சரவணன், அஞ்சலியை ஒன்றாக பார்த்து உடைந்து போன தங்கமயில், பொங்கி எழும் பாக்கியம் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் சரவணன் கோயிலுக்கு வந்து விட்டார். தங்கமயில் ரொம்ப சந்தோசமாக தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை சொன்னார். சரவணன் நம்பாமல் தங்கமயிலை திட்டிக் கொண்டிருந்தார். பின் ஒரு கட்டத்தில் தங்கமயில் தன்னுடைய ரிப்போர்ட்டை எல்லாம் காண்பித்தார். உடனே சரவணன், இந்த குழந்தைக்கு அப்பா யார்? நீ கர்ப்பமாக இருந்தாலுமே இது என் குழந்தை இல்லை என்று ரொம்ப மோசமாக பேசி விட்டார். சரவணன் சொன்ன வார்த்தையை கேட்டு தங்கமயில் உடைந்து போய் நிற்கிறார்.
கோயிலை விட்டு வெளியே வந்த சரவணன், மீனாவை பார்த்து கோபப்பட்டார். மயில் உடன் நீயும் சேர்ந்து என்னை ஏமாற்றுகிறாயா? தயவு செய்து எதுவும் பேசாதே என்று அங்கிருந்து கிளம்புகிறார். பின் கோயிலுக்குள் சென்ற மீனா, தங்கமயில் இடம் விசாரித்தார். தங்கமயில் ரொம்ப வேதனையாக அழுது கொண்டிருந்தார். மீனா, அத்தை மாமாவிடம் பேசலாம் என்றார். தங்கமயில் அதெல்லாம் வேண்டாம் என்று சொல்லி இருவரும் வீட்டிற்கு கிளம்பி வந்தார்கள். பாக்கியம், மாப்பிள்ளை தங்க மயிலை வீட்டிற்கு அழைத்து செல்வார் என்று ரொம்பவே எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
பின் வீட்டிற்கு வந்த தங்கமயில்- மீனா இருவரும் ரூமுக்குள் சென்று விட்டார்கள். பாக்கியத்திற்கு ஒன்றுமே புரியவில்லை. தங்கமயில் ரொம்பவே எமோஷனலாக அழுதார். பின் அவர், என்னுடைய குழந்தைக்கு அப்பா யார் என்று கேட்டார். இனிமேல் நான் அவருடன் சேர்ந்து வாழ விரும்பவில்லை. நான் தனியாகவே வாழ்கிறேன். குழந்தையை என்னால் தனியாக வளர்க்க முடியும். எத்தனையோ பேர் குழந்தையை வளர்த்து இருந்தார்கள். எனக்கு அவர் வேண்டாம், என்னால் இனி தனியாக வாழ முடியும் என்று முடிவெடுத்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் பாக்கியம், மாப்பிள்ளை என்ன சொன்னார் என்கிறார். தங்கமயில், யாரிடமும் என் குழந்தை விஷயத்தை பற்றி சொல்லப்போவதில்லை. என் குழந்தையை நானே வளர்க்கிறேன். யாரும் எனக்கு தேவையில்லை. இதுவரை நீ எனக்கு செய்ததெல்லாம் போதும் என்று தன்னுடைய அம்மாவை எதிர்த்து பேசுகிறார். பாக்கியத்திற்கு ஒன்றுமே புரியவில்லை. பின் மீனாவிடம் பாக்கியம் விசாரிக்கிறார். அப்போது மீனா, சரவணன் மாமா இந்த குழந்தைக்கு அப்பா யார்? என்று கேட்டு விட்டார். அதனால் அக்கா உடைந்து போய் இருக்கிறார் என்கிறார். கோபத்தில் பாக்கியம், பாண்டியன் வீட்டிற்கு சண்டை போட கிளம்புகிறார்.
சீரியல் ட்ராக்:
உடனே மீனா தடுத்து நிறுத்தி அக்காவின் முடிவுக்கு மதிப்பு கொடுங்கள். அவருடைய வாழ்க்கையை பார்க்க விடுங்கள் என்று அறிவுரை சொல்கிறார். இன்னொரு பக்கம் சரவணன், அஞ்சலி இடம் தங்கமயில் சொன்ன விஷயத்தை எல்லாம் சொல்கிறார். அஞ்சலி, நீ பேசியது தவறு என்று அட்வைஸ் செய்கிறார். பின் தங்கமயில் மாத்திரை இல்லை என்று கடைவீதிக்கு வருகிறார். அப்போது ஒரு கடையில் சரவணன்- அஞ்சலி இருவரும் சேர்ந்து பேசிக் கொண்டிருப்பதை பார்த்து ஷாக் ஆகிறார். அஞ்சலி, சரவணனை தொட்டு தொட்டு பேசுவதை பார்த்து தங்கமயில் உடைந்து போய் இருக்கிறார்.