தங்கமயில் சொன்ன குட் நியூஸ், கோபத்தில் சரவணன் சொன்ன வார்த்தை - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 1/3/2026

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் கோமதி, தன்னுடைய உதவி இல்லாமல் பாண்டியன் பட்ட கஷ்டத்தை எல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார். மீனா, இப்படியே செய்யுங்கள் அப்போதுதான் மாமா உங்கள் அன்பை புரிந்து கொள்வார் என்றார். இன்னொரு பக்கம் தங்கமயில், வயதானவருக்கு தேவையான எல்லா வேலையும் செய்து கொண்டிருந்தார். அப்போது தங்கமயில், சரவணனுக்கு ஃபோன் செய்தார். சரவணன் கோபத்தில் தங்க மயிலை திட்டி விட்டு போனை வைத்து விட்டார். பின் தங்கமயிலுக்கு வாந்தி மயக்கமாக இருக்கிறது. அப்போது அந்த வயதான அம்மா, கர்ப்பமாக இருக்கிறாயா? என்றார்.

தங்க மயிலுக்கே ஒன்றும் புரியவில்லை. இன்னொரு பக்கம் சக்திவேல், திருமணத்தை நிறுத்த சொன்னது யார்? என்ற காரணத்தை கேட்டார். அவர் முதலில் தயங்கினாலும் சக்திவேல் கொஞ்சம் ஓவராக பேசி இருந்தார். இதனால் கோபப்பட்ட பெண் வீட்டார், உன்னுடைய அம்மா தான் திருமணத்தை நிறுத்த சொன்னார் என்றார். பின் வீட்டிற்கு வந்த சக்திவேல், ருத்ர தாண்டவம் ஆடினார். திருமணத்தை எதற்காக நிறுத்த சொன்னீர்கள் என்றெல்லாம் காந்திமதியிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தார். இதைக் கேட்டு வீட்டில் உள்ள எல்லோருமே ஷாக் ஆனார்கள்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

காந்திமதி, நான் தான் நிச்சயதார்த்த திருமணத்தை நிறுத்தினேன் என்று உண்மையை ஒத்துக் கொண்டார். இதனால் கொந்தளித்த சக்திவேல், எங்கள் வீட்டில் தின்னுட்டு எங்களுக்கு துரோகம் செய்கிறாயா, இனிமேல் நீ இந்த வீட்டில் இருக்கக் கூடாது என்று சொல்லி காந்திமதியின் கையை பிடித்து தர தர தரவென்று இழுத்து வெளியே கொண்டு வந்து விட்டார். தன் அம்மா வீட்டில் ஏதோ சத்தம் கேட்கிறது என்று கோமதி வெளியே போனார். அப்போது சக்திவேல், தன்னுடைய அம்மாவை ரொம்ப மோசமாக பேசிக் கொண்டிருந்தார். இதனால் கோபப்பட்ட கோமதி, தன்னுடைய அண்ணனிடம் சண்டைக்கு போனார்.

சீரியல் ட்ராக்:

சக்திவேல், பாண்டியன் குடும்பத்தையும் ரொம்ப மோசமாக பேசிக் கொண்டிருந்தார். ராஜி, பழனி, கதிர் எல்லோரும் சொல்லியுமே சக்திவேல் கேட்கவில்லை. காந்திமதியை வீட்டுக்குள் விட முடியாது என்று பிரச்சனை செய்து கொண்டிருந்தார். அப்போது கோமதி, தன்னுடைய அம்மாவை தன் வீட்டிற்கு அழைத்து வந்தார். பாண்டியன் எதுவுமே சொல்லவில்லை. பின் காந்திமதி தன் பேரப்பிள்ளைகளுடன் சந்தோஷமாக இருந்தார். அப்போது கோமதி, எதற்காக திருமணத்தை நிறுத்தினீர்கள்? என்றார். காந்திமதியும் ஏதேதோ காரணத்தை சொல்லி விட்டார்.

https://www.youtube.com/watch?v=o6KR680AlCg

சீரியல் ப்ரோமோ:

இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் தங்கமயில் வாந்தி எடுத்துக் கொண்டிருப்பதால் மீனா ஹாஸ்பிடல் அழைத்து செல்கிறார். அப்போது தங்கமயிலுக்கு டெஸ்ட் எடுத்து கர்ப்பம் உறுதியாகி விடுகிறது. தங்கமயில் ரொம்பவே சந்தோஷப்படுகிறார். பின் இதைப் பற்றி சொல்ல சொல்ல கோயிலுக்கு தங்கமயில், சரவணனை அழைக்கிறார். பின் தங்கமயில் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை சொல்கிறார். கோபத்தில் சரவணன், நீ கர்ப்பமாக இருந்தாலுமே எனக்கு அதில் நம்பிக்கை இல்லை. அந்த குழந்தைக்கு அப்பா யார் என்று ரொம்ப மோசமாக பேசி விடுகிறார்.

behindtalkies AMP · Quick view
View full