தங்கமயில் சொன்ன வார்த்தையை கேட்டு ஆடிப்போன பாண்டியன் குடும்பம், பாக்கியம் நிலை? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 15/1/2026

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் பாக்கியா, நாங்கள் என்பது பவுன் நகை போட்டோம். ஆனால், எல்லாமே கவரிங் ஆக இருக்கிறது. இவர்கள் பையனுக்கு கவர்மெண்ட் வேலை வாங்குவதற்கும், கார் போட்டு தருவதற்கும் எங்களுடைய நகையை வைத்து தான் செய்திருக்கிறார்கள் என்பது இப்பதான் புரிகிறது என்று புது ட்ராமா போட்டார். இதையெல்லாம் பார்த்து கோபப்பட்ட மீனா, நீங்கள் உண்மையாகவே என்பது பவுன் நகை போட்டீர்களா? அவர்கள் சொல்வதெல்லாம் பொய். எட்டுப் பவன் தான் உண்மை. இந்த விஷயம் தாலி பிரித்து கோர்க்கும் விழாவின் போது தெரிந்தது என்றார். இதைக் கேட்டு கோமதி ஷாக் ஆனார்.

பாக்கியா, மீனா சொல்வதெல்லாம் பொய். நான் 80 பவுன் நகை போட்டது தான் உண்மை என்று வாதம் செய்து கொண்டிருந்தார். சரவணன், நாங்கள் உங்களிடம் வரதட்சனை கேட்டோமா? நகை போட சொன்னோமா? எதற்காக இப்படி பொய் சொல்கிறீர்கள் என்றார். இருந்தாலும் விடாமல் பாக்கியா, உண்மையாகவே நகை போட்டது போல விவாதம் செய்து கொண்டிருந்தார். அப்போது மீனா, இவர்கள் சொல்வது பொய். அதற்கு சாட்சி நானும் என் தங்கை ராஜி தான் என்றார். பின் போலீஸ் ராஜி-தங்கமயில் இருவரையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு வர சொன்னார்கள்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

பாக்கியா, தங்கமயிலுக்கு உடம்பு முடியல என்றார். ஆனால், போலீஸ் கேட்கவில்லை. பின் ராஜி-தங்கமயில் இருவரும் கிளம்பி போலீஸ் ஸ்டேஷன் வந்து விட்டார்கள். அப்போது தங்கமயில் இடம் பாக்கியம், நகை போட்டது உண்மைதான் என்று சொல். இல்லை என்றால் நாம் தான் மாட்டிக் கொள்வோம் என்றார். பின் தங்கமயில், 80 பவுன் நகை போட்டு வந்தது உண்மைதான் என்றார். மீனா-ராஜி இருவரும் மாற்றி மாற்றி தங்கமயிலை கேள்வி கேட்டார்கள். ஆனால், தங்கமயில் பொய் சொல்லிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் கோவப்பட்ட ராஜி, உங்களுக்கு மாமா மீது உண்மையான பாசம் இருந்தால் உண்மையை சொல்லுங்கள் என்றார். தங்கமயில் அமைதியாக இருந்தார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்று எபிசோட்டில் தங்கமயில், எனக்கு கல்யாணம் ஆகவேண்டும் என்றுதான் என்னுடைய அம்மா அப்பா இருவரும் இப்படி செய்து விட்டார்கள். எட்டு பவுன் தான் தங்கம். மீதி எல்லாம் கவரிங்
என்று உண்மையை உடைத்து விடுகிறார். இதைக் கேட்டு பாண்டியர் வீட்டில் உள்ள எல்லோரும் ஷாக் ஆகி இருக்கிறார்கள். பாக்கியம் ஏதேதோ பேசி சமாளிக்கிறார். உடனே போலீஸ், உங்கள் மகள் எல்லா உண்மையும் செய்ய சொல்லி விட்டார். எதுவாக இருந்தாலும் கோர்ட்டில் பார்த்துக் கொள்ளுங்கள். போலீஸ் நேரத்தை வீணடிக்காதீர்கள் என்று திட்டி அனுப்பி விடுகிறார்.

சீரியல் ட்ராக்:

வீட்டிற்கு வந்த பாண்டியன் குடும்பம் போலீஸ் ஸ்டேஷனில் நடந்ததை நினைத்து புலம்பி கொண்டிருக்கிறார்கள். மீனா, ராஜியின் மீது கோமதி பயங்கரமாக கோபப்படுகிறார். அந்த சமயம் பார்த்து
வீட்டிற்கு வந்த குழலி, பாக்கியம் குடும்பத்தை மோசமாக திட்டிக் கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் தங்கமயில் போலீஸ் ஸ்டேஷனில் உண்மையை சொன்னதால் கோபப்பட்ட பாக்கியம் அவரை பயங்கரமாக திட்டிக் கொண்டிருக்கிறார். அதோடு வீட்டை விட்டு வெளியே போக சொல்லி தள்ளுகிறார்.

behindtalkies AMP · Quick view
View full