கடையில் ராஜி, மீனா செய்த செயலால் வருத்தப்படும் தங்கமயில், அதிர்ச்சியில் செந்தில்-பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 16/9/2024

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” சீரியலில் கடந்த வாரம் மீனா மன்னிப்பு கேட்டும் செந்தில் மனம் இறங்கவில்லை. மறுநாள் காலையில் மீனா தன்னுடைய மாமனாரிடம் பேச, அவர் முகம் கொடுத்து கூட பேசாததால் வருத்தப்பட்டு கொண்டே சென்றார். பின் பாண்டியன் வருவதை பார்த்து ராஜி அந்த இடத்திலிருந்து கிளம்பி விட்டார். இதை கவனித்த கோமதி, பாண்டியன் இடம் பேச அவரும் தான் செய்த தவறை உணர்ந்தார். பின் கடைக்கு வந்த மீனா, நான் செய்தது தவறுதான். மன்னித்து விடுங்கள் என்று ரொம்ப வருத்தப்பட்டு அழ, பாண்டியன் மனமும் மாறி மீனாவை மன்னித்து விட்டார்.

வீட்டில் தன்னுடைய கணவரின் பிறந்தநாளை குறித்து கோமதி அவரின் தம்பியிடம் பேசி இருந்தார். இதைக் கேட்ட தங்கமயில், மீனா- ராஜி இடம் சொல்லி இருந்தார். பின் வீட்டிற்கு வந்த பாண்டியன், ராஜி- மீனா என்று பெயரை சொன்னவுடன் இருவருமே சந்தோஷப்பட்டு வெளியே வந்தார்கள். பின் வாங்கி தந்த தின்பண்டத்தை பாண்டியன் கொடுத்தார். இதை பார்த்து செந்தில்- கதிர் எதுவுமே பேசாமல் அமைதியாக இருந்தார்கள். பின் ரூமில் செந்தில்- மீனா இடையே சண்டை நடக்க, கோபத்தில் மீனா தூங்க வெளியே வந்தார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

அப்போது செந்தில், மீனாவை தேடி மொட்டை மாடிக்கு வந்தார். அதை கவனித்த மீனா உள்ளுக்குள்ளே சந்தோஷப்பட்டார். மேலும், கதிர் தாழ்ப்பாள் கூட போடாமல் குளிக்க, அப்போது உள்ளே சென்ற ராஜி, கதிரைப் பார்த்து கத்தி இருந்தார். பின் ரூமில் இதைப்பற்றி இருவருமே மாத்தி மாத்தி பேசி சண்டை போட்டுக் கொண்டார்கள். அதற்குப் பின் மீனா, தங்கமயில், ராஜி மூவருமே தன்னுடைய மாமனாரின் பிறந்த நாளுக்காக என்ன வாங்கலாம் என்று யோசனை செய்தார்கள்.

சீரியல் கதை:

கடைசியில் மூவரும் ரெடி ஆகி வெளியே கிளம்ப பார்த்தார்கள். உடனே பாண்டியன், எங்கே? என்று கேட்டதற்கு மூவருமே ஒவ்வொரு பதிலை சொல்லி உளறுகிறார்கள். பின் தங்கமயில் வீட்டுக்கு போகிறோம் என்று ஒரு முடிவுக்கு வந்தார்கள். பாண்டியனும், அம்மாவை பார்க்க போகும் போது பழம், ஸ்வீட் எல்லாம் வாங்கிக் கொண்டு போ என்று சொன்னவுடன் நிறைய பணம் தருவார் என்று தங்கமயில் எதிர்பார்த்தார். ஆனால், அவர் வெறும் 200 ரூபாய் கொடுத்து அனுப்பி இருந்தார்.

இன்றைய எபிசோட்:

இந்த நிலையில் இன்றைய எபிசோடில் மீனா, தங்கமயில், ராஜி மூவருமே தன்னுடைய மாமனாருக்கு துணி எடுக்க ஜவுளிக்கடைக்கு போகிறார்கள். அங்கு துணி எல்லாம் எடுத்து விட்டு பில் கொடுக்க மீனா வருகிறார். உடனே ராஜி தடுத்து கொடுக்கப் போகிறார். ஆனால், தன்னிடம் பணம் இல்லை என்று தங்கமயில் வருத்தப்படுகிறார். கடைசியில் மீனா பில் கொடுத்தார். இதற்கிடையில் மீனா, செந்திலுக்கு நிறைய முறை போன் செய்து கொண்டே இருந்தார். ஆனால், செந்தில் கண்டுகொள்ளவிலை.

சீரியல் ட்ராக்:

உடனே மீனா, இதுதான் நீங்கள் என்னிடம் பேசுவது கடைசி என்று மெசேஜ் அனுப்பி இருந்தார். இதை பார்த்து செந்தில் அதிர்ச்சி ஆனார். இன்னொரு பக்கம் மூவரும் நல்ல ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த முறை நான் பில் கொடுக்கிறேன் என்று ராஜி கொடுக்கிறார். ஆனால், தங்கமயில் பணம் இல்லாததை நினைத்து வருத்தப்பட்டு இருக்கிறார் இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full