கதிர் செய்த வேலையால் கொந்தளித்த பாண்டியன், சப்ளையர் வேலைக்கு போகும் தங்கமயில் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' தன்னுடைய நண்பர்கள் வெளியே செல்வதற்கு அழைதார்கள். ஆனால், ராஜி பணம் இல்லை என்பதால் முடியாது என்றார். உடனே கதிர் தன்னுடைய அம்மாவிடம் பணத்தை வாங்கி ராஜிக்காக கொடுத்தார். இன்னொரு பக்கம் தங்கமயில் எங்கே செல்வது? என்று புரியாமல் அலைந்து கொண்டிருந்தார். அப்போது ஒரு ஹோட்டலில் வேலைக்கு ஆட்கள் தேவை என்று இருந்தது. அதை பார்த்தவுடன் தங்கமயில் உள்ளே சென்று வேலை கேட்டார். சப்ளையர் வேலை தான் இருக்கிறது என்ற உடன் தங்கமயிலும் ஒத்துக் கொண்டார்.
வீட்டில் எல்லோருமே பேசிக் கொண்டிருந்தார்கள். ஆனால், அரசி மட்டும் தனியாக நின்று போன் பேசிக் கொண்டிருந்தார். இதை பார்த்தவுடன் கோமதி திட்டினார். கடையில் பழனி வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது போன் செய்த சுகன்யா, சினிமாக்கு போகவில்லையா? என்று கேட்க, கடையில் வேலை இருக்கிறது என்று ஏதோ சொல்லி பழனி சமாளித்தார். ஆனால், சுகன்யா அவரை வறுத்து எடுத்தார். இது எல்லாம் பார்த்த செந்தில், தன்னுடைய அப்பாவிடம் பேசி எப்படியோ படம் பார்க்க அனுமதி வாங்கி தந்தார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
பின் இதைப்பற்றி சுகன்யாவுடன் பழனி சொன்னவுடன் அவர் மீண்டும் அதுக்கும் சண்டை போட்டார். அதற்குபின் வீட்டிற்கு வந்த பாண்டியன் எல்லோரிடமும் கலகலப்பாக பேசிக் கொண்டிருந்தார். ஆனால், அரசி போனை தான் பார்த்துக் கொண்டிருந்தார். இதை பார்த்த பாண்டியன் கேள்வி கேட்க, அரசி ஏதேதோ சொல்லி சமாளித்தார். உடனே சுகன்யா, அரசி ரொம்ப நல்ல பொண்ணு. அவள் மீது சந்தேகப்பட வேண்டாம் என்று அவருக்கு சப்போர்ட்டாக பேசி இருந்தார்.
நேற்று எபிசோட்:
அதற்குப்பின் அரசி ரூமுக்கு போன சுகன்யா, நீ குமாரை காதலிக்கும் விஷயம் எனக்கு தெரியும். அவன் ரொம்ப நல்லவன். உன்னை அவனுக்கு பிடிக்கும் என்று அரசி மனசை மாற்றும் வகையில் பேசி இருந்தார். அந்த சமயம் பார்த்து மீனா வந்தவுடன் பேச்சை சுகன்யா மாத்தி விட்டார். இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் செந்தில்- மீனா இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது செந்தில், என்னுடைய அப்பா செய்யும் சில விஷயங்கள் எனக்கு பிடிக்கவில்லை என்று பேசுகிறார்.
இன்றைய எபிசோட்:
உடனே மீனா, போக போக எல்லாம் மாறும், கவலைப்படாதே என்று அவருக்கு அறிவுரை சொல்கிறார். இன்னொரு பக்கம் பயிற்சி எடுக்க நேரமாகிவிட்டது என்று கதிர், ராஜியை அழைத்துக் கொண்டு வெளியே வருகிறார். அந்த சமயம் பார்த்து பாண்டியன் வருகிறார் ஆனால், அதை பற்றி கவலை கொள்ளாமல் ராஜியை கதிர் அழைத்துக் கொண்டு போகிறார். இதையெல்லாம் பார்த்து பாண்டியனுக்கு கோபம் வந்து கோமதி இடம் திட்டுகிறார். அதற்குப்பின் கிரவுண்டில் கதிர், ராஜிக்கு பயிற்சி கொடுத்து கொண்டிருக்கிறார். அந்த சமயம் பார்த்து ராஜியின் அப்பா அங்கு வருகிறார்.
சீரியல் ட்ராக்:
உடனே அங்கிருந்து நபர், ராஜி கனவை நிறைவேற்ற கதிர் ரொம்பவே போராடுகிறார் என்று சொல்கிறார். ராஜியின் அப்பாவிற்கு உள்ளுக்குள் சந்தோஷமாக இருக்கிறது. இன்னொரு பக்கம் தங்கமயில், வேலைக்கு போகிறார். அங்கு அவருடைய மேக்கப் எல்லாம் பார்த்து எல்லோருமே சிரிக்கிறார்கள். டீச்சர் வேலைக்கு போகிறீர்களா? வேலைக்கான உடை அணிந்து கொண்டு வேலை செய்யுமா என்று ஓனர் திட்டுகிறார். பின் சாப்பிட்ட இடத்தை கிளீன் செய்ய சொல்கிறார்கள். அதை பார்த்து தங்கமயில் ரொம்ப வேதனை அடைகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.