பிறந்தநாளுக்கு போக நினைக்கும் கோமதி, கோபத்தில் சக்திவேல் சொன்னது - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 16/10/2025

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் செந்தில், இது கூட செய்ய முடியாதா என்றெல்லாம் பேசி இருந்தார். பின் செந்தில், யாரிடமும் கேட்காமல் பாண்டியன் கொடுத்த பணத்தை வைத்து வீட்டிற்கு தேவையான எல்லா பொருள்களையுமே வாங்கி போட்டார். இதையெல்லாம் பார்த்து மீனாவிற்கு பயங்கர கோபம் வந்தது. இன்னொரு பக்கம் கோமதி வருவதை பார்த்த குமார், அவரிடம் பேசிய முயற்சித்தார். ஆனால், கோமதி சரியாக பேசவில்லை திட்டி அனுப்பி விட்டார். அதற்கு பின் வீட்டில் எல்லோருமே சாப்பிட்டு கொண்டிருந்தார்கள். கோமதி, மீனாவை நினைத்துக் கொண்டிருந்தார்.

மீனாவை பார்த்து வீட்டில் உள்ள எல்லாருமே சந்தோஷப்பட்டார்கள். அப்போது மீனா, சீக்கிரமாகவே வீட்டிற்கு வந்து விடுவோம், கவலைப்படாதீர்கள் என்றெல்லாம் சொல்வதால் கோமதி சந்தோஷப்பட்டார். அதற்குப்பின் ராஜி-மீனா இருவரும் பேசிக் கொண்டு வந்தார்கள். மீனா, எனக்கு அங்கு பிடிக்கவே இல்லை என்று நடந்ததை சொன்னார். இதனால் ராஜி வருத்தப்பட்டார். அந்த சமயம் போன் செய்த செந்தில், எங்கு இருக்கிறாய்? சமைக்கவில்லையா? என்றார். அதற்கு மீனா, நான் கிளம்பி வந்து விட்டேன். சாப்பாடு செய்யவில்லை. நான் அத்தை வீட்டில் சாப்பிட்டு விட்டேன் என்று சொல்லி ஃபோனை வைத்து விட்டார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

இன்னொரு பக்கம் கடையில் சரவணன் வியாபாரம் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது பழனியின் காலில் அடிபட்டு விடுவதால் அவரை சரவணன், சாரில் உட்கார்ந்து இருந்த மாணிக்கத்தை எழுப்பி உட்கார வைத்தார். இதனால் தங்கமயிலுக்கு கடுப்பானது. பின் கொஞ்ச நேரம் கழித்து தங்கமயில், எனக்கு கால் வலிக்கிறது. சாரில் இருந்து எழுங்கள் என்று சொல்லி உட்கார்ந்து கொண்டார். இதையெல்லாம் பார்த்து சரவணனுக்கு பயங்கர கோபம் வந்தது. உடனே பழனி, ஒன்னும் பிரச்சினை இல்லை. நான் வீட்டிற்கு போகிறேன் என்று சென்று விட்டார். வீட்டில் பழனிக்கு, சுகன்யா மருந்து போட்டுக் கொண்டிருந்தார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் காந்திமதியின் 75 வது பிறந்த நாளை பற்றி கோமதி பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது கதிர், கோவிலில் நடப்பதால் எல்லோருமே போகலாம். நீங்கள் அப்பாவிடம் மட்டும் அனுமதி வாங்குங்கள் என்று சொல்கிறார். இதையெல்லாம் கேட்ட சுகன்யா, முத்துவேல் வீட்டிற்கு சென்று நடந்ததை சொல்கிறார். உடனே கோபத்தில் சக்திவேல், அவர்களை யார் கூப்பிட்டது? வந்தால் கலவரமே நடக்கும் என்றெல்லாம் சொல்கிறார். காந்திமதி, எந்த பிரச்சினையும் செய்யாமல் இரண்டு குடும்பமும் சேர்ந்து நடத்தினால் இந்த கொண்டாட்டத்தை நான் ஏற்றுக்கொள்வேன். இல்லை என்றால் எந்த கொண்டாட்டமும் வேண்டாம் என்று சொல்லிவிட்டு செல்கிறார்.

சீரியல் ட்ராக்:

சக்திவேல், பாண்டியன் குடும்பம் வந்தால் கோவிலிலேயே வெட்டுவேன் என்றெல்லாம் ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் வீட்டில் போட்டது போட்டபடியே இருக்கிறது என்று செந்தில் கோபப்பட்டு சண்டை வாங்கினார். கோபத்தில் மீனா, நானா வீட்டிற்கு இந்த வீட்டிற்கு வரவேண்டும் என்று ஆசைப்பட்டேன். நீங்கள் தான் செய்யணும் என்று திட்டி விட்டு செல்கிறார். பின் செந்தில், தன்னால் முடிந்த அளவுக்கு வேலை செய்துவிட்டு ஹோட்டலில் சாப்பாடு வாங்கிட்டு வரப் போகிறார். அந்த சமயம் பார்த்து கோமதி போன் செய்து மீனாவிடம் விசாரிக்கிறார். அப்போது மீனா, எமோஷனலாக பேசுகிறார். கோமதி, கண்கலங்கி ஆறுதல் சொல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full