பழனியை அசிங்கப்படுத்தும் சுகன்யா, கோபத்தில் பாண்டியன் சொன்னது - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் சுகன்யா ரூமில் அழுது கொண்டிருப்பது போல் டிராமா செய்து கொண்டிருந்தார். அப்போது பழனி, நீ மீனாவை தப்பாக புரிந்து இருந்தார். அவர் அப்படி பேச மாட்டார்
என்று சொன்னவுடன் சுகன்யாவுக்கு பயங்கர கோபம் வந்தது. பின் அவர், மீனா மேல பாசம் ஓவராக இருக்கிறது. உனக்கும் அவளுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா என்று ரொம்ப மோசமாக பேசி இருந்தார். இதனால் பழனி கோபப்பட்டு சுகன்யாவை திட்டி விட்டு சென்று விட்டார். இன்னொரு பக்கம் பாண்டியன், முத்து வேலை சந்தித்து குமாரை அடக்கி வையுங்கள், இல்லை என்றால் நான் அடக்குவேன் என்று மிரட்டி விட்டு சென்றார்.
இதனால் ஆத்திரத்தில் வீட்டிற்கு வந்த முத்துவேல், குமாரை அடித்து எதற்காக அரசியை பார்க்க போனாய்? என்று கேட்க, அவர் ஏதேதோ காரணம் சொல்லி சமாளித்தார். இருந்தாலுமே, முத்துவேல் ஏற்றுக்கொள்ளவில்லை. இனியும் போய் அரசியை பார்த்தால் வீட்டை விட்டு துரத்தி விடுவேன் என்று சொன்னார். ஆனால், சக்திவேல் அதை கண்டுகொள்ளாமல் தன் மகனுக்கு கொம்பு சீவி விடுகிறார். நீ எப்படியாவது அந்த அரசியை கல்யாணம் செய்து இந்த வீட்டுக்கு கொண்டு கூட்டிட்டு வா, நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொன்னார். பின் வீட்டிற்கு வந்த பாண்டியனிடம் சுகன்யா அழுது கொண்டே மீனா பேசியதை சொன்னார். பின் மீனாவிடம் பாண்டியன் கோபமாக விசாரித்தார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
நேற்று எபிசோட்டில் செந்தில், காலேஜில் நடந்ததை பற்றி சொல்ல வந்தார். உடனே மீனா, செந்தில் சொல்ல வருவதை தடுத்து விட்டார். ஆனால், பாண்டியன் என்ன நடந்தது? என்று தெரியாமல் மீனாவை திட்டி விட்டு சென்றார். அதற்குப்பின் மீனா- செந்தில் இருவருமே இந்த விஷயத்தை நாம் பொறுமையாக தான் கையாள வேண்டும். இதைப் பற்றி சித்தப்பாவிடம் சொல்லலாம் என்று பழனியிடம் பேச வந்தார்கள். அப்போது பழனி, எனக்கு உன்னை பற்றி தெரியுமா மீனா. நான் எதுவும் தவறாக நினைத்துக் கொள்ளவில்லை என்று சொன்னார்.
நேற்று எபிசோட்:
உடனே மீனா, சுகன்யா தான் கல்லூரிக்கு குமாரை வர வைத்தார். இதற்கு முன்பே குமாரை திருமணம் செய்து கொள் என்றெல்லாம் அரசிடம் பேசி இருந்தார். அரசிக்கு தேவையில்லாமல் சுகன்யா சொல்லி கொடுத்தார். இதனால் பழனிக்கு பயங்கர கோபம் வருகிறது. பின் இதைப்பற்றி அவர் சுகன்யாவிடம் பேசுகிறார். உடனே சுகன்யா, இப்போதுதான் உனக்கு ஞானம் பிறந்ததா? யார் சொல்லி இப்படியெல்லாம் பேசுகிறார்? என்று மீனாவையும் பழனியையும் சேர்த்து வைத்து ரொம்ப மோசமாக பேசி இருந்தார். இதனால் கோபப்பட்ட பழனி, சுகன்யா கன்னத்தில் அடித்து கழுத்தை பிடிக்கப் போனார். கோபத்தில் சுகன்யா அழுது டிராமா செய்தார். பாண்டியன்- கோமதி இருவருமே பதறி இருந்தார்கள்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சுகன்யா, பயங்கரமாக கத்தி ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருக்கிறார். பாண்டியன் குடும்பம் எல்லோருமே கதவை திட்டுகிறார்கள். பின் கதவை திறந்த பழனி, ஒன்னும் இல்லை. சும்மா பேசிக்கொண்டிருந்தோம் என்றார். உடனே சுகன்யா, ஒரு பெண்ணிடம் எப்படி நடந்து கொள்வது என்று சொல்லக்கூடாதா? நான் அவர் பொண்டாட்டி தான். இருந்தாலும் என் இடம் தவறாக நடந்து கொள்வதா? என்று மோசமான பழியை பழனி மீது போடுகிறார். இதைக் கேட்டவுடன் வீட்டில் எல்லோருமே ஷாக் ஆகிறார்கள்.
சீரியல் ட்ராக்:
பின் பாண்டியன், பழனியை திட்டிவிட்டு செல்கிறார். பழனிக்கு என்ன சொல்வதென்று தெரியாமல் அந்த இடத்தில் இருந்து வெளியே சென்று விடுகிறார். பின் சரவணன், பழனிக்கு ஆறுதல் சொல்கிறார். ஆனால், பழனியால் எதுவுமே பேச முடியவில்லை. வழக்கம் போல சுகன்யா எல்லோரிடமும் நடித்து நாடகம் போட்டுக் கொண்டிருக்கிறார். இதையெல்லாம் பார்த்து மீனாவிற்கு இன்னும் சந்தேகம் தான் அதிகமாகின்றது. பின் ராஜியிடம் இதைப் பற்றி பேசுகிறார். அப்போது மீனா, அரசி விஷயத்திலும் தேவையில்லாமல் பிரச்சனை செய்தது சுகன்யா தான். இப்போது சித்தப்பா விஷயத்திலும் வீண்பழி போடுகிறார் என்கிறார். பின் வீட்டிற்கு வந்த பழனியிடம் கோமதி அறிவுரை சொல்கிறார். ஆனால், அவர் வேதனையில் அமைதியாக நிற்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.