சரவணனை வசமாக சிக்க வைத்த தங்கமயில் கோவத்தில் பாண்டியன் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 30/10/2025

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் அரசி, மளிகை கடையின் கணக்கு வழக்கு பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது தங்கமயில், என்ன நடக்குமோ? உண்மை வெளிவந்திருமோ? என்று ரொம்பவே பயந்து கொண்டிருந்தார். பின் கணக்கில் 1100 ரூபாய் இல்லை என்று பாண்டியனிடம் அரசி சொல்லி இருந்தார். ஏற்கனவே பாண்டியன் குடித்திருந்தார். இதை கேட்டவுடன் பாண்டியன் பயங்கரமாக கோபப்பட்டு சண்டை போட்டார். பழனி தான் பணத்தை எடுத்து இருப்பான் என்று பாண்டியன் ரொம்ப மோசமாக திட்டி விட்டார்.

பின் பாண்டியன் போன பிறகு எல்லோருமே பழனிக்கு ஆறுதல் சொன்னார்கள். இருந்தாலும் பழனி எதுவும் சொல்லாமல் அங்கிருந்து சென்று விட்டார். இதையெல்லாம் பார்த்து சரவணனுக்கு தங்கமயில் மீது கோபம் அதிகமானது. இன்னொரு பக்கம் சமைப்பதாக சொல்லி விட்டு வந்த மீனா சமையல் அறையில் தூங்கி விட்டார். இதை பார்த்த செந்தில், ஏன் சமைக்கவில்லையா? என்று கேட்டார். அதற்கு மீனா, என்னால் முடியவில்லை. நீயே சமைத்துவிடு என்று சொல்லிவிட்டு கிளம்பினார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சரவணன், நீயும் உன் அப்பாவும் செய்த வேலையால் என்னுடைய மாமா தான் அவமானப்பட்டு நிற்கிறார். ஒழுங்கு மரியாதையாக உண்மையை வீட்டில் சொல். உன் அப்பா இனிமேல் கடைக்கு வரக்கூடாது என்றெல்லாம் சொல்கிறார். தங்கமயில் ஒன்றுமே தெரியாதது போல வாக்குவாதம் செய்கிறார். அதற்கு பின் தன் அம்மாவிற்கு போன் செய்த தங்கமயில், எதற்காக அப்பா பணத்தை எடுத்தார்.

இன்றைய எபிசோட்:

தேவையில்லாத வேலை எல்லாம் செய்ய வேண்டாம் என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார். அதற்கு தங்கமயில் அம்மா, இனி யாருக்கும் தெரியாமல் திருட சொல்கிறேன் என்றெல்லாம் சொல்கிறார். இதையெல்லாம் சரவணன் கேட்டு விடுகிறார். பின் சரவணன், தங்கமயில் இருவருக்கும் இடையே சண்டை அதிகமாகிறது. கடைசியில் சரவணன், எல்லா உண்மையும் வீட்டில் சொல்லப் போகிறேன் என்று சொல்கிறார். உடனே தங்கமயில், துணிகளை எல்லாம் எடுத்துக்கொண்டு வெளியே வருகிறார். பாண்டியன், என்ன ஆனது என்கிறார்.

சீரியல் ட்ராக்:

தங்கமயில், குழந்தை கலைந்ததிலிருந்து நான் பொய் சொல்கிறேன் என்கிறார். பணத்தை நானும் என் அப்பாவும் தான் எடுத்தோம் என்றெல்லாம் உங்கள் பையன் என் மீது வீண்பழி போடுகிறார். என்னால் இந்த வீட்டில் இனிமேல் இருக்க முடியாது என்று எல்லா பழியையும் சரவணன் பக்கம் திருப்பி விடுகிறார். உண்மை என்னவென்று தெரியாமல் கோமதி, பாண்டியன் இருவருமே சரவணனை திட்டி தங்கமயிலை உள்ளே போக சொல்கிறார்கள். பின் சரவணன், நீ இவ்வளவு மோசமானவள் என்று எனக்கு தெரியாது என்று தங்கமயிலை திட்டி விட்டு செல்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full