தன் மகளின் வாழ்க்கைக்காக சபதம் போடும் தங்கமயில் அம்மா, சரவணன் நிலை என்ன? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 16/12/2025

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் மாணிக்கம், உண்மை புரியாமல், என்ன நடந்தது என்று தங்கமயில் இடம் விசாரித்தார்கள். அப்போது கோமதி, உங்கள் மகள் 12 ஆம் வகுப்பு வரை தான் படித்திருக்கிறாள். அவள் என் மகனை விட இரண்டு வயது பெரியவள் எல்லா உண்மையும் தெரிந்து விட்டது. இவ்வளவு கேவலமான ஜென்மங்களா நீங்கள்? என்று சொன்னார். இதைக்கேட்டு தங்கமயிலின் அப்பா-அம்மா இருவருமே ஷாக்காகி இருந்தார்கள்.

தங்கமயிலின் அம்மா, அப்பாவும் உண்மையை சொல்லாமல் மாற்றி மாற்றி பொய்யே சொல்லிக் கொண்டிருந்தார்கள். இதனால் கொந்தளித்த சரவணன், தங்கமயிலின் அப்பாவை அடிக்க போனார். பின் கோமதி, குழலி இருவருமே தங்கமயிலின் குடும்பத்தை ரொம்ப மோசமாக பேசி இருந்தார்கள். ஒரு கட்டத்தில் தங்கமயிலின் அப்பா, அம்மா இருவருமே தங்களுடைய தவறை ஒத்துக் கொண்டு மன்னிப்பு கேட்டார்கள்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

அப்போது கொந்தளித்த பாண்டியன், நீங்கள் மறைத்ததெல்லாம் எனக்கு பெரிய விஷயமே கிடையாது. ஆனால், என்னிடம் பொய் சொன்னது ரொம்பவே தப்பு. என்னை யார் ஏமாற்றினாலும் நான் ஏற்றுக் கொள்ளவே மாட்டேன். என் பிள்ளைகளையும் நான் அப்படித்தான் வளர்த்தேன். இவ்வளவு பெரிய துரோகத்தை நீங்கள் செய்வீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை என்று ரொம்ப எமோஷனலாக
பேசி இருந்தார்.

இன்றைய எபிசோட்:

இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் பாண்டியன் வீடு சோக கடலில் மூழ்கிக் கொண்டிருக்கின்றது. செந்தில்-கதிர் இருவரும் எல்லோருக்கும் சாப்பாடு வாங்கி வந்து கொடுக்க, எல்லோரும் சாப்பிடுகிறார்கள். சரவணன் வருத்தத்தில் இருப்பதால் பாண்டியன் ஆறுதல் சொல்லி சமாதானம் செய்கிறார். இன்னொரு பக்கம் தங்கமயில் வேதனையில் வீட்டில் நடந்ததை எல்லாம் நினைத்து பார்த்து அழுது கொண்டே வருகிறார். பின் தன்னுடைய மாமனார் வீட்டுக்கு மீண்டும் செல்ல நினைக்கிறார். ஆனால், தங்கமயில் அப்பா-அம்மா இருவரும் அவரை சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்து வருகிறார்கள்.

சீரியல் ட்ராக்:

வீட்டிற்கு வந்த பின்னும் தங்கமயில் தன்னுடைய கணவர் வீட்டில் நடந்ததையே நினைத்து, புலம்பி அழுது கொண்டிருக்கிறார். உடனே தங்கமயில் அம்மா, உன்னை எப்படியாவது அந்த வீட்டில் கொண்டு போய் சேர்ப்பேன். உன்னை அங்கு வாழ வைப்பேன் என்றெல்லாம் சபதம் போடுகிறார். இருந்தாலும் தங்கமயில் தன் தங்கையிடம் பொய் சொல்லி திருமணம் செய்யாதே என்றெல்லாம் புலம்பி கொண்டிருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது

Tamil Behind Talkies AMP · Quick view
View full