லஞ்ச பணத்தை வைத்து ரவி போட்ட மாஸ்டர் பிளான், செந்திலின் பித்தலாட்டம் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

லஞ்ச பணத்தை வைத்து ரவி போட்ட மாஸ்டர் பிளான்

By subhashini · 23/6/2026

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் சுகன்யா, அரசியை குமாருக்கு திருமணம் செய்து வைக்கலாம் என்றார். இதை கேட்டு முத்துவேல் எல்லோருமே ஷாக் ஆனார்கள். பாண்டியன், தன் மகனின் வாழ்க்கை நினைத்து ரொம்ப எமோஷனலாக வருத்தப்பட்டு கொண்டிருந்தார். அப்போது வந்த பழனி, என்ன மாமா? என்று விசாரித்தார். பாண்டியன், என் மகன் ஒரு பெண்ணை காதலிக்கிறார் என்ற போது வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். நானாக பார்த்த கல்யாணமும் சரியில்லை. என் மகன் ரொம்பவே மனமுடைந்து போயிருந்தார். நான் நல்ல அப்பாவே இல்லை என்று வருத்தப்பட்டு பேசி இருந்தார். இது எல்லாம் கேட்டு சரவணன் அழுதார்.

தங்கமயில் வேலைக்கு தயாராகி கிளம்புகிறார். அப்போது பாக்கியம், இப்படி அமைதியாக இருந்தால் அவன் வேறு ஒரு திருமணம் செய்து கொண்டு சென்று விடுவான். நீ குழந்தையை எப்படி வளர்ப்பாய்? என்றெல்லாம் கேட்கிறார். தங்கமயில், நான் விவாகரத்து கொடுப்பதில் உறுதியாக இருக்கிறேன். என் குழந்தையை நான் பார்த்துக் கொள்கிறேன். இதைப் பற்றி நீங்கள் கவலைப்பட தேவையில்லை என்றெல்லாம் தன்னுடைய அம்மாவிடம் சண்டை போட்டுவிட்டு கிளம்புகிறார். இன்னொரு பக்கம் சரவணன், கதிரை அழைத்துக் கொண்டு அஞ்சலியின் வீட்டிற்கு செல்கிறார். சரவணன் பார்த்தவுடன் அஞ்சலியின் அப்பா, அம்மா கோபப்படுகிறார்கள்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

பின் சரவணன், அஞ்சலியிடமும் அவருடைய பெற்றோர்களிடமும் மன்னிப்பு கேட்டார். அப்போது சரவணன், தன்னுடைய வாழ்க்கையில் நடந்ததை பற்றியும் அஞ்சலியை சந்தித்த விதத்தை எல்லாம் சொல்லி எமோஷனலாக பேசி இருந்தார். அதைக் கேட்டு அஞ்சலி அழுதார். இன்னொரு பக்கம் செந்தில் தான் வாங்கிய லஞ்சப் பணத்தை பீரோவில் வைத்து கொண்டிருந்தார். அதை மீனா கவனித்து விட்டார். மீனா, என்ன பணம்? எப்படி வந்தது? என்றெல்லாம் கேட்டார். செந்தில் ஏதேதோ சொல்லி அங்கிருந்து கிளம்பி விட்டார்.

இன்றைய எபிசோட்:

இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் பழனி, சுகன்யா இருவரும் கோமதி வீட்டுக்கு வந்திருக்கிறார்கள். அப்போது கோமதி, சரவணன் நினைத்து ரொம்பவே வருத்தப்பட்டு பேசுகிறார். பழனியும் ஆறுதல் சொல்கிறார். இன்னொரு பக்கம் மீனா, தன்னுடைய கணவர் லஞ்சம் வாங்குகிறாரா? அந்த பணம் எப்படி வந்தது? என்று நினைத்து கவலையில் இருக்கிறார். என்ன செய்வது என்று புரியாமல் மீனா தவிக்கிறார். இன்னொரு பக்கம் செந்தில், தன்னுடைய மாமனார் ரவியை சந்தித்து வீட்டில் நடந்ததை எல்லாம் சொல்கிறார். அதற்கு ரவி, அதெல்லாம் ஒன்றும் இல்லை.

சீரியல் ட்ராக்:

நீங்கள் 10 லட்சம் கட்டிய லஞ்சத்தை எப்படி எடுக்க முடியும். பணத்தை வீட்டில் வைக்காதீர்கள். என்னிடம் கொண்டு வந்து கொடுங்கள். அதை பொருளாகவும் மனையாகவும் வாங்கிவிடலாம் என்றெல்லாம் சொல்கிறார். செந்திலுமே அந்த பணத்தை வீட்டிற்கு சென்று எடுத்து வந்து ரவி இடம் கொடுத்து விடுகிறார். ரவி, இனிமேல் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்கிறார். இன்னொரு பக்கம் கதிர், ராஜி இருவரும் நடந்து வந்து கொண்டிருக்கிறார்கள். அப்போது கதிர், சரவணனின் நிலைமையை நினைத்து எமோஷனலாக பேசுகிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full