பெண்களிடம் ஆண் ஆதிக்கத்தை செலுத்தும் தங்கராஜ், கொந்தளிக்கும் கோமதி - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் கதிர், அதை நினைத்து ரொம்பவே வருத்தப்பட்டார் . பின் மலர் குடும்பம் எல்லோருமே விளையாடி முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார்கள். வழக்கம்போல மாமியார், மலரை வேலை வாங்கிக் கொண்டிருந்தார். அதை பார்த்து கோமதி கடுப்பாகி எழுந்து சென்றார். இன்னொரு பக்கம் கதிர் மாத்திரை வாங்குவதற்காக வெளியே வந்து கொண்டிருந்தார். அப்போது ஒரு பைகாரன் அவர் மீது மோதி கீழே விழுதார். இதனால் அந்த பைக் காரனுக்கும் கதிருக்கும் இடையே சண்டை நடக்கிறது. அந்த இடத்திற்கு வந்த சுரேஷ், கதிருக்கு சப்போர்ட் செய்து பேசி அவரை அனுப்பி வைத்தார். ராஜியின் கணவர் தான் கதிர் என்று சுரேஷுக்கு தெரியாது.
மலர் வீட்டில் எல்லோருமே ஜாலியாக பேசி கார்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள். நல்லவேளை அந்த நேரத்தில் மலரின் மாமியார் இல்லை. அதனால் எல்லோருமே சந்தோஷமாக இருந்தார்கள். இன்னொரு பக்கம் முத்துவேலுக்கு நல்லபடியாக ஆபரேஷன் முடிந்து விடுகிறது. இருந்தாலும் இன்னும் சில ஆபரேஷன்கள் இருப்பதால் முத்துவேல் கொஞ்சம் பயப்பட்டார். கதிர், அவருக்கு ஆறுதல் சொல்லி சமாதானம் செய்தார். பின் முத்துவேல்- கதிர் இருவருமே தங்களுடைய குடும்பங்களை பற்றி பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டு சந்தோஷப்பட்டார்கள். இன்னொரு பக்கம் சக்திவேல், கதிர்- முத்துவேலை பற்றி தவறாக பேசி இருந்தார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
அதோடு கதிருக்கு அண்ணன் பணம் அனுப்பி இருக்கிறார். என்ன நடக்கிறது? என்றார். இதனால் கோபப்பட்ட மாரி, என்னுடைய கணவரைப் பற்றியும் தெரியும் கதிரை பற்றியும் தெரியும். நீங்கள் தேவையில்லாமல் இருவரையும் பேசாதீர்கள். அப்படியே அவர் பணம் கொடுத்திருந்தாலும் அதில் உங்களுக்கு என்ன பிரச்சனை என்றார். இன்னொரு பக்கம் டூர் போனதை பற்றி ரேவதியிடம் மலர் போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது தங்கராஜை பற்றி கிண்டல் அடித்து ரேவதி பேசி இருந்தார். இது எல்லாம் கவனித்த தங்கராஜ் பயங்கரமாக கோவப்பட்டு ரேவதி இடம் சண்டை போட்டார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் தங்கராஜ்- ரேவதி இருவரையும் கோமதி சாப்பிட வீட்டிற்கு அழைத்திருக்கிறார். தடபுடலாக கோமதி விருந்து ஏற்பாடு செய்கிறார். எல்லா மருமகள்களுமே கோமதிக்கு உதவி செய்கிறார்கள். அதை பார்த்து மலரின் மாமியாருக்கு கோபம் தான் வருகிறது. சாப்பாடு ரெடியான உடன் எல்லோருக்குமே கோமதி பரிமாறுகிறார். அதை சாப்பிட்டு பார்த்து தங்கராஜ் வாயடைத்து போகிறார். மலரின் மாமனார், மாமியார் இருவருமே சமையலை பாராட்டுகிறார்கள். ரொம்ப அருமையாக இருக்கிறது என்று புகழ்ந்து தள்ளுகிறார்கள். கோமதிக்கு சந்தோஷமாக இருக்கிறது.
சீரியல் ட்ராக்:
அதற்குப்பின் வேலை எல்லாம் முடித்துவிட்டு கோமதி மருமகள்களுடன் சேர்ந்து விளையாடிக் கொண்டிருக்கிறார் அந்த சமயம் பார்த்து கரண்ட் ஆஃப் ஆகிவிடுகிறது. இதனால் எல்லோருமே ஜாலியாக கதை பேசி சிரித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது வெளியே இருந்த தங்கராஜ், வீட்டில் சிரிக்கும் சத்தத்தை கேட்டு உள்ளே வருகிறார். அப்போது ஆண்களை விட பெண்கள்தான் சிறந்தவர்கள் என்பது போல கோமதி, மதி இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இதை கேட்டு தங்கராஜிக்கு கோபம் வருகிறது. பின் தங்கராஜ், நீங்கள் எப்படி ஆண்களை கேவலமாக பேசலாம் என்று வழக்கம்போல தன்னுடைய ஆணாதிக்கத்தை காண்பிக்கிறார். வீட்டில் உள்ள பெண்கள் எதுவும் பேச முடியாமல் அமைதியாக இருக்கிறார்கள். இதை எல்லாம் பார்த்து கோமதிக்கு கோபம் தான் வருகிறது.