன்னார். அதைக் கேட்டு மீனா அதிர்ச்சி ஆனார். அதற்குப்பின் முத்துவேல் - சக்திவேல் இருவருமே போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தார்கள். ராஜி, தன் அப்பாவை பார்த்துவிட்டு கட்டிப்பிடித்து அழுதார். முத்துவேலும் தன் மகளுக்கு ஆறுதல் சொன்னார். கோமதியும் ரொம்ப எமோஷனலாக தன் அண்ணன்களை பார்த்து அழுதார்.

முத்துவேல்- சக்திவேல் இருவருமே ராஜி, கோமதிக்கு ஆறுதல் சொல்லிவிட்டு நடந்ததை விசாரித்தார்கள். போலீஸ், அவர்களுடைய மருமகள் குடும்பத்தினர் புகார் கொடுத்திருப்பதால் தான் விசாரணைக்கு அழைத்து வந்திருக்கிறோம். எதுவாக இருந்தாலும் அதற்குப் பிறகு பேசுங்கள். வரதட்சணை புகார் என்பதால் என்னால் எதுவும் செய்ய முடியாது என்றார். இதனால் முத்துவேல, சக்திவேல் இருவரும் வெளியே வந்து விட்டார்கள். இன்னொரு பக்கம் பாக்கியா, பாண்டியன் குடும்பத்தின் மீது புகார் கொடுத்த எல்லா விஷயத்தையும் சொன்னார். இதைக் கேட்டு தங்கமயில் ஷாக் ஆகி கதறி அழுதார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

தங்கமயில் உண்மையை சொல்ல நினைத்தார். பாக்கியா, இது தான் நீ சொல்லும் கடைசி பொய். போலீஸ் வந்து கேட்டால் நான் சொன்னது தான் உண்மை என்று சொல். உன்னுடைய வாழ்க்கையை காப்பாற்றலாம். இல்லை என்றால் இதே வீட்டில் தான் இருக்கணும் என்று தங்கமயிலின் மனதை சலவை செய்து விட்டு சென்றார். தங்கமயில் என்ன செய்வது என்று புரியாமல் தவித்தார். கடைசியில் உண்மையறிந்த பழனி, போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடி வந்தார். கோமதி, தன் தம்பியை பார்த்ததுமே கதறி அழுதார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் பழனி, பாண்டியன் குடும்பத்தில் உள்ள எல்லோருக்குமே ஆறுதல் சொல்கிறார். அதற்குப்பின் மீனா போலீஸ் ஸ்டேஷன் வருகிறார். மீனாவை பார்த்தவுடன் கோமதி ரொம்ப எமோஷனல் ஆகி அழுகிறார். எல்லோருக்கும் மீனு ஆறுதல் சொல்லிவிட்டு தங்கமயில் வீட்டிற்கு சென்ற விஷயத்தை எல்லாம் சொல்கிறார். அதனால்தான் மீனாவின் பெயரை புகாரில் கொடுக்காமல் இருக்கும் விசயம் புரிந்தது. பின் மீனா, தனக்கு தெரிந்த வக்கீலை வைத்து பாண்டியன் குடும்பத்தை வெளியே எடுக்க பார்த்துக் கொண்டிருக்கிறார்.

சீரியல் ட்ராக்:

இன்னொரு பக்கம் போலீஸ் வீட்டிற்கு வர இருப்பதால் பாக்கியா, தங்கமயிலை நடிக்க சொல்கிறார்.
தங்கமயிலும் போலீஸ் வந்தவுடன் தன் அம்மா சொன்னதை போலவே நடிக்கிறார். பின் போலீஸ், வரதட்சணை கேட்டு உன்னை கொடுமை செய்தார்களா? உன் கணவர் அடித்துக் கொடுமைப்படுத்தினாரா? என்றெல்லாம் கேள்வி கேட்பதற்கு பாக்கியா சொன்னது போல தங்கமயில், ஆமாம் என்று சொல்லி புகாரில் கையெழுத்து போட்டு விடுகிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full