வடிவு சொன்ன வார்த்தையால் அசிங்கப்பட்ட சக்திவேல், பாண்டியன் சொன்ன வார்த்தை - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

சக்திவேலை அசிங்கப்படுத்திய வடிவு

By subhashini · 8/6/2026

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து கதிரை வீட்டிற்கு அழைத்து வந்தார்கள். கோமதி, ராஜி இருவரும் அழுதார்கள். அந்த சமயம் பார்த்து சக்திவேல், குமாரை அழைத்து வந்தார். குமாரை பார்த்து கோமதி கொந்தளித்தார். மொத்த பாண்டியன் குடும்பமே குமாரின் மீது சீறுகிறார்கள். சக்திவேல் எவ்வளவு தடுத்தும் பார்த்தார். இருந்தாலும் யாரும் கேட்கவில்லை. குமார்- சக்திவேலை வெளுத்து வாங்கினார்கள். அதற்குப்பின் அப்பத்தா, சக்தி வேலையும் குமாரையும் திட்டிக் கொண்டிருந்தார்.

பழனி, காந்திமதி எல்லோருமே சக்திவேல்- குமார் செய்த வேலையை நினைத்து திட்டிக் கொண்டிருந்தார்கள். மொத்த குடும்பமே குமாரால் உடைந்து போய் நிற்கிறது. சக்திவேலால் எதுவும் பேச முடியாமல் அமைதியாக இருந்தார். இன்னொரு பக்கம் ஹாஸ்பிடலில் வடிவு, முத்து வேலை கவனித்துக் கொண்டிருந்தார். அப்போது கதிர்- ராஜி இருவரும் ஹாஸ்பிடல் வந்தார்கள். கதிரை பார்த்தவுடன் வடிவு- முத்துவேல் இருவருமே மாறி மாறி மன்னிப்பு கேட்டார்கள். கதிருக்கு ரொம்பவே தர்ம சங்கடமாக இருக்கிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

பின் எல்லோரிடமும் சந்தோஷமாக கதிர் பேசிக் கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் கோமதி, சரவணன் அஞ்சலியுடன் பேசுவதை பற்றி பாண்டியனிடம் சொல்லிக் கொண்டிருந்தார். சரவணன், நாங்கள் நட்பாக தான் பேசுகிறோம் என்றார். கோமதி, எதுவாக இருந்தாலும் விவாகரத்து கேஸ் முடியும் வரை எதுவும் பண்ணாதே. உனக்கு குழந்தை பிறப்பதற்கு போகிறது. தயவுசெய்து குழந்தை பற்றியும் மயில் பற்றி யோசி என்றார். சரவணன், எனக்கு எல்லாம் தெரியும். எனக்கு அறிவுரை எல்லாம் சொல்ல தேவையில்லை என்று அவமரியாதையாக கோமதி இடம் பேசிவிட்டு சென்றார். இதையெல்லாம் பார்த்து பாண்டியன் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் பாண்டியன், கோமதி இருவரும் முத்துவேலை பார்ப்பதற்காக ஹாஸ்பிடலுக்கு வந்திருக்கிறார்கள். முத்துவேலிடம் நலம் விசாரித்துவிட்டு பாண்டியன்-கோமதி இருவரும் வெளியே வருகிறார்கள். இதை பார்த்து சக்திவேல் கோபப்படுகிறார். பின் தன் அண்ணனை சந்தித்த சக்திவேல் மன்னிப்பு கேட்டு பேசுகிறார். அதோடு பாண்டியன் குடும்பத்துடன் சேர்ந்து விட்டீர்களா? என்றெல்லாம் கேட்கிறார். வடிவு, உங்கள் பங்குக்கும் ஏதாவது செய்யுங்கள் என்று கோபமாக பேசுகிறார். முத்துவேல், அதெல்லாம் ஒன்றும் இல்லை. நீ எதை போட்டும் குழப்பிக் கொள்ளாதே வீட்டுக்கு போ என்று சொல்கிறார். சக்திவேல் தன்னுடைய அண்ணனிடம் எமோஷனலாக அழுது மன்னிப்பு கேட்டு அங்கிருந்து செல்கிறார்.

சீரியல் ட்ராக்:

இன்னொரு பக்கம் கார்த்திகேயன், தன்னுடைய புது பொருட்களை எல்லாம் மீண்டும் பாண்டியன் கடைக்கு கொண்டு வந்து வைக்கிறார். அந்த சமயம் பார்த்து அரசி அங்கு வருகிறார். அரசி இடம் சகஜமாக கார்த்திகேயன் பேசுகிறார். பாண்டியனுக்கு ஒன்றுமே புரியவில்லை. பின் கார்த்திகேயன் கிளம்பியவுடன் பாண்டியன் விசாரிக்கிறார். அரசி, நடந்ததை சொல்கிறார். அதற்குப்பின் தங்கமயில், மீனாவிற்கு ஃபோன் செய்து கதிர் விஷயத்தை பற்றி கேட்டு விசாரிக்கிறார். மீனாவுமே நடந்ததை எல்லாம் சொல்கிறார். அதற்குப்பின் மீனா, ஹாஸ்பிடலுக்கு செக்கு போகும் விஷயத்தை கேட்கிறார். தங்கமயில், ஹாஸ்பிடலுக்கு போகணும். நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்கிறார். இதை எல்லாம் கோமதி கேட்டு விடுகிறார்

behindtalkies AMP · Quick view
View full